பக்கங்கள்

28 ஏப்ரல் 2011

தமிழ் வெற்றியால் தெலுங்கில் கோ.

டைரக்டர் கேவி ஆனந்த் இயக்கத்தில், நடிகர் ஜீவா - நடிகை கார்த்திகா ஜோடி நடித்து தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கோ படத்தை தெலுங்கில் டப் செய்துள்ளனர். தமிழில் வெற்றி பெற்ற இப்படத்தை ஆந்திரபிரதேசத்திலும் வெளியிட்டு கல்லா கட்ட நினைத்த ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம், தெலுங்கு டப் படத்திற்கு ரங்கம் என பெயரிட்டுள்ளனர். ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஏற்கனவே டைரக்டர் கேவி ஆனந்த் இயக்கிய அயன் படம் ஆந்திராவிலும் வசூலை வாரி குவித்தது என்பதாலும், நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே தெலுங்கு ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்கள் என்பதாலும் கோ படம் தெலுங்கிலும் சாதிக்கும் என்று நம்புகிறது தயாரிப்பு தரப்பு!

24 ஏப்ரல் 2011

ஸ்ரீசாந்த் ரியா திருமணம் விரைவில்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், பிரபல நடிகை ரியா சென்-ஐ விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி உலககோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்ரீசாந்த். அதுவும் பைனல் போட்டியின் போது அவரும் விளையாடினார். இந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீசாந்த் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய எண்ணியுள்ளனர். இதற்காக தீவிர பெண் வேட்டையிலும் இறங்கியுள்ளனர் அவரது பெற்றோர். இதனிடையே ஒரு விளம்பர நிகழ்ச்சியின்போது ஸ்ரீசாந்தும், நடிகை ரியா சென்னும் சந்தித்து கொண்டனர். அப்போது இவர்களுக்குள் ஆரம்பமான நட்பு இப்போது காதலில் போய் முடிந்து இருக்கிறதாம். தற்போது ஸ்ரீசாந்த் வீட்டிலும் பெண் தேடி வருவதால், ரியாவையே திருமணம் செய்யலாம் என்ற முடிவில் ஸ்ரீசாந்த் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவலை ஸ்ரீசாந்த் மறுத்துள்ளார்.
நான் திருமணம் செய்யப்போவது உண்மை தான். ஆனால் ரியா சென்னை அல்ல. அவர் என்னுடைய நல்ல நண்பர். எங்களுக்குள் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறுகிறார் ஸ்ரீசாந்த். அதேபோல் ரியாவும், ஸ்ரீசாந்த் தன்னுடைய நண்பர் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே இந்தியாவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், பாலிவுட் நடிகை இஷா சர்வானியை திருமணம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

22 ஏப்ரல் 2011

காஞ்ச்சனாவின் கதை படமாகிறது.

தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஞ்சனா. தெலுங்கு,மலையாளம்கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் போன்றோருடன் நடித்து இருக்கிறார். சிவாஜியுடன் சிவந்த மண்படத்தில் “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என அவர் பாடி ஆடியது ரசிகர்களை ஈர்த்தது.
“சாந்தி நிலையம்”, “நான் ஏன் பிறந்தேன்”, “அதே கண்கள்”, “காதலிக்க நேரமில்லை” என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வசீகர அழகால் ரசிகர்களை உற்சாகப்படுத்திய காஞ்சனாவின் இன்னொரு புற வாழ்க்கை சோகம் நிறைந்தது. அவர் நடித்து சம்பாதித்த சொத்துக்களை உறவினர்கள் ஏமாற்றி பிடுங்கி விட்டனர். எல்லாவற்றையும் இழந்து வறுமைப் பிடியில் சிக்கினார்.
கர்நாடகாவில் ஒரு கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தன. கோர்ட்டு மூலம் சமீபத்தில் சில சொத்துக்களை மீட்டு திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்தார். விமான பணிப்பெண்ணாக இருந்து நடிகையாகி தற்போது ஏழ்மையில் கஷ்டப்படும் காஞ்சனாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார்.
இவர் ராஜ்கிரண் நடித்த “பகடை” படத்தை டைரக்டு செய்தவர். “மௌனம் பேசியதே”, “காதல் கிசுகிசு”, “குண்டக்க மண்டக்க” படங்களை தயாரித்த கேசவன் இப்படத்தை தயாரிப்பார் என தெரிகிறது. காஞ்சனா வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகளுடன் பேசி வருகின்றனர். சோனியா அகர்வாலிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது.

20 ஏப்ரல் 2011

போராளியில் திரிஷா.

இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து “போராளி” என்ற படம் தயாராகிறது. இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இவர் சுப்பிரமணியபுரம் ஹிட் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நாடோடிகள் படத்தில் நாயகனாக நடித்தார். போராளி படத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார்.
ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறை, விடுதலைப் புலிகள் போராட்டம் போன்றவை இப்படத்தில் காட்சிபடுத்தப்படுகின்றன. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்துக்கு நாயகி தேர்வு நடக்கிறது. முதலில் அஞ்சலியை முடிவு செய்தனர். ஆனால் நாயகி கேரக்டருக்கு திரிஷா பொருத்தமாக இருப்பார் என சமுத்திரக்கனி விருப்பப்படுவதாக கூறப்படுகிறது.
அதையடுத்து அஞ்சலியை நீக்கி விட்டு திரிஷாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது போராளி படத்தில் நடிக்க சசிகுமாரோ, சமுத்திரக்கனியோ இதுவரை என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை என்றார்.
திரிஷா தற்போது இரு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடிக்கிறார்.

17 ஏப்ரல் 2011

கோடிக்கும் மயங்கமாட்டேன்!

4கோடி ரூபாய் கொடுத்தாலும் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் ஆட மாட்டேன் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். சமீபத்தில் அம்மணியை விருந்து நிகழ்ச்சியொன்றில் ஆட ரூ.4 கோடி பேசி அழைத்துள்ளனர். ஆனால் தீபிகா முடியவே முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டாராம். இதுபற்றி அவர் கூறுகையில், நடிகைகள் பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று எதிர்பார்க்ககூடாது. லண்டனில் கோடீஸ்வரர் ஒருவர் வீட்டில் விருந்து நிகழ்ச்சியொன்றில் என்னை ஆட அழைத்தனர். அதற்கு ரூ.4 கோடி தருவதாக கூறினார்கள். தம்மரே தம் என்ற ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினால் போதும் என்றனர். நான் தமாஷ் செய்கிறார்கள் என்று நினைத்தேன். அதன்பிறகு கடிதம் அனுப்பியும் வற்புறுத்தினார்கள். ஒரு பாட்டுக்கு ஆட ரூ.4 கோடி தருவார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு நான் அந்த அழைப்பை நிராகரித்து விட்டேன். சினிமாதான் எனக்கு முக்கியம். அதில்தான் ஆடுவேன். பணத்துக்காக வீட்டு விருந்துக்கெல்லாம் ஆடமாட்டேன் என்று மறுத்து விட்டேன், என்றார்.

15 ஏப்ரல் 2011

திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்!

பிரபல பின்னணி பாடகி சித்ராவின் மகளுக்கு திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாடகி சித்ராவுக்கும் என்ஜினீயரான விஜயகிருஷ்ணர் என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 15 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 2002 ல் சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது நந்தனம் என்ற மலையாள படத்தில் சித்ரா பாடிய பாடலுக்கு கேரள அரசின் விருது கிடைத்தது. இதனால் குழந்தைக்கு நந்தனா என்ற பெயர் சூட்டினார். குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருந்தது. குடும்பத்துடன் அவர் சென்னை விருகம்பாக்கம் ஏ.ஆர்.கே.தெருவில் வசித்து வந்தார். சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நந்தனா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். ஏ.ஆர்.ரகுமான் வெளி நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் பங்கேற்பதற்காக சித்ரா தனது குழந்தையுடன் துபாய் சென்றார். அங்கு எமிரேட் ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார். வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நந்தனா குளிக்கச் சென்றாள். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். அக்கம் பக்கத்தினர் நந்தனாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்து விட்டது. நந்தனா உடலை பார்த்து சித்ரா கதறி அழுதார். பிரேத பரிசோதனைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இன்று மாலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு உடலைக் கொண்டு வந்தனர். இதையடுத்து திரையுலகை சேர்ந்தவர்கள் குழந்தையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

13 ஏப்ரல் 2011

தமிழ் ரசிகர்களின் விருப்ப நாயகியாவேன்!

தமிழ் ரசிகர்களுக்கு நான் புதுசு என்றாலும், அவர்களை திருப்திபடுத்துவது மிகவும் சாவலான விஷயம் என்றும், இருந்தாலும் அவர்களின் விருப்ப நாயகியாக மாறுவேன் என்று ஆணித்தரமாக கூறுகிறார் மலையாளத்தில் இருந்து இறக்குமதியாகி இருக்கும் மற்றுமொரு நடிகை நித்யா மேனன். தமிழ் நடிகைகளை காட்டிலும் பிற மாநிலங்களில் இருந்து வந்த நடிகைகள் தான் ஜொலிக்கின்றனர். அதிலும் கேரளாவில் இருந்து வரும் நடிகைகள் முன்னணி நடிகையாக இருக்கின்றனர். அந்தவகையில் கேரளாவில் இருந்து நித்யா மேனன் என்ற நடிகை தமிழுக்கு வந்திருக்கிறார். தமிழில் வருவதற்கு முன்னர் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து இருக்கிறார். இப்போது தமிழில் சத்யம் சினிமாஸ் தயாரிப்பில், ஜெயந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 180 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதில் சித்தார்த்துடன் ஜோடி போட்டு இருக்கிறார் நித்யா மேனன். தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாவது குறித்து நித்யா மேனன் கூறியதாவது, தமிழ் சினிமாவில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 180 படத்தின் கதையை கேட்டது மிகவும் பிடித்துவிட்டது. உடன் நடிக்க சம்மதித்து விட்டேன். படத்தில் நான் போட்டோ நிரூபராக நடித்திருக்கிறேன். உண்மையில் நான் போட்டோ நிரூபர் தான். ஆக‌வே இந்த வேடத்தில் நடிக்கும் போது கஷ்டமாக தெரியவில்லை. தமிழ் ரசிகர்களுக்கு நான் புதுசு. ரசிகர்களுக்கு ஏற்றவாறு அவர்களை திருப்தியளிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். ஆனால் இவை அனைத்தையும் நான் பூர்த்தி செய்து, அவர்களின் விருப்ப நாயகியாக நிச்சயம் வலம் வருவேன். இதுவரை நடித்த மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை காட்டிலும் தமிழில் நடிப்பது தான் மிகவும் பிடித்திருக்கிறது என்கிறார். ஏனென்று கேட்டால் தமிழில் தான் நல்ல படங்கள் எடுக்கப்படுகிறது. எனக்கு ஏற்ற கேரக்டரும் இங்குதான் கிடைக்கும் என்கிறார்.

11 ஏப்ரல் 2011

தொலைக்காட்சி நிகழ்வில் பரபரப்பு நாயகி பூனம்!

இந்திய அணி உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக வலம் வருவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் மாடல் அழகி பூனம் பாண்டே. இந்திய அணியும் உலக கோப்பை வென்று வரலாற்று சா‌தனை படைத்தது. உலகம் முழுவது உள்ள இந்தியர்கள் இந்த வெற்றியை கொண்டாடினர். இதனையடுத்து அனைவரின் பார்வையும் பூனம் பாண்டேவை நோக்கி திரும்பியது. இந்நிலையில் பூனமின் இந்த கருத்துக்கு சிவசேனா அமைப்பிடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பியதால் அமைதியானார் பூனம் பாண்டே. இதனிடையே தனியார் டி.வி., ஒன்றில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் ‌தோன்ற இருக்கிறார் பூனம் பாண்டே. இதனை அந்த டி.வி., நிறுவனமும் உறுதிபடுத்தி இருக்கிறது. விரைவில் டி.வி., நிகழ்ச்சியில் கலக்க இருக்கிறார் பூனம்.

09 ஏப்ரல் 2011

கவர்ச்சிக்கு தயாராகும் சுனேனா!

காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சுனேனா, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தும், முதல் படத்தில் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்போது பரத்துடன் திருத்தணி படத்தில் நடித்து வரும் அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழில் குடும்பப் பாங்கான பாத்திரங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கியுள்ளேன். இதுவரை எந்தப் படத்திலும் கவர்ச்சியாக நடித்ததி்‌ல்லை. அதற்காக நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். கிளாமரும் அழகாக இருக்க வேண்டும் என்‌பதே என் கருத்து. தமிழில் நடிப்பதற்கு முன் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்திருந்தேன். அதிலும் ஹோம்லியான கேரக்டர்தான். ஆனால் அந்த படத்தை சென்னையில் வெளியிட்டவர்கள், நான் கவர்ச்சி வேடத்தில் நடித்திருப்பதைப் போன்ற ஸ்டில்களை வெளியிட்டிருந்தார்கள். இதை பார்த்தபோது எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது. இது என் இமேஜை கெடுக்க நடந்த சதிதான். அவர்களுக்கு காலம் பதில் சொல்லும், என்று கூறியுள்ளார். தற்போது நடித்து வரும் திருத்தணியில் அம்மணிக்கு காமெடி கேரக்டராம். திருத்தணியைத் தொடர்ந்து கதிர்வேல் படம் ரீலிஸ் ஆகவிருக்கிறது. தமிழில் தனக்கு இருக்கும் நற்பெயறை கடைசி வரை காப்பாற்றுவேன், என்று சொல்லும் சுனேனா கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறார்.

07 ஏப்ரல் 2011

பிரபல நடிகை சுஜாதா காலமானார்!

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் பிரபலமான நடிகை ‌சுஜாதா உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று(06.04.11) கா‌லமானார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "அவள் ஒரு தொடர்கதை" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜாதா. 1968ல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 300 படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தமிழில் சிவாஜி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் சுஜாதா. இவரது நடிப்பில் வெளிவந்த அந்தமான் காதலி, அண்ணக்களி, அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், விதி உட்பட பல படங்கள் பிரபலமானவை. நடிகையாக நடிக்க ஆரம்பித்து பின்னர் அம்மா மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார். இந்நிலையில் சிறிதுகாலம் நடிக்காமல் இருந்து வந்த சுஜாதா கடைசியாக 2004ம் ஆண்டு அஜீத்தின் வரலாறு படத்தில் நடித்தார். அதன்பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டார் சுஜாதா. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை சுஜாதா சென்னையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சுஜாதாவின் உடல் நிலைமை மோசமடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவர் நேற்று(06.04.11) மரணம் அடைந்தார். மலையாளத்தை சேர்ந்தவரான சுஜாதா, 1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இலங்கையில் பிறந்தவர். இவருக்கு திவ்யா என்ற மகளும், ஷாஜித் என்ற மகனும் உள்ளனர். சுஜாதாவின் கணவர் ஜெயகர் தொழிலதிபராக இருக்கிறார். சுஜாதாவின் மறைவிற்கு பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துளள்னர்.

04 ஏப்ரல் 2011

மனிஷாவின் கிக் கதாபாத்திரம்!

பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா புதிய படமொன்றில் விலைமாதுவாக நடிக்கப் ‌போகிறார். வித்தியாசமான ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்கிறேன் பேர்வழியாக பாலிவுட்டில் பல நடிகைகள் வலம் வந்தாலும், மனிஷாவின் திறமைக்கு ஈடு மனிஷாவாகத்தான் இருக்க முடியும். பமபாய் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மனிஷா, உயிரே, இந்தியன், முதல்வன், ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 40 வயதாகும் அவர், நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக அறிவித்தார். இதையடுத்து மனிஷாவின் வயதுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற கேரக்டருடன் நடிகை தீப்தி நாவல் புதிய படமொன்றிற்காக அழைப்பு விடுத்தார். படத்தின் கதையை கேட்ட மனிஷா, இது ரொம்பவே சேலஞ்ஜிங்கான கேரக்டர். நான் கண்டிப்பாக செய்கிறேன், என்று கூறி ஓ.கே. சொல்லி விட்டாராம். அப்படியென்ன சேலஞ்சிங் கேரக்டர்? படத்தில் மனிஷா விலைமாதுவாக நடிக்கிறார். தோ பைசே கி தூப் சார் ஆனே கி பாரிஷ் என ‌பெயரிடப்பட்டிருக்கும் அந்த படம் ஒரு செக்ஸ் தொழிலாளியின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவமாம். கதைப்படி, தனது ஊனமுற்ற மகனுக்காக வாழும் மனிஷா, ஒரு காலகட்டத்தில் விலைமாதுவாக மாறிவிடுகிறார். ஓரின சேர்க்கை பழக்கமுள்ள ஆண் பாடலாசிரியரை தனது வாடிக்கையாளராக சந்திக்கிறார் மனிஷா. அது பின்னாளில் இந்த மூன்று பேருக்கும் இடையில் ஒரு அன்பு பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதை சுற்றித்தான் இக்கதை பின்னப்பட்டுள்ளது, என்கிறார் டைரக்டர் தீப்தி நாவல்.

02 ஏப்ரல் 2011

ஒரு பாட்டுக்கு ஆடும் கீர்த்தி.

ஏவிஎம் நிறுவனத்தின் முதல் இடம் படத்தில் நடிகை கீர்த்தி சாவ்லா ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். ஏவிஎம்மின் 175வது படம் முதல் இடம். மைனா விதார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கவிதா நாயர் நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாட்டுக்கு நடிகை கீர்த்தி சாவ்லா ஆடவிருக்கிறார். இதுபற்றி கீர்த்தி கூறுகையில், "ஒரு பாடல் என்றாலும், மீண்டும் பிஸியான நடிகையாக என்னை மாற்றும் அளவு முக்கியமான படம் இது. பெருமைக்குரிய ஏவிஎம் நிறுவனத்தில் நடிப்பதே பெரிய விஷயம்தானே, என்றார். முதல் இடம் படத்தில் யோகி தேவராஜ், வீரமணிதாசன், கிஷோர், பொன்னம்பலம், அப்புக்குட்டி மற்றும் இளவரசு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். முதல் இடம் படத்தின் சூட்டிங், தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. டைரக்டர் குமரன் இயக்கும் இப்படத்தை எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

29 மார்ச் 2011

கலங்கிப்போன அனுஷ்கா!

சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டால் கலங்கி போய் இருக்கிறார் நடிகை அனுஷ்கா. இதனிடையே இந்த ரெய்டிற்கு தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் ஒருவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. "அருந்ததீ" படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக வரத்தொடங்கியுள்ளார். குறுகிய காலத்தில் இந்த இடத்தை பிடித்த நடிகை அனுஷ்கா மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான கணக்கில் வராத சொத்துக்கள், நகைகள் மற்றும் ரொக்க பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் அனுஷ்கா, மன ஆறுதலுக்காக சில நாட்கள் பெங்களூருவில் தங்க முடிவெடுத்துள்ளார். இதனிடையே இந்த ரெய்டிற்கு தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் தான் காரணம் என்கிறார் அனுஷ்கா. விசாகப்பட்டிணம் கடற்கரை அருகே நிலம் வாங்க அந்த நடிகர் தான் தன்னை வற்புறுத்தியதாகவும், வாங்கும் போது பல பிரச்சனைகள் வந்ததாகவும் கூறுகிறார் அனுஷ்கார்.

27 மார்ச் 2011

மகாராஜாவின் நாயகி அஞ்சலி!

ஒரு கதாநாயகி என்றால் கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும். ஜிகினா டிரஸ்சில் ஹீரோவின் கனவில் நுழைந்து ஐஸ்லாந்தில் ஆட்டம் போட வேண்டும். ஈவ் டீசிங் பாடல் ஒன்றுக்கு முகம் கடுக்க மூவ்மென்ட் கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் தொடர்கிற இலக்கணத்தை மீறி வருகிற ஒரே நாயகி அஞ்சலி மட்டும்தான்! அவருக்கும் குரூப் டான்ஸ் பாடல்கள் மீதும், முழு நீள கமர்ஷியல் படங்கள் மீதும், அரை ஸ்கர்ட் மீதும் ஆசை வரும்தானே? அந்த ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறது மகாராஜா திரைப்படம். ஆனால் கமர்ஷியல் அம்சங்களோடு எதார்த்தத்தையும் மிகைப்படுத்தாமல் சொல்லியிருக்கிறாராம் புதுமுக இயக்குனர் டி.மனோகரன். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சில பாடல்களை திரையிட்டார்கள். முந்தைய தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் நடுவே இருக்கிற இடைவெளி பற்றி பேசுகிற படம் இது. என்னுடைய இருபத்தைந்து வருட சினிமா வாழ்க்கையில் நான் ரசித்து நடித்த படம் இது என்றார் நாசர். இப்படத்தின் நாயகனான சத்யா இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும், முதன் முறையாக ஒரு ஹீரோவாக முழுமையடைந்திருக்கிறார் என்று நம்ப வைத்தது அந்த பாடல் காட்சிகள். ட்யூன்களில் சதிராட்டம் போட்ட டி.இமானுக்கும் கூடை நிறைய பாராட்டுகள்!. சத்யாவை பார்க்கும் போது என் மகன் ஜெயம் ரவியை பார்க்கிற மாதிரியே இருக்கு. அவருக்கு பெரிய எதிர்காலம் அமையணும் என்று வாழ்த்தினார் விழாவில் பேசிய எடிட்டர் மோகன். ஒரு முன்னணி ஹீரோவின் அப்பா, தன் மகன் போலவே இருக்கிறார் என்று இன்னொரு ஹீரோவை வாழ்த்துவது அபூர்வம். இதை நினைத்து நாம் ஆச்சர்யப்படும் போதே, மேடையில் பேசிய அத்தனை பேரும் அதையே கூறினார்கள். சத்யாவை ஜெயம் ரவிக்கு தம்பியாக நடிக்க வைக்கும் எண்ணம் கூட இருக்கிறதாம் எடிட்டர் மோகனுக்கு. 'மகாராஜா' தானே அதையெல்லாம் முடிவு செய்ய வேண்டும்?

25 மார்ச் 2011

விவாகரத்து கோருகிறார் ஜோதி.

பத்து ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகை ஜோதிர்மயி. தலைநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிர்மயி. நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சினிமா நடிகை ஆகி விட்டாலும், அவர் நிஷாந்த் என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரை காதலித்து வந்தார். 10 ஆண்டுகளாக நீடித்த காதல் கடந்த ஆண்டு திருமணத்தில் முடிந்தது. திருமணமான புதிதில் புது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஜோதிர்மயி, தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். கணவர் சம்மதத்துடன் திரையில் தோன்றுவதாக கூறி வந்த ஜோதிர் மயிக்கும், கணவர் நிஷாந்துக்கும் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஜோதிர்மயி, கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்பநல கோர்ட்டில் ஜோதிர்மயி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

23 மார்ச் 2011

புகை பிடிப்பதுபோல் நடிக்கமாட்டேன்.

பாலிவுட்டில் நடிகர், நடிகைகள் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது புதிதல்ல.
இதுபோன்ற காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியும் படத்தின் கேரக்டருக்கு அது கட்டாயமாக இருக்கிறது என்பதே இயக்குனர்களின் கருத்து.
சமீபமாக பேஷன் என்ற படத்தில் கணக்கே இல்லாமல் சிகரெட்டுகளை ஊதித் தள்ளிய ப்ரியங்கா சோப்ரா அப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
தற்போது நடிகை தீபிகா படுகோனே தும்மர தும் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் புகை பிடித்தப்படி நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார் இயக்குனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இது பற்றி அவர் கூறும்போது புகை பிடிப்பது போல் நடிக்க விருப்பம் இல்லை. அது மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றார்.
இயக்குனர் ரோகன்சிப்பி கூறும்போது, தீபிகா படுகோனேவை புகை பிடிப்பதுபோல் நடிக்க கேட்டுக் கொண்டேன். அவர் முடியாது என்று மறுத்து விட்டார் என்றார்.
தீபிகா படுகோனே ரஜினியின் அடுத்தப் படமான ராணா படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

21 மார்ச் 2011

ஒன்பது பாடல்களுடன் மங்காத்தா.

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 50வது படம் மங்காத்தா. இப்படத்தில் அஜீத் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்தவிர அர்ஜூன், அஞ்சலி, லக்ஷமி ராய், பிரேம்ஜி அமரன், அஸ்வின், வைபவ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.
மங்காத்தா படம் அஜீத்தின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் ஒன்பது பாடல்களில் 6பாடல்களை கம்போசிங்கும், 3பாடல்கள் ரெக்கார்டும் செய்துவிட்டார் யுவன். யுவனின் முந்தைய படங்கள் போலவே இந்தபட பாடலும் ஹிட்டாகும் என்று ‌பேசப்படுகிறது.
இதனிடையே மே 1ம் தேதி, அஜீத் பிறந்தநாளன்று ரீலசாக இருந்த மங்காத்தா படம், ஜூன் மாதத்திற்கு தள்ளிபோனது ரசிகர்களை சிறிது வருத்தமடையச் செய்துள்ளது.

18 மார்ச் 2011

கமலுக்காக காத்திருக்கிறேன்.

கமலுக்காக காத்திருக்கிறேன் என்று பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கூறியிருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி நடிக்கிறார். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியை விட ஒரு வயது இளையவரான சோனாக்ஷி, ஏற்கனவே அளித்த பேட்டியொன்றில், வயது ‌வித்தியாசம் பெரிய விஷயமே இல்லை, என்று கூறினார்.
இந்நிலையில் அவர் அளித்திருக்கும் புதிய பேட்டியில், கமல்ஹாசனை பார்க்க ஆசையுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார். கமல்ஹாசனுடனான புதிய படத்தின் சூட்டிங் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் மிகப்பெரிய நடிகர். அவருடன் நடிப்பது பெருமையான விஷயம். அவரை இதுவரை நான் நேரில் பார்த்ததில்லை. அவருடன் நடிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், என்று கூறியிருக்கிறார் சோனாக்ஷி.
நடிகை சோனாக்ஷி தமிழில் கமல்ஹாசனுடன் புதிய படத்தில் கமிட் ஆகியிருந்தாலும் பாலிவுட்டில்தான் அதிக அளவில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியிருக்கிறார் அம்மணி.

16 மார்ச் 2011

அசின் நடித்த விளம்பரப்படத்தில் திரிஷா!

சினிமாவில் தான் நடிகர், நடிகையர் இடையே போட்டியென்றால் இப்‌போது விளம்பரங்களிலும் இந்த போட்டி அதிகமாகிவிட்டது. அதிலும் அசின், த்ரிஷா இடையேயான போட்டி சொல்லவே தேவையில்லை, அந்தளவிற்கு இருவருக்கும் கடுமையான போட்டி நடைபெறும். இதுவரை அசின் நடித்து வந்த விளம்பரம் ஒன்றில், இப்போது த்ரிஷா நடிக்க இருக்கிறார். இதனால் த்ரிஷா மீது மிகுந்த கடுப்பில் இருக்கிறார் அசின்.
பிரபல அழகு சாதன நிறுவனமான பேர்எவர் பேர்னஸ் க்ரீம் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை அசின் நடித்து வந்தார். இதற்காக பெருந்தொகையை அசின் சம்பளமாக பெற்று வந்தார். ஆனால் இப்போது திடீரென்று அந்த நிறுவனம் அசினை தூக்கிவிட்டு, அந்த இடத்தில் த்ரிஷாவை நியமித்துள்ளது. சிலதினங்களுக்கு முன்னர்தான் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் பேர்எவர் விளம்பரத்தில் அசினுக்கு பதிலாக த்ரிஷா தான் தோன்றுவார்.
இதுவரை சினிமாவில் மட்டுமே போட்டியாக வந்த த்ரிஷா, இப்போது விளம்பர படங்களிலும் போட்டியாக வந்துவிட்டார் என்று த்ரிஷா மீது கோபத்தில் இருக்கிறார் அசின்.

15 மார்ச் 2011

அழகும்,கம்பீரமும் கொண்ட அனுஷ்கா!

இன்றைய தேதியில் அதிக ஆஃபர் உள்ள நடிகை அனுஷ்கா. அவரைப் பற்றி வரும் வதந்திகளே இதற்கு சான்று.
விக்ரமுடன் நடித்துவரும் அனுஷ்கா அ‌‌ஜீத்தின் பில்லா 2-வில் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். கமல் படத்திலும் இவர்தான் ஹீரோயின் என்றார்கள். ஆனால் சோனா‌க்‌சி சின்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் செல்வராகவன்.
பொன்னியின் செல்வன் ச‌ரித்திரக் கதை. அதில் வரும் குந்தவை கேரக்டருக்கு அழகான கம்பீரமான பெண் தேவை. இன்டஸ்ட்‌ரியல் கம்பீரமும், கவர்ச்சியும் நிறைந்தவர் அனுஷ்காதானே. மணிரத்னம் அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

14 மார்ச் 2011

சிம்பு கேட்ட சோனம்கபூர்!

இந்தியில் சல்மான் கான் நடித்த தபாங் படம், தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் சல்மான் கேரக்டரில் சிம்பு நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சிம்புக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என்று பேசிய போது அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் சிம்பு.
தமிழில் பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான்மகான் அல்ல, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் இவர் அடுத்து இந்தியில் அஜய் தேவ்கனுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்தியில் சல்மான் கான், நடித்த தபாங் படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் ஹீரோவாக சிம்பு நடிக்க இருக்கிறார். சிம்புக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என்று சிம்புவிடம் பேசியிருக்கின்றனர். ஆனால் சிம்புவோ, இது பெரிய ப்ராஜெக்ட், இதற்கு மும்பையை சேர்ந்த நடிகை தான் பொருத்தமானவராக இருப்பார். ஆகவே காஜல் அகர்வால் வேண்டாம், அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை சோனம் கபூரை நடிக்க வைக்கலாம். இந்த கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே இப்படத்தை டைரக்டர் சரவணன் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த பொறுப்பை டைரக்டர் தரணி ஏற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

11 மார்ச் 2011

சிம்புவின் எவன்டி ஒன்ன பெத்தான்.

வானம் படத்துக்காக சிம்பு பாடி இருக்கும் 'எவன்டி ஒன்ன பெத்தான்' பாடல்தான் அடுத்து காதல் இளைஞர்களின் தேசிய கீதம் என்று சூடம் அடிக்கிறது அந்தப் பட யூனிட் . பாடலை எழுதியது கூட எஸ் டி ஆர் என்று பெயர் மாற்றியும் -- எல்லோராலும் சிம்பு என்ற அழைக்கப் படும் - சிம்புதான் (பின்ன, வேற என்ன சொல்றது) அந்த தைரியத்திலோ என்னவோ அந்த ஒரு பாட்டை மட்டும் வெளியிட அது எப் எம் மை உண்டு இல்லை பண்ணிக் கொண்டிருக்கிறது . பாடலை இந்தியிலும் எடுத்துள்ளனராம் (எண்ணமோ திட்டம் இருக்கு )
மற்ற பாடல்களின் வெளியீட்டு விழா மார்ச் பதினைந்து அன்று நடைபெறுகிறது (அப்ப அது எல்லாம் சுமாரான பாட்டு தானோ?.)
இதற்கிடையில் எல்லோரும் பாரட்டும்படியான ஒரு காரியத்தை செய்துள்ளார் வானம் பட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி . (இது அரசியல் நியூஸ் இல்லீங்கோ )
ஏ ஆர் ரகுமானை ஆஸ்கார் தமிழனாக அடையாளம் காட்டிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் நடித்த ரூபினா அலி என்ற குழந்தை நட்சத்திரத்தின் ( சரி .... இப்ப கொஞ்சம் வளந்துருச்சி !) வீடு.......அல்ல அல்ல குடிசை, மும்பை பாந்த்ரா பகுதியில் அண்மையில் தீப்பிடித்து எரிந்தது . படத்தில் நடித்ததற்காக ரூபினா அலிக்கு வழங்கப்பட்ட பல விருதுகள் கூட தீக்கிரையாயின .
அந்த குழந்தைக்கு ஐம்பதாயிரம் ரூபாய பண உதவி வழங்கியிருக்கிறார் தயாநிதி . வானம் பேருக்கு பொருத்தமான விஷயம் .
எரிந்த மனசு குளிரட்டும்!

10 மார்ச் 2011

சோனியா அகர்வால் மீண்டும் காதலில்!

நடிகை சோனியா அகர்வாலும் பிரபல கன்னட நடிகர் சுதீப்பும் மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இருவரும் கிட்டத்தட்ட இணைபிரியாத காதலர்களாக உலா வருகின்றனர்.
சமீபத்தில் பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் இருவரும் ஒன்றாக இருந்தது பத்திரிகைகளில் வெளியானது.
அடுத்து சில தினங்களுக்கு முன் விசாகப்பட்டனத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி முழுவதும், சோனியாவும் சுதீப்பும் கைகளைக் கோர்த்தபடி இணைந்தே காணப்பட்டனர். போட்டியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் கூட இதே கோலத்தில் இருவரையும் பார்க்க முடிந்தது.
சுதீப் தன் மனைவி ப்ரியாவிடமிருந்தும், சோனியா அகர்வால் செல்வராகவனிடமிருந்தும் விவாகரத்து பெற்றவர்கள் என்பது நினைவிருக்கலாம். சோனியாவும் - சுதீப்பும் ஏற்கெனவே சாந்து என்ற படத்தில் காதல் ஜோடியாக நடித்துள்ளனர். சுமாராக ஓடியது அந்தப் படம்.
ஏற்கெனவே நடிகை மீனா கன்னடத்தில் பிஸாயாக இருந்தபோது, இதே சுதீப்புடன் மிக நெருக்கமா இருந்தார். இருவருக்கும் திருமணம் என்றெல்லாம் கூட பேசப்பட்டது. இருவருமே அதை மறுக்காமல் சிரித்தபடி போஸ் கொடுத்து வந்தனர் அப்போது!
இப்போது மீனா இடத்துக்கு சோனியா அகர்வால் வந்திருக்கிறார். இது திருமணம் வரை போகுமா... அல்லது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்ற ஸ்டேட்மெண்டோடு முடியுமா...? பார்க்கலாம்!

09 மார்ச் 2011

மீண்டும் முகம் காட்டுகிறார் சார்மி!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் மீண்டும் ரீ-எண்டிரி ஆகுகிறார் சார்மி. கடைசியாக டைரக்டர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த "லாடம்" படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்திற்கு பின்னர் போதிய படவாய்ப்புகள் ஏதும் அமையாததால் தெலுங்கு சினிமாவுக்கு போனார். அங்கு ஓரளவுக்கு படவாய்ப்புகள் வந்ததால் அங்கேயே செட்டிலானார்.
இந்நிலையில் மீண்டும் தமிழுக்கு வருகிறார் சார்மி. சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்து வெளிவந்த "மங்கலா" என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் படமாக வந்துள்ள இப்படத்தில் சார்மி பேய் கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் ரீ-மேக் செய்யப்படுகிறது. சார்மி படத்தில் நடித்ததுடன் மட்டுமல்லாமல், தமிழ் படத்தின் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் அவதரித்துள்ளார். அத்துடன் நிச்சயம் இந்த அழகான பேய்யை தமிழ் மக்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார் சார்மி.

07 மார்ச் 2011

தமிழ் நாட்டின் செல்லச்சீமாட்டி!

போகுமிடமெல்லாம் இவருக்குக் குவியும் ரசிகர் கூட்டம் நிச்சயம் அரசியல் கட்சிகளை யோசிக்க வைக்கும்!
ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நமீதாவுக்கு, அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு சேர, "தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி" என்ற பட்டத்தைச் சூட்டினர்!
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது.
இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். விதவிதமான கருத்துக்களைச் சொல்லும் நடனங்களை ஆடி அசத்தினர்.
இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை நமீதா கலந்து கொண்டார். அவரை கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஜேப்பியார், நிர்வாகி ரெஜினா ஜேப்பியார் ஆகியோர் வரவேற்று, திறந்த வெளியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
நமீதாவைப் பார்த்ததும் மாணவர்களின் உற்சாகம் கரைபுரள ஆரம்பித்தது. அப்போது ஒரு மாணவர், 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி நமீதா' என குரல் எழுப்ப, அதை அப்படியே எதிரொலித்தனர் அனைத்து மாணவர்களும்.
திரும்பத் திரும்ப நமீதாவை இந்தப் பட்டப்பெயரிலேயே அழைக்க, மேடையேறிய நமீதா மாணவர்களின் தனக்கு சூட்டிய இந்தப் பட்டப் பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகக் கூறி, தனது அன்பு முத்தங்களை காற்றில் பறக்கவிட, ஆர்ப்பரித்தனர் மாணவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும்.
அதன் பிறகு நிகழ்ச்சியை வெகுநேரம் அமர்ந்து ரசித்தார் நமீதா. அங்கிருந்து கிளம்பும்போது மீண்டும் ஒரு முறை மேடையேறி, சிறப்பாக நடனமாடிய மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். அப்போதும், மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி என பெரும் ஆரவாரத்தோடு குரல் எழுப்பி அவரை வழியனுப்பினர்!

04 மார்ச் 2011

அனுஷ்காவிற்காக காத்திருக்கும் படங்கள்!

அஜித் நடிக்கும் பில்லா 2, செல்வராகவன் - கமல் கூட்டணியில் உருவாகும் புதிய படம், மதராசபட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் உள்ளிட்ட அரை டஜன் படங்கள் அனுஷ்காவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறதாம். தற்போது வானம் படத்தில் சிம்புவுடன் நடித்துள்ள அனுஷ்கா, தமிழ்ப் படங்களை விட தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால்தான் மேற்படி அரைடஜன் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்க வேண்டிய நிலை. இதுஒருபக்கம் என்றால் மற்றொரு பக்கம், இந்த நேரடி தமிழ் படங்களின் ரீலிசுக்குப் பின் ஏற்படப்போகும் அம்மணியின் தமிழ் மார்க்கெட்டை குறிவைத்து, அனுஷ்கா நடித்த அதரப் பழசான தெலுங்கு படங்களையும் அடுகடை படுகடையாக தமிழ்ப்படுத்தி வருகிறது ஒரு‌ பெருங்கும்பல்!

02 மார்ச் 2011

உறக்கமின்றி தவித்த சமீராரெட்டி!

ரெட் அலர்ட் படத்தில் கற்பழிப்பு காட்சியில் நடிச்சதால பல நாள் தூக்கமே வரல என்று சமீரா ரெட்டி கூறியிருக்கிறார். பாலிவுட்டில் வெளியான ரெட் அலர்ட் படத்தில் நக்சலைட் பெண்ணாக நடித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த படம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நக்சலைட்டா நடிக்க ரொம்பவே தயங்கினேன்.
என் முகத்துல அப்படி ஒரு ரியாக்ஷனைக் காட்ட முடியுமான்னு தெரியல. அப்புறம் ‌டைரக்டர் கொடுத்த தைரியத்துல நடிச்சேன். நிஜமான நக்சலைட் பிரச்னையைப் பற்றி நான் சொல்ல விரும்பல. ஒரு நடிகையா அந்த படத்துல என்னை கற்பழிப்பது போன்ற ஒரு காட்சியில், நடிச்சுட்டு பல நாள் தூக்கமே வரலை. தனிமையில் கண் கலங்கியிருக்கேன். ரெட் அலர்ட் படம் வேறு யாரும் நடிக்கத் தயங்குற நக்சலைட் வேடம். இதை ஏன் என்னை செய்யச் சொல்லணும். ஏதோஒரு விஷயத்துக்கு நான் ரொம்ப சரியா இருப்‌பேன்னு டைரக்டர்கள் நினைக்கிறாங்க. அதே சமயம் ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டுறது ஒரு பெரிய குற்றமா நினைக்கல. கவர்ச்சியும் நடிப்பில் ஒரு பகுதிதான், என்று கூறியுள்ளார்.
ரெட் அலர்ட் படத்தில் லட்சுமி என்ற பெண்ணாக சமீரா ரெட்டியை, போலீஸ்காரர்கள் போலீஸ் நிலைய கழிவறையில் வைத்து கற்பழித்து விடுகிறார்கள். அதன் பின்னர் அவர் நக்சலைட் இயக்கத்தில் சேர்த்து பழிவாங்குவதுதான் படத்தின் மொத்த கதையும் என்பது கூடுதல் தகவல்.

28 பிப்ரவரி 2011

சேவை செய்யும் ஜெனிலியா!

வேலாயுதம், உருமி, தெலுங்கு-இந்திப் படங்கள் என பிஸியாக இருந்தாலும், நேரம் கிடைக்கும்போது தன்னால் முடிந்த சேவையையும் செய்கிறாராம் ஜெனிலியா.
தற்போது நைட் கிளப் பார் ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அபலை பெண்களுக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளாராம் ஜெனிலியா.
இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், "ஆதரவற்ற பெண்களுக்கும், கஷ்டப்படுகிற பெண்களுக்கும் உதவி செய்கிற அமைப்பு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நைட் கிளப்பில் ஒரு நாள் முழுவதும் இருக்க முடிவு செய்துள்ளேன். அங்கு வருபவர்களை வரவேற்பேன், கலந்துரையாடவும் செய்வேன். இது போன்ற சமூக சேவை பணிகளில் எனக்கு ஈடுபாடு உண்டு.
கொடுமைகள், கஷ்டங்களை எதிர்த்து போராடும் பலம் பெண்களிடம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவு கொடுத்தால் அந்த பெண்ணின் குடும்பமே நன்றாக இருக்கும், அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். அதனால்தான் என்னால் முடிந்த இந்த உதவியைச் செய்கிறேன்", என்றார்.

25 பிப்ரவரி 2011

தணிக்கைக்குழு கத்தரித்த வசனம்!

சிவசிவா’ படத்தில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் செக்ஸ் லீலை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதற்கு சென்சார் குழு ஆட்சேபம் தெரிவித்தது.
சிவாஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாயகர்களாக குமரன் கார்த்திக், சிவாஷ் ஆகியோரும் நாயகிகளாக சுகானி, நட்சத்திராவும் நடித்துள்ளனர்.
இந்த படம் நேற்று தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தில் காஞ்சீபுரம் கோவில் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் காட்சிகள் இடம் பெற்றிருந்ததற்கு தணிக்கைக் குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே அந்த வசனங்களை நீக்கிவிட்டு யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதுபற்றி இயக்குனர் சிவாஷ் கூறுகையில், “நாம் சாமி என்று கடவுளையும் கோவில் குருக்களையும்தான் ஒப்பிடுகிறோம். அந்த குருக்களே தப்பாக நடந்து கொள்ளும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. காதல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுவே குருக்களுக்கு வந்தால் சமுதாயம் எப்படி பாதிக்கப்படும் என்பதைத்தான் இந்தப் படத்தில் காட்சிபடுத்தியுள்ளோம்.
இப்படத்தில் அர்ச்சகர் தேவநாதனின் செக்ஸ் லீலைகள் பற்றி இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்து நீக்கிவிட்டனர். வேறு என்ன சொல்வது?” என்றார்.

24 பிப்ரவரி 2011

ஸ்ருதிக்கு சிபார்சு செய்த சித்தார்த்!

தெலுங்கு படத்தில் ஸ்ருதி அறிமுகமானதிலிருந்து வாய்ப்புகள் வந்தாலும், தனக்கு பொருத்தமான ரோலை எதிர்பார்த்தாராம்.
இதற்கிடையில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த 'பாய்ஸ்' சித்தார்த், ஸ்ருதி இருவரையும் இணைத்து கிசுகிசு பரவியது.
தெலுங்கில் அறிமுக டைரக்டர் வேணு ஸ்ரீ ராம் இயக்க உள்ள படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறாராம். இவருக்கு ஜோடியாக நடிக்க நித்யா மேனனிடம் பேசியிருந்தார்களாம்.
சித்து படத்தின் டைரக்டர் மற்றும் புரொட்யூசரிடம் பேசி நித்யாவை கழட்டி விட்டாராம். படத்தில் ஸ்ருதியை இணைத்து கொள்ள ஏற்பாடும் செய்தாராம் சித்தார்த்.
இந்த கூத்தெல்லாம் நடப்பதற்கு முன்பு அம்ரிதா ராவை நாயகியாக நடிக்க வைக்கும் யோசனையில் இருந்தார்களாம்.
சில கருத்து வேறுபாடுகளால் அம்ரிதாவையும் கடைசியில் தூக்கி கடாசி விட்டார்களாம்.

23 பிப்ரவரி 2011

த்ரிஷா நடிக்கும் மொழிமாற்றுப் படம்.

மதுர் பண்டார்கர் இந்தியில் இயக்கிய ஃபேஷன் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் இந்திப் பதிப்பில் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இன்னொரு நாயகியாக கங்னா ரனவத் நடித்திருந்தார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை யுடிவி நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஒரு நாயகியாக த்ரிஷா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னொரு நாயகி வேடத்தில் ப்ரியாமணி நடிக்கிறாராம்.
தெலுங்கிலும் இந்தப் படம் தயாராகிறது. முன்னணி இயக்குநர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்கிறார்கள்.
மாடல் உலக அழகிகளைப் பற்றிய படம் என்பதால், மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கிறார்கள்.
திருமணம், புதுப்படங்களில் நடிக்க மறுப்பு என்று த்ரிஷா பற்றி செய்திகள் வந்த நிலையில், இப்போது பெரிய பட வாய்ப்பை அவர் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

21 பிப்ரவரி 2011

ரஜனிகாந்த் ஜோடி சினேகா!

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சினேகாவிடம் பேசி வருகிறார்கள். நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலானாலும் ரஜினிக்கு மட்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை சினேகாவுக்கு. குசேலன் படத்தில் ரஜினியுடன் ஒரு காட்சியில் மட்டும் தோன்றினார். இப்போது ராணாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ரஜினி மூன்று வேடங்களில் தோன்றும் இப்படத்தில் தீபிகா படுகோன் மட்டுமே ஹீரோயினாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் இரு நாயகிகளாக அனுஷ்கா மற்றும் அசின் நடிக்கக் கூடும் என்றார்கள். ஆனால் அசின் நடிக்க ரசிகர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே நிச்சயம் அசின் நடிக்கமாட்டார் என்கிறார்கள். இப்போது அந்த வேடத்துக்குதான் சினேகாவிடம் பேசியுள்ளனர் ராணா தரப்பிலிருந்து. ஏற்கெனவே ரஜினி மகள் சௌந்தர்யாவின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோ தயாரித்த கோவா படத்தில் நாயகியாக நடித்தவர் சினேகா. எனவேதான் மீண்டும் சினேகாவையே அணுகியுள்ளனராம்.

18 பிப்ரவரி 2011

த்ரிஷாவிற்கு முத்தம் கொடுத்த அஜித்!

முத்தக் காட்சி மட்டுமல்ல மத்தக் காட்சி எதிலும் ஆர்வம் காட்டாதவர் அ‌‌ஜீத். அவரையே மல்லுக்கட்டி முத்தம் கொடுக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
மங்காத்தாவில் அ‌‌ஜீத், த்‌ரிஷா காதல் எபிசோட் அவ்வளவு க்யூட்டாக வந்திருக்கிறது என ஆனந்தப்படுகிறார்கள். முத்தம் இல்லாத காதல் முந்தி‌ரி இல்லாத பாயாசம்தானே? அதனால் ஒரு முத்தக் காட்சி அவசியம் என அ‌‌ஜீத்தையும், த்‌ரிஷாவையும் முத்தமிட வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
முதலில் தயங்கினாலும் அ‌‌ஜீத் நன்றாகவே கொடுத்திருக்கிறாராம் முத்தம்.

17 பிப்ரவரி 2011

விக்ரம் நடிக்கும் பிதா!

இயக்குநர் விஜய் டைரக்ஷனில் விக்ரம் அடுத்து நடிக்கும் படத்துக்கு தெய்வமகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது இந்தப் படத்தின் தலைப்பு பிதா என மாற்றப்பட்டுள்ளது.
தெய்வமகன், சிவாஜி கணேசன் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம். இந்தப் பெயரில் மீண்டும் படமெடுக்க சிவாஜி பிலிம்ஸ் முடிவு செய்துள்ளதால், அந்த தலைப்பு விக்ரம் படத்துக்குக் கிடைக்கவில்லையாம்.
எனவே பிதா என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர். இந்தப் படத்தில் அனுஷ்காவும் அமலா பாலும் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காதல் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் அடிப்படையில் உருவாகும் படம் இது. முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

15 பிப்ரவரி 2011

ரஜனியுடன் நடிப்பதில் பெருமை என்கிறார் தீபிகா!

ரஜினியின் ராணா படத்தி்ல் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் எனது திரையுலக வாழ்க்கைக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது, என்கிறார் பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன்.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் இளைஞராக வரும் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா படுகோன் கூறுகையில், "ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது இத்தனை சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை. அடுத்தடுத்த படங்களில் நான் பிஸாயாக இருந்தேன். ஆனாலும், யாருக்கு நான் விசிறியாக இருந்தேனோ, அவருடன் ஜோடியாகவே நடிக்க வாய்ப்பு வந்ததால், இந்தப் படத்துக்கே முன்னுரிமை தந்தேன்.
என்னைப் பொறுத்தவரை, எனது கேரியருக்குப் பெருமையும் அங்கீகாரமும் ரஜினி சாருடன் நடிப்பதால் கிடைத்துள்ளது என நம்புகிறேன்", என்றார்.
ரஜினியின் மற்ற இரு ஹீரோயின்கள் குறித்து இன்னும் மவுனம் காக்கிறது ராணா தரப்பு.

13 பிப்ரவரி 2011

ஒன்றையே திரும்பத் திரும்ப எத்தனை நாளைக்கு!

ஒரே கவர்ச்சியை எத்தனை நாளைக்குத்தான் ரசித்துக் கொண்டிருக்க முடியும். எல்லோருக்கும் மாறுதல் தேவைப்படும். அப்போது நான் முதலிடத்தை பிடிப்பேன், என்று ரம்யா நம்பீசன் கூறியுள்ளார். ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான அழகுப்பெண் ரம்யா நம்பீசன், இளைஞன் படத்தின் அழகை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி நடித்திருந்தார். அவரது அழகுக்காகவே படங்கள் அணிவகுத்து நிற்கும் என்று பாமர ரசிகன் போட்ட கணக்கு பொய்த்துப் போகும் அளவுக்கு வாய்ப்புகள் வரவே இல்லை. இருந்தாலும் அம்மணிக்கு தன்னம்பிக்கை ரொம்பவே ஜாஸ்தி. இன்னமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் ரம்யாவிடம், தமிழ் சினிமாவில் முன்னணி அந்தஸ்துக்கு உங்களால் உயர முடியுமா? என்று கேட்டால், நிதானத்துடன் பதில் சொல்கிறார்.
அனுஷ்கா, அசின், நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா மோத்வானி, தப்சி உள்ளிட்ட ஹீரோயின்ஸ் போலவேதான் நானும் கவர்ச்சியை காட்டுறேன். ஆனால் என் முறை இன்னும் வரவில்லை. அவ்வளவுதான். ஒரே கவர்ச்சியை எத்தனை நாட்கள்தான் ரசித்துக் கொண்டிருக்க முடியும். எல்லாருக்கும் ஒரு மாறுதல் தேவைப்படும். அப்போது நானும் அவர்களின் இடத்தை பிடிப்பேன். அதுவும் கொஞ்ச நாளைக்குதான். அப்புறம் நானும் ரசிகர்களுக்கு அலுத்துப் போவேன். எனக்கு பின்னால் வேறொரு நடிகை வருவார். இதுதானே சர்க்கிள் என்கிறார், மிகத்தெளிவாக! பொண்ணு பொழச்சிக்கும்!!

10 பிப்ரவரி 2011

காதல் வலையில் தமன்........?

ஆந்திராவின் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவரது வாரிசுக்கு தமன நடிகை காதல் வலை வீசி, அதில் வெற்றியும் கண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு தகவல்.
தமிழில் முன்னணி இடத்தில் இருந்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் தமன நடிகை, தமிழ் சினிமா வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாக ஆரம்பத்தில் தகவல் கசிந்தது. அதனை மறுத்து வந்த நிலையில் அம்மணியின் பார்வை ஆந்திரதேசம் பக்கம் வீசியிருக்கிறது.
ஆந்திராவின் பிரபல நடிகரும், அரசியல் கட்சி ஆரம்பித்து, அதனை சமீபத்தில் ஆளும் மத்திய கட்சியுடன் இணைத்துக் கொண்டிருக்கும் சீவி நடிகரின் மகன்தான் தமனத்தின் வலையில் விழுந்தது.
இப்போது இரண்டு பேரும் போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறது ஆந்திர பத்திரிகைகளின் கிசுகிசு பகுதி.

07 பிப்ரவரி 2011

திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்!

ஸ்ரேயா இன்றைக்கு வெறும் நடிகை மட்டுமல்ல, பல கல்வி மையங்களில் கவுரவ விரிவுரையாளர் ரேஞ்சுக்கு சினிமா பற்றி பாடங்கள் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் அகமதாபாத் ஐஐஎம்மில் கூட உரையாற்றினார். சென்னை ஐஐடியில் கூட பேசியிருக்கிறார்.
சினிமாவின் வெற்றி தோல்வி, மார்க்கெட்டிங் முறைகள் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்கிறார், நுனி நாக்கு ஆங்கிலத்தில்.
சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில்,
"தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் என்ற ஆங்கில படத்தில் இப்போது நடித்து வருகிறேன். இது எனக்கு மூன்றாவது ஆங்கில படம். தமிழ், ஹாலிவுட் படங்களில் பெரிய வித்தியாசம் இல்லை.
இயக்குனர்கள், கதைகள் மற்றும் படங்களை எடுக்கும் முறைகள் போன்றவைகளே படத்தின் தரத்தை நிர்ணயிக்கின்றன. வெற்றி-தோல்வி கடவுள் கையில் உள்ளது. சில நேரம் திறமையான நடிகர்கள் கூட பிரபலமாக முடியாமல் உள்ளனர்.
கலைஞர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். எவ்வளவு கஷ்டத்திலும் எழுந்து நிற்பேன் என்று நம்ப வேண்டும். வாரிசு நடிகர்களால் மட்டுமே நிலைக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இந்தியாவில் உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் யாரும் வாரீசு நடிகர்கள் இல்லை. திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்", என்றார்.

04 பிப்ரவரி 2011

திரிஷாவிற்கு திருமணம்!

இந்த ஆண்டு இரு முன்னணி நடிகைகளின் திருமணத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். ஒன்று நயன்தாரா. அடுத்து? த்ரிஷா! ஆம்... த்ரிஷாவுக்கு போரடித்து விட்டதாம் சினிமா.
ரசிகர்களும் கிட்டத்தட்ட அதே மனநிலைக்கு வந்துவிட்டதை அவரும் உணர்ந்து விட்டதால், திருமணம் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறாராம்.
இந்திப் படங்களில் பெரிதாகக் கலக்கலாம் என்ற ஆசையில் மும்பையில் ஃப்ளாட் எடுத்துக் கூட தங்கிப் பார்த்தார். ஆனால் நடித்த ஒரே படமும் தோல்வியடைந்து விட்டதால் வேறு வாய்ப்புகள் இல்லாத நிலை. சில பாலிவுட் உப்புமா கம்பெனிகள் தான் அவரைத் தேடி வந்தார்களாம். இனி மும்பை வேலைக்காகாது என்று உணர்ந்து ஃப்ளாட்டைக் காலி செய்து விட்டு சென்னைக்கு வந்தார்.
அப்போதே த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கி விட்டாராம். மாப்பிள்ளை சரியாக அமையும் பட்சத்தில் இந்த ஆண்டே திருமணம் என்கிறார்கள் த்ரிஷா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.
இப்போதைக்கு தெலுங்கில் இரு படங்கள், தமிழில் அஜீத்துடன் மங்காத்தா என மூன்று படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. வேறு புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படங்கள் முடிந்ததும், திருமண அறிவிப்பை வெளியிடக் கூடும் என்கிறார்கள்.

31 ஜனவரி 2011

ரசிகர்கள் தொல்லையால் தேர்வு எழுதாமல் திரும்பிய செளந்தர்யா!

ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார்.
சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார்.
அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார்.
பின்னர் அவர் அந்த கல்லூரி முதல்வரிடம் தேர்வு எழுத தனக்கு தனி அறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு கல்லூரி முதல்வர் மறுத்தார். பிரபலங்களின் வாரிசுகளுக்கு தேர்வு எழுத ஏற்கனவே தனி அறை ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து சவுந்தர்யா அவரிடம் வாதாடினார்.
ஆனால் அதை ஏற்க கல்லூரி முதல்வர் மறுத்து விட்டார். இதனால் அதிருப்தியுடன் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார்.

28 ஜனவரி 2011

சுருதியால் உள்ளுக்குள் நடுங்கும் முருகதாஸ்!

அகநக ஓ தீரடு என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தின் ரிசல்ட்டை ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்த்திருந்தவருக்கு அந்த நம்பிக்கையில் விழுந்திருக்கிறது சரியான இடி!
படம் முதல் வாரத்திலேயே மூட்டை கட்டப்பட்டுவிட்டதாம்.
இவர் அறிமுகமான முதல் இந்திப்படமும் இதே மாதிரிதான் அமைந்தது. இந்த தொடர் தோல்விகளால் ஸ்ருதி கவலைப்பட்டாரோ இல்லையோ? இவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் ஏழாம் அறிவு முருகதாசுக்கு சின்ன நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அப்பா கமல் போலவே சகல திறமைகளும் கொண்ட ஸ்ருதிக்கு நல்ல குரல் வளம், நாலு பேரை மயங்க வைக்கும் இசை என்று பல்வேறு கதவுகள் திறந்திருக்கின்றன. எனவே இப்போது வரும் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை அவர். ஏழாம் அறிவுக்கு பின்புதான் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளப் போகிறாராம். இது முருகதாஸ் ஸ்கிரிப்டின் மீதிருக்கும் நம்பிக்கையாக கூட இருக்கலாம்.
இதற்கிடையில் தினமும் படப்பிடிப்புக்கு லேட்டாக வந்து கொண்டிருந்தவர் இப்போது டாண் என்று குறித்த நேரத்திற்கு வந்துவிடுகிறாராம். எலி உட்கார எலந்த பழம் விழுந்திருக்கும். இதற்கும் தெலுங்கு பட தோல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது?

24 ஜனவரி 2011

நீதுவால் எழுந்த ஆடைப்பிரச்சனை!

உள்ளாடை இல்லாமல் நிகழ்ச்சியில் நடிகை நீத்து சந்திரா பங்கேற்றார். இதையடுத்து அவருக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நடிகர் மாதவனுடன் யாவரும் நலம் படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை நீதுசந்திரா. மும்பையைச் சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நீதுசந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட நீதுசந்திரா, மேடையில் கால் மேல் கால் போட்டு ஹாயாக அமர்ந்திருந்தார். அப்போது அவர் உள்ளாடை அணியாமல் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. நீதுசந்திரா பங்கேற்ற அந்த பொது நிகழ்ச்சி சம்பந்தமான படங்களை பார்த்து கேரள மாதர் சங்கம், மகளிர் கூட்டமைப்பு மற்றும் சோசலிச பெண்கள் குழுவினர் கொதிப்படைந்துள்ளனர்.
நடிகை நீதுசந்திரா, பொது நிகழ்ச்சியில் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டது ஒட்டுமொத்த பெண் இனத்தை அவமானப்படுத்துவதாகும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை மலையாள படங்களில் நடிக்க விட மாட்டோம் என்று கூறி போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
கேரளாவில் தனக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் நீதுசந்திரா அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தெரியாமல் நடந்து விட்டது என்று அவர் கூறி உள்ளார்.

21 ஜனவரி 2011

புதுப் பொலிவுடன் நமீதா!


விரைவில் புத்தம் புதிய பொலிவுடன் என்னைப் பார்ப்பீர்கள் என்று குதூகலமாக கூறுகிறார் நடிகை நமீதா. எல்லாம் எடைக் குறைப்பு நடவடிக்கை காரணமாகவாம்.
நமீதா என்றவுடன் அந்த பெருத்த உடலும், பிரமாண்ட கவர்ச்சியும்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதை அப்படியே மாற்றியமைக்கப் போகிறாராம் நமீதா.
இடையில் கன்னடப் படத்தில் நடிக்கப் போன நமீதா அப்படத்துக்காக எடையை வெகுவாகக் குறைத்திருந்தாராம். ஆனால் இளைஞன் படத்தில் நடிக்க வந்தபோது மீண்டும் எடையைக் கூட்டிக் கொண்டாராம். ஆனால் தற்போது மீண்டும் எடையைக் குறைக்க ஆரம்பித்துள்ளார். இதனால் கணிசமான அளவில் எடை குறைந்து சிக்கென மாறி வருகிறாராம். இன்னும் சில நாட்களில் மேலும் சில கிலோவைக் குறைத்து புது மாதிரியான தோற்றத்திற்கு வரப்போகிறேன் என்கிறார் நமீதா.
கரீனாவின் சிக் உடம்புக்குக் காரணமான பிரபலமான டயட்டிஷியன் ருஜுதா திவேகரின் ஆலோசனைப்படி இப்போடு டயட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளாராம் நமீதா. இதுதான் அவரது உடல் மெலிவுக்கு காரணமாம். கூடவே யோகாவையும் துணைக்கு அழைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இன்னும் சில வாரங்கள் பொறுத்திருங்கள். பிறகு என்னைப் பார்த்தால் யாருமே நான்தான் நமீதா என்றால் நம்ப மாட்டார்கள்.
ரசிகர்களுக்கு எனது புதிய பொலிவு ஆச்சரியத்தை அளிக்கும். இப்போதே என்னைப் பார்க்கும் பலரும் நம்ப மறுக்கிறார்கள். நீங்களா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். இன்னும் முழுமையாக எடைக் குறைப்பு முடியவில்லை. அதற்குள்ளேயே இவ்வளவு ஆச்சரியம் என்றால் நான் முழுமையாக மெலிந்து அழகானால் எப்படியெல்லாம் ஆச்சரியப்படப் போகிறார்களோ என்று கூறிச் சிரிக்கிறார் நமீதா.
தனது உடல் எடை மிகவும் அதிகமாக இருப்பதாக பலரும் கூறி வந்தபோதிலும் அதில் அதிக அக்கறை காட்டாமல்தான் இரு்நது வந்தார் நமீதா. ஆனால் யோகா செய்யத் தொடங்கிய பின்னர் அவருக்கே எடையைக் குறைக்கும் ஆசை வந்து விட்டதாம். இதனால்தான் தற்போது தீவிரமாக எடைக் குறைப்பில் இறங்கியிருக்கிறாராம்.
இளைஞன் படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்தது மிகவும் சவாலானதாக இருந்ததாக கூறும் நமீதா, இருப்பினும் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படத்தில் நடித்தது பெருமை தருவதாக கூறிப் பூரிப்படைகிறார்.

18 ஜனவரி 2011

ஐயோ!என்னை அதுக்கு கூப்பிடுறாங்களே....!!!

‘ஐயோ என்னை ‘அதுக்கு’ கூப்பிடறாங்களே…? ஷாக்கான கவர்ச்சி நடிகை நீது. எந்த மொழி படமாக இருந்தாலும் கவர்ச்சி முத்திரை காட்டி நடிக்க தயங்காதவர்தான் பாலிவுட் நடிகை நீது சந்திரா.
எனக்கு ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, போஜ்பூரி, தெலுங்கு ஆகியவற்றுடன் வட மாநில மொழிகள், வெளிநாட்டு மொழிகளையும் தெரிந்து வைத்துள்ளேன். யாவரும் நலம் படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் மொழியை கற்க ஆர்வம் காட்டியுள்ளேன்.
ஆதிபகவன் படத்தில் நடிக்க துவங்கியபோதே சரளமாக தமிழோடு விளையாடி பார்ப்பது என முடிவு செய்தேன்.
ஆர்வமாக தமிழைக் கற்று வருகிறேன். டைரக்டர் அமீரும் என்னை உற்சாகப்படுத்தியுள்ளார்.
பட யூனிட்டில் உள்ளவர்களிடம் பேசி, தப்பிருந்தால் திருத்திக்கொள்கிறேன். ஆதிபகவன் பட சூட்டிங் முடிவதற்குள் தமிழை நன்றாக கற்றுக்கொள்வேன்\’ என்கிறாராம்.
பாலிவுட் டைரக்டர் பிரியதர்சன் சினிமாவுக்கு வந்து முப்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி துபாயில் விழா கொண்டாடினார்கள்.
அதில் கலந்து கொண்ட நீது, பாடல்களுக்கு வளைந்தும் நெளிந்தும் நளினமாக ஆட்டம் போட, கூடி ரசித்தவர்களுக்கு ஒரே கிளுகிளுப்பு ஆட்டம் முடிந்து, நடந்து வந்த நீதுவை சுற்றி நெருக்கி தள்ளியதாம் ரசிகர் கும்பல்.
அதில் தமிழ், மலையாளம் மொழிகளில் பேசியவர்கள், ‘கல்யாணம் கட்டிக்கலாமா…?! அதுக்கு சம்மதமா?! என்று முணுமுணுத்தார்களாம். ‘அதுக்கு ரெடின்னு சொல்லு, உன்னை நல்லா வெச்சுக்கிறேன்’ என்றும் கூட்டத்திலிருந்து குரல் வர, நீதுக்கு ஷாக்.
கொஞ்சமும் அதிர்ச்சி அடங்காமல், ‘ஆங்.. நான் அதுக்கு ஒத்து வர மாட்டேன்\’ என்று லேசாக கதறியவர், கமுக்கமாக இடத்தை காலி பண்ணினாராம்.

17 ஜனவரி 2011

முன்னணி நடிகை பட்டியலில் அஞ்சலி!

தமிழ் சினிமாவின் அடுத்த முன்னணி நடிகைகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுபவர்களில் முக்கியமானவர் என்றால் அது அஞ்சலிதான் என்று கோடம்பாக்கத்தில் யாரைக் கேட்டாலும் டக்கென சொல்லிவிடுவார்கள்.
சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை அங்காடித்தெரு படத்தில் பெற்ற அஞ்சலிதான் முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் இப்போதைய ஏகோபித்த தேர்வாக இருக்கிறார். மகிழ்ச்சி படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாகவே நடித்த அஞ்சலி, விமல் நடிக்கும் தூங்கா நகரத்தில் துடுக்குத்தனமான மதுரைக்காரப் பெண்ணாக நடித்துவருகிறார்.
அதோடு அஜீத்தின் மங்காத்தா ஆட்டத்திலும் ஒருகை போடுகிறார் அஞ்சலி. மங்காத்தாவில் அஞ்சலிக்கு ஜோடி வைபவ்தான் என்றாலும், தல படம் என்பதால் டபுள் சந்தோஷத்தோடு தலையாட்டிவிட்டாராம். அஜீத்தின் படத்தில் நடிக்கும் குஷியில் இருக்கும் அஞ்சலிக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளும் குவிகின்றன.
விக்ரமின் அடுத்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவிருக்கிறார். ‘மைனா’ புகழ் அமலா பாலுக்கு கிடைக்கவிருந்த இந்த வாய்ப்பு அஞ்சலிக்கு கைமாறி இருப்பதுதான் இதில் ஸ்பெஷல். விக்ரம், அனுஷ்கா நடித்துவரும் 'தெய்வமகன்' படத்தில் அமலா பாலும் இன்னொரு கதாநாயகி. தெய்வமகனுக்கு அடுத்து சுசீந்திரனின் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்திலும் அமலா பாலையே நாயகியாக்குவதாக அவருக்கு உறுதியளித்திருந்தாராம் விக்ரம்.
ஆனால் அந்த வாய்ப்புதான் இப்போது அஞ்சலிக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் அமலா பாலையே நாயகியாக்கலாம் என்பது விக்ரமின் விருப்பமாக இருந்தாலும், இந்தக் கதைக்கு அஞ்சலிதான் மிகவும் பொருத்தமானவர் என்று கூறிவிட்டாராம் இயக்குனர் சுசீந்திரன். இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்திற்கான மற்றொரு நாயகிக்காக மும்பை பக்கம் வலைவிரித்திருக்கிறார்கள்.

14 ஜனவரி 2011

சிலோன் சின்னையா காலமானார்!

பிரபல திரைப்பட நடிகர் சிலோன் சின்னையா லண்டனில் காலமானார். அவருக்கு வயது 70. பைலட் பிரேம்நாத், பொண்ணு ஊருக்கு புதுசு, அகல்விளக்கு, ஆணிவேர், கரைகடந்த ஒருத்தி, நீயின்றி நானில்லை உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இதுதவிர இலங்கையில் புதியகாற்று உள்பட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்தவர்.
தீவிர சிவாஜி ரசிகரான சிலோன் சின்னையா, எனக்குள் ஒரு சிவாஜி என்ற படத்தை தயாரிக்க தீவிர முயற்சியில் இறங்கி இருந்தார். இந்நிலையில் திடீரென இறந்தார்.
சிலோன் சின்னையாவிற்கு மனைவி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

12 ஜனவரி 2011

பெண்களை குளிர்விக்க இந்த வழிகளை பின்பற்றினால் போதுமாம்!

“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?
3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.
5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.
7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது
9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்
11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்
12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.
13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.
18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.
22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.
25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

09 ஜனவரி 2011

அழகே என மயங்கும் ஆண்கள்!பணமே என ஏங்கும் பெண்கள்!

திருமணத் தகவல் தொடர்பு இணையதளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், அழகான பெண்ணே மனைவியாக வரவேண்டும் என ஆண்களும்; நல்ல வேலையில் உள்ள ஆண் தான் கணவனாக வரவேண்டும் என பெண்களும் விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த திருமணத் தகவல் தொடர்பு இணையதளம் ஒன்று, தன் இணையதளத்தில் திருமணத்துக்காகப் பதிவு செய்திருந்த ஆண், பெண் உட்பட ஐயாயிரம் பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. தன் வருங்கால கணவன் அல்லது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த ஆய்வில், பெண் குடும்பத்தாரின் பின்னணிக்கு, 49 சதவீத ஆண்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். பெண்ணின் அழகான தோற்றத்துக்கு, 48 சதவீதம் பேர் முக்கியத்துவம் அளித்துள்ளனர். 39 சதவீதம் பேர், தனக்கு வரும் மனைவியின் கல்வி குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 47 சதவீதம் பேர், வருங்கால மனைவியின் வேலைவாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 45 சதவீதம் பேர், பெண்ணின் ஜாதி மற்றும் இனம் குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர். மாறாக, 54 சதவீதம் பெண்கள், தங்களுக்கு கணவனாக அமையப் போகிறவரின் வேலை குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர்.
53 சதவீதம் பேர், கல்வி குறித்தும், 52 சதவீதம் பேர், கணவரின் குடும்பப் பின்னணி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர். 46 சதவீதம் பேர், ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 65 சதவீதம் பெண்கள், ஆண்களின் தோற்றத்தை முக்கியமானதாகக் கருதவில்லை.இதுகுறித்து அந்த இணையதளத்தின் தலைவர் கூறுகையில், “பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் போக்கு இக்காலத்தில் மாறிவருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கூட, ஜாதி மற்றும் குடும்பப் பின்னணி முக்கிய காரணிகளாகவே கருதப்படுகின்றன. இதற்கு, மணமகன் தன் பெற்றோரின் கருத்துக்கு இணங்கிச் செல்வதே முக்கிய காரணம். பெண்கள் தங்களின் பாதுகாப்பான வாழ்க்கை குறித்து கவலைப்படுவதால், கணவனின் கல்வி மற்றும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.இருப்பினும், அழகான பெண்ணே தனக்கு மனைவியாக வரவேண்டும் என்ற ஆண்களின் எதிர்பார்ப்பே ஒருவகையில் சட்டவிரோதமான கள்ளத் தொடர்புகளுக்கும் வழிவகுத்து விடுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

06 ஜனவரி 2011

விஜய்யும் அஜித்தும் சந்தித்தனர்.

வெளியில் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள்.
ஆனால் அவர்களின் தலயும் தளபதியும் பண்டிகை - விசேஷங்களுக்கு கூடிக் குலவி நட்பு பாராட்டுகின்றனர்.
இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரமும் ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இப்போது அதிமுக அனுதாபிகள் வேறு.
அதே நேரம் இருவருக்குமே ஒரு வெற்றி கட்டாயம் தேவை. அதற்காக மங்காத்தாவில் அஜீத் படுபிஸி. விஜய்யோ காவலனை முடித்து விட்டு, வேலாயுதத்தின் இறுதி ஷெட்யூலில் இருக்கிறார்.
இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் திடீரென்று அஜீத்தும் விஜய்யும் நேற்று சந்தித்துக் கொண்டனர்.
இருவரும் அவரவர் படம் குறித்து விசாரித்துக் கொண்டனர். அப்போது மங்காத்தா பட இயக்குநர் வெங்கட் பிரபு உடனிருந்தார்.

02 ஜனவரி 2011

தள்ளாடுகிறார் காவலன்!

ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு, ஆளும் அதிகாரத்தின் ஓர வஞ்சனை, திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கோபம் என பல்முனை தாக்குதல்களு‌க்கு உள்ளாகியுள்ளது விஜய்யின் காவலன்.
பொங்கலுக்கு எப்படியும் படத்தை வெளியிடுவது என உறுதியாக உள்ளது தயா‌ரிப்பாளர் தரப்பு. அம்மாவின் ஆசிர்வாதத்தையும் விஜய்யின் தந்தை நே‌ரில் சென்று பெற்றிருக்கிறார்.
ஆனாலும் காவலனின் நிலை இன்னும் தள்ளாட்டத்தில்தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவரும் ஆடுகளம், சிறுத்தைப் படங்களின் மீதுதான் திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கவனம் உள்ளது. இதன் காரணமாக விஜய் படங்களை விரும்பி திரையிடும் திரையரங்குகளும் காவலனுக்கு முகத்தை திருப்பிக் கொண்டுள்ளன.
பொதுவாக விஜய் படங்கள் 300 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்படும். காவலன் 100 திரையரங்குகளை எட்டினாலே அதிசயம் என்கிறார்கள்.