04 ஏப்ரல் 2011
மனிஷாவின் கிக் கதாபாத்திரம்!
பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா புதிய படமொன்றில் விலைமாதுவாக நடிக்கப் போகிறார். வித்தியாசமான ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்கிறேன் பேர்வழியாக பாலிவுட்டில் பல நடிகைகள் வலம் வந்தாலும், மனிஷாவின் திறமைக்கு ஈடு மனிஷாவாகத்தான் இருக்க முடியும். பமபாய் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மனிஷா, உயிரே, இந்தியன், முதல்வன், ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 40 வயதாகும் அவர், நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக அறிவித்தார். இதையடுத்து மனிஷாவின் வயதுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற கேரக்டருடன் நடிகை தீப்தி நாவல் புதிய படமொன்றிற்காக அழைப்பு விடுத்தார். படத்தின் கதையை கேட்ட மனிஷா, இது ரொம்பவே சேலஞ்ஜிங்கான கேரக்டர். நான் கண்டிப்பாக செய்கிறேன், என்று கூறி ஓ.கே. சொல்லி விட்டாராம். அப்படியென்ன சேலஞ்சிங் கேரக்டர்? படத்தில் மனிஷா விலைமாதுவாக நடிக்கிறார். தோ பைசே கி தூப் சார் ஆனே கி பாரிஷ் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த படம் ஒரு செக்ஸ் தொழிலாளியின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவமாம். கதைப்படி, தனது ஊனமுற்ற மகனுக்காக வாழும் மனிஷா, ஒரு காலகட்டத்தில் விலைமாதுவாக மாறிவிடுகிறார். ஓரின சேர்க்கை பழக்கமுள்ள ஆண் பாடலாசிரியரை தனது வாடிக்கையாளராக சந்திக்கிறார் மனிஷா. அது பின்னாளில் இந்த மூன்று பேருக்கும் இடையில் ஒரு அன்பு பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதை சுற்றித்தான் இக்கதை பின்னப்பட்டுள்ளது, என்கிறார் டைரக்டர் தீப்தி நாவல்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக