13 ஏப்ரல் 2011
தமிழ் ரசிகர்களின் விருப்ப நாயகியாவேன்!
தமிழ் ரசிகர்களுக்கு நான் புதுசு என்றாலும், அவர்களை திருப்திபடுத்துவது மிகவும் சாவலான விஷயம் என்றும், இருந்தாலும் அவர்களின் விருப்ப நாயகியாக மாறுவேன் என்று ஆணித்தரமாக கூறுகிறார் மலையாளத்தில் இருந்து இறக்குமதியாகி இருக்கும் மற்றுமொரு நடிகை நித்யா மேனன். தமிழ் நடிகைகளை காட்டிலும் பிற மாநிலங்களில் இருந்து வந்த நடிகைகள் தான் ஜொலிக்கின்றனர். அதிலும் கேரளாவில் இருந்து வரும் நடிகைகள் முன்னணி நடிகையாக இருக்கின்றனர். அந்தவகையில் கேரளாவில் இருந்து நித்யா மேனன் என்ற நடிகை தமிழுக்கு வந்திருக்கிறார். தமிழில் வருவதற்கு முன்னர் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து இருக்கிறார். இப்போது தமிழில் சத்யம் சினிமாஸ் தயாரிப்பில், ஜெயந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 180 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதில் சித்தார்த்துடன் ஜோடி போட்டு இருக்கிறார் நித்யா மேனன். தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாவது குறித்து நித்யா மேனன் கூறியதாவது, தமிழ் சினிமாவில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 180 படத்தின் கதையை கேட்டது மிகவும் பிடித்துவிட்டது. உடன் நடிக்க சம்மதித்து விட்டேன். படத்தில் நான் போட்டோ நிரூபராக நடித்திருக்கிறேன். உண்மையில் நான் போட்டோ நிரூபர் தான். ஆகவே இந்த வேடத்தில் நடிக்கும் போது கஷ்டமாக தெரியவில்லை. தமிழ் ரசிகர்களுக்கு நான் புதுசு. ரசிகர்களுக்கு ஏற்றவாறு அவர்களை திருப்தியளிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். ஆனால் இவை அனைத்தையும் நான் பூர்த்தி செய்து, அவர்களின் விருப்ப நாயகியாக நிச்சயம் வலம் வருவேன். இதுவரை நடித்த மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை காட்டிலும் தமிழில் நடிப்பது தான் மிகவும் பிடித்திருக்கிறது என்கிறார். ஏனென்று கேட்டால் தமிழில் தான் நல்ல படங்கள் எடுக்கப்படுகிறது. எனக்கு ஏற்ற கேரக்டரும் இங்குதான் கிடைக்கும் என்கிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக