பக்கங்கள்

14 ஜனவரி 2012

நான் நடித்ததில் தவறில்லை!

கன்னட நடிகை ரிஷிகா நிர்வாணமாக போஸ் கொடுத்ததைக் கண்டித்து கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் வில்லி வேடத்தில் நடிக்கும் கன்னட படம் ‘யாராத்ரே நானாகெனு’. எஸ்.கே.பஷித் இயக்குகிறார்.
இதில் பிரபல நடிகை நிஷா கோதாரி (ஜேஜே படத்தில் நடித்த அமோகா) போலீசாக நடிக்கிறார். ரிஷிகா சிங்தான் இந்தப் படத்தின் ஹீரோயின். இப்படத்தின் தொடக்க விழா பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு கன்னட பத்திரிகைகளில் நேற்று விளம்பரங்களும் வெளியாயின. அதில் ரிஷிகா சிங் ஆடை எதுவும் இல்லாமல் உடல் முழுவதும் பெயின்ட் அடித்துக்கொண்டு நிர்வாண போஸ் கொடுப்பதுபோன்ற போட்டோ வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஆபாச போஸ் கொடுத்ததற்காக ரிஷிகாவுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தன. பட விழா நடந்த ஸ்டுடியோ முன்பு எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால் இதற்காக ரிஷிகா கவலைப்படவில்லை. அவர் கூறுகையில், "நான் போஸ் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை. படத்துக்கு இக்காட்சி தேவைப்பட்டதால் போஸ் தந்தேன். பரபரப்புக்காக கொடுக்கவில்லை" என்றார். சமீபத்தில் தண்டுபால்யா என்ற படத்தில் பூஜாகாந்தி நிர்வாணமாக நடித்தற்கு கன்னட அமைப்புகள் சில கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து தான் அப்படி நடிக்கவில்லை என அவர் மறுத்திருந்தது நினைவிருக்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக