ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்த எனக்கு ரூ. 50,000 சம்பளப் பாக்கி வைத்துள்ளனர். அதை வசூலித்துத் தர வேண்டும் என்று அந்தப் படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறி விட்டதாக கூறப்பட்டவரான நடிகை நிக்கோல் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ராஜ்கிருஷ்ணா என்பவர் இயக்கும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். ஒரு நடிகையின் கதையாக இது தயாராகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இதில் 2வது நாயகியாக நடித்தவர் நிக்கோல்.
ஆனால் படத்தின் பாதியிலேயே இவர் ஒத்துழைப்பு தராமல் விலகிப் போய் விட்டதாகவும், இதனால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ராஜ்கிருஷ்ணா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் நிக்கோல் நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், இப்படத்தில் நடித்த எனக்கு ரூ. 50,000 சம்பளப் பாக்கி வைத்துள்ளனர். அதை வாங்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகள் பஞ்சாயத்தைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக