பக்கங்கள்

28 ஜூன் 2010

குளிக்கும் போது சேலை உடுத்திக்கொண்டா குளிப்பார்கள்?-ப்ரியா மணி.



கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ப்ரியாமணி. இதையடுத்து அது ஒரு கனாக்காலம், பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் நடித்த பருத்தி வீரன் படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ஆனாலும் கடந்த ஒரு வருடமாக தமிழில் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. ராவணன் படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டு போனார். இப்போது தமிழ் சினிமாவில் அவருக்குப் படங்களே இல்லை. இதுகுறித்து ப்ரியாமணி கூறியது: பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டேன். அதற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் வரவில்லை. தமிழ்ப் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்ன நினைத்து இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று புரியவில்லை. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ராவணன் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மலையாளத்தில் வெளியான திரக்கதா படத்தில் எனக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். சொந்த குரலில் டப்பிங் பேசாததால் அந்த வாய்ப்பை இழந்தேன். ஏதோ நான் மட்டும்தான் கவர்ச்சியாக நடிப்பது போல பேசுகிறார்கள். எல்லா நடிகைகளுமே இப்போது கவர்ச்சியாகத்தானே நடிக்கிறார்கள்... நான் ஒருத்தி மட்டும்தானா பிகினி உடையில் நடித்திருக்கிறேன்? தெலுங்கில் துரோணா படத்தில் ஒரு கனவு காட்சியில்தான் அப்படி நடித்து இருக்கிறேன். எனது உடல் அமைப்புக்கு கவர்ச்சி உடை அணிவது பொருத்தமாக இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்...? என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக