பக்கங்கள்

23 ஜூன் 2011

மீரா ஜாஸ்மினுக்கு திருமணம்.

நடிகை மீரா ஜாஸ்மின் தனது காதலன் மாண்டலின் ரா‌ஜேசை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான ‌தெலுங்கு, கன்னட, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தற்போது மம்பட்டியான் படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பின் சினிமாவுக்கு அவர் முழுக்கு போட முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.
இதற்காக புதுப்பட வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டாராம். மம்பட்டியான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வந்தது என்றும் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மலையாளத்தில் அவர் சமீபத்தில் நடித்து ரிலீசான மூன்று படங்கள் தோல்வி அடைந்து விட்டன. எனவே அங்கும் புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. சினிமாவை விட்டு விலகுவதற்காகவே புதுப்படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று கூறப்படுகிறது. மீராஜாஸ்மினும் மாண்டலின் ராஜேசும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காகவே சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக