பக்கங்கள்

07 ஜூன் 2011

ஊடகவியலாளராக பூனம்.

"கோ" படத்தில் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் கார்த்திகா. அவரைத்தொடர்ந்து பூனம் பஜ்வாவும் "எதிரி எண்-3" படத்தில் பத்திரிகையாளாக நடிக்கிறார். சிக்ஸ்த்சென்ஸ் எனும் புதிய பட நிறுவனம் தயாரிப்பில், ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் "எதிரி எண் - 3". படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இந்த ஜோடியுடன் பிரபு, சம்பத், ஜெய்பிரகாஷ், உமாபத்பநாபன், கிருஷ்ணமூர்த்தி, "கஜினி" ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினியராக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் ஸ்ரீகாந்த் சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாக்கப்படுகிறான். அவரை அதிலிருந்து மீட்டு காப்பாற்றுகிறார் பத்திரிகையாளராக வரும் பூனம் பஜ்வா. படத்தில் பத்திரிகையாளராக நடிப்பதால், இதற்காக பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் முறையாக பயிற்சி பெற்று வருகிறாராம். கூடவே தன்னுடைய வழக்கமான கவர்ச்சி மற்றும் குத்தாட்டத்தையும் ஆடி அசத்தி இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக