'டான்' ஆக இருந்தாலும் 'ஆண்' தானே என்ற அடிப்படையில் பல தாதாக்கள் மீது மோகம் கொண்ட பெண்களை படத்தில் பார்த்திருக்கிறோம். ஏன் நிஜத்திலும் கூட நடிகை மோனிகா பேடியும், தாதா அபு சலேமும் காதல் கொண்ட கதையை நாம் பார்த்துள்ளோம்.
இந்த நிலையில் ஒரு டான், தனது மனதில் நடிகை தீபிகாவை வரித்துக் கொண்டிருப்பதை இப்போது போலீஸார் மூலம் வெளியுலகம் தெரிந்து கொண்டுள்ளது.
அந்த தாதாவின் பெயர் அபய் காந்தி. இவர் தலைமறைவாக இருப்பவர். இவரது வீட்டில் சமீபத்தில் போலீஸார் ஒரு அதிரடி ரெய்டை நடத்தினர். அப்போது அவர்களுக்கு பயங்கர தகவல் கிடைப்பதற்குப் பதில் ஒரு ரொமான்ஸ் விஷயம் சிக்கியது.
கஜினி படத்தில் புகைப்படத்திற்குக் கீழே குறிப்புகளை எழுதி வைத்திருக்கும் ஆமிர்கான் போல, இந்த தாதாவும், நடிகை தீபிகாவின் படத்திற்குக் கீழ் ஜூலை 5ம் தேதிக்குள் இவரை திருமணம் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.
தனது அடுத்த குறி தீபிகாதான் என்றும் அவர் புகைப்படத்தை ஒட்டி அதன் மீது எழுதி வைத்திருந்தார்.
இந்த விஷயம் போலீஸாரை ஆச்ச்ரியப்டுத்தியுள்ளது. அதேசமயம், இந்த தாதாவால் தீபிகாவுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கவலையும் பிறந்துள்ளதாம்.
பாலிவுட்டுக்கும், தாதாக்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது புதிய விஷயமில்லை. மோனிகா பேடி-அபுசலேம் போலவே, மந்தாகினியையும், தாவூத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகின.
1994ம் ஆண்டு தாவூத்துடன் கை கோர்த்துக் காணப்பட்டார் மந்தாகினி. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் இருவரையும் சேர்த்துப் பார்த்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மந்தாகினி பின்னர் மறுத்தார்.
அதேபோல நடிகை டிவிங்கிள் கண்ணாவையும், தாவூத் இப்ராகிமையும் இணைத்துப் பேச்சுக்கள் கிளம்பின.
இந்த நிலையில் கஜினி ஸ்டைலில் தீபிகாவின் படத்திற்குக் கீழ் எனது அடுத்த குறி என்று ஒரு டான் எழுதி வைத்துள்ள விஷயம் பாலிவுட்டில் லேசான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக