துபாயில் நடக்கும் ரெடி படத்தின் பிரிமீயரில் அசின் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. அவரது பாஸ்போர்ட் வேறு ஒரு இடத்தில் முடங்கியுள்ளதால் அசின் கலக்கத்தில் உள்ளார்.
சல்மான் கான்-அசின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ரெடி. இந்த படம் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இதற்கிடையே இன்று துபாயில் ரெடி படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையடப்படுகிறது. இதில் சல்லுவுடன் ஜோடி போட்டுப் போகலாம் என்று அசின் கனவு கண்டு கொண்டிருந்தார். கனவு பலிக்காமல் போய்விடும் போலிருக்கிறது.
அசின் சஜித நாதியாத்வாலாவின் ஹவுஸ்புல் 2 என்ற படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்கான படபிடிப்பு லண்டனில் நடக்கவிருக்கிறது. லண்டன் செல்ல விசா வாங்குவதற்காக அசின் தனது பாஸ்போர்ட்டை தயாரிப்பு நிர்வாகிகளிடம் கொடுத்தார். ஆனால் அது இன்னும் அவர் கைக்கு வந்து சேரவில்லை.
இதற்கிடையே துபாயில் நடக்கும் பிரிமீயர் ஷோவுக்கு போக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கடைசி நிமிடத்தில் பாஸ்போர்ட் கிடைத்தாலும் துபாய்க்கு பறக்க தயாராக இருக்கிறார். தற்போது அவருடைய ஒரே பிரார்த்தனை பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என்பது தான்.
அய்யோ பாவம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக