பக்கங்கள்

14 ஆகஸ்ட் 2016

நா.முத்துக்குமார் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

நா.முத்துக்குமார் குடும்பம்
தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் 41 வயதான நா. முத்துக்குமார் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். மஞ்சள் காமாலை நோயால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார். 1975 ஆம் ஆண்டு பிறந்த நா. முத்துகுமாரின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.இயக்குநர் சீமான் அவர்களின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான நா.முத்துக்குமார் இரண்டுமுறை தேசிய விருது பெற்றவர். தங்க மீன்கள் மற்றும் சைவம் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அவர் ஆயிரத்திற்கு மேலாக திரைப்படங்களில் 1500-க்கு மேலான பாடல்களை எழுதியிருக்கிறார். அவரது மனைவியின் பெயர் தீபலக்ஷிமி. அவருக்கு ஆதவன் என்ற 9 வயது மகனும், யோகலக்ஸ்மி என்ற 8 மாத மகளும் உள்ளனர்.மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெறும் என்றும், மாலை 6 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.41 வயதில் சாவைச் சந்தித்துள்ள முத்துக்குமாரின் மரணத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முத்துக்குமாரின் உடல் தற்போது அவரது அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், பல்துறைப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர்கள் சீமான், சேரன், வெற்றி மாறன், எஸ்.பி. ஜனநாதன், விக்கிரமன், ஆர்.கே.செல்வமணி, ராஜு முருகன், கவிஞர் சினேகன், நடிகர்கள் விவேக், உதயநிதி ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது.முன்னதாக அவரது உடலை சொந்த ஊரான காஞ்சிபுரம் அருகே உள்ள கன்னிகாபுரத்தில் தகனம் செய்ய வேண்டும் என்று அவரது பாட்டி கிருஷ்ணவேணி வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் தற்போது உடல் தகனம் சென்னையிலேயே நடைபெறும் என அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.நா.முத்துக்குமார் என்ற தமிழ்ப் பெருங்கடலுக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது அக வணக்கங்களை செலுத்தி நிற்கின்றது.

06 ஆகஸ்ட் 2016

வியட்னாம் வீடு சுந்தரம் காலமானார்!

http://www.thehindu.com/multimedia/dynamic/01079/11fr-_VIETNAM_VEED_1079718g.jpgபழம்பெரும் திரைப்பட நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. 1970-ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சுந்தரம் அறிமுகம் ஆனார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் உள்ளிட்ட பரிமாணங்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் வீடு' படம் அனைத்துத் தரப்பினரையும், ரசிக்க வைத்த ஒரு வெற்றி படைப்பு. தமிழக அரசால் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்ட படம். வியட்நாம் மீது அமெரிக்கா படை எடுத்தது. அதனால் வியட்நாம், போர்களமாகக் காட்சியளித்தது. சண்டை தொடர்ந்து நடந்ததால், ஒரு போராட்டமான வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் போல ஒரு பிராமணக் குடும்பத்தில் தினமும் எழும் சண்டை சச்சரவுகள் குழப்பம், ரகளை காரணமாக அந்த வீடே, தினம்தோறும் ஒரு வியட்நாம் போல இருப்பதால் அந்த வீட்டிற்கு அங்குள்ளவர்கள் தேர்வு செய்த பெயர்தான் "வியட்நாம் வீடு'.நாடகாசிரியர் கே. சுந்தரம் வியட்நாம் வீடு நாடகம் எழுதினார். நாடகம் பிரபலமானது. ஒரு வார இதழில் தொடராகவும் வெளிவந்தது. நாடக ஆசிரியர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமானார் இந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்தனர். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி டிவி சீரியலில் நடித்த வியட்நாம் வீடு சுந்தரம் தற்போது வள்ளி டிவி சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

19 ஜூலை 2016

17வயதில் 2 மாணவர்கள்!சீரழிந்து போன மாணவியின் வாழ்க்கை!

நெல்லை அருகே 17 வயதுடைய 2 மாணவர்கள் சேர்ந்து, 10வது வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர வைத்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து அக்கிரமத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் ஒருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான மோசஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவர் பாதிக்கப்பட்ட சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமையன்று மெஸ்ஸாக்குக்குப் போன் செய்துள்ளார் அந்த சிறுமி. அப்போது தனது வீட்டுக்கு அருகே ஒரு இடத்தைக் கூறி அங்கு வருமாறு கூறியுள்ளார் மோசஸ்.மாணவியும் தனது வீட்டில் பொய் சொல்லி விட்டு அங்கு போயுள்ளார். அங்கு மோசஸுடன், மேலும் இருவர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நவீன், இவர் ஆட்டோ டிரைவர். இன்னொருவர் ஜான்சன் (பெயர் மாற்றப்பட்டது). பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். மோசஸ் மற்றும் ஜான்சனுக்கு வயது 17 ஆகிறது. அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து கிளம்ப முயன்றார். இதைப் பார்த்த மூவரும் அவரை மடக்கிப் பிடித்து தனியான இடத்திற்குக் கூட்டிச் சென்று மிரட்டி ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்தனர். அதிர்ச்சி, அவமானம், வேதனையுடன் வீடு திரும்பிய மாணவி தனது தாயாரிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸுக்குப் போனால் அவமானமாகி விடுமே என்று பயந்து சொல்லாமல் விட்டு விட்டனர். ஆனால் அடுத்த நாள் காலையில் மனதை தேற்றிக் கொண்ட அவர்கள் மோசஸின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து நடந்ததைக் கூறினர். மோசஸை, தங்களது மகளுக்குக் கட்டி வைக்குமாறு கோரினர். ஆனால் மோசஸ் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.புகாரைப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக மோசஸைக் கைது செய்தனர். தொடர்ந்து ஜான்சும் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட ஆட்டோ டிரைவர் நவீனுக்கு வலை வீசப்பட்டுள்ளது.

15 ஜூன் 2016

பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் காலமானார்!

திருலோகசந்தர்,எம்ஜிஆர் 
தமிழ் திரையுலகில், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர், உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை பிற்பகல் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85.ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் திருலோகசந்தர். எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா திரைப்படத்தை இயக்கினார். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தங்கை, இருமலர்கள், தெய்வமகன், பாரத விலாஸ், எங்கிருந்தோ வந்தாள் உள்பட 25 திரைப்படங்களை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த, வணக்கத்துக்குரிய காதலியே படத்தை இயக்கியுள்ளார்.நடிகர் சிவகுமாரை, ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பில் வெளியான காக்கும் கரங்கள் மூலம் அறிமுகப்படுத்தினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 65 படங்களை இயக்கியுள்ளார் திருலோகசந்தர். தனியாக தயாரிப்பு நிறுவனம் துவக்கி, அதன் மூலம் 9 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தமிழக அரசின், கலைமாமணி விருது, ஃபிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றவர். திரைப்படக்கல்லூரி தலைவராக நான்கு முறை பொறுப்பு வகித்த திருலோகசந்தர், தமிழ்நாடு அரசின் சிறந்த படங்களுக்கான தேர்வுக் குழுவின் தலைவராக பல முறை பொறுப்பு வகித்துள்ளார். அவரது மனைவியும், ஒரு மகனும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். ராஜ் என்ற மகனும், மல்லிகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ் 

29 மே 2016

நடிகை பிரியாமணி நிச்சயதார்த்தம்!

நடிகை பிரியாமணி-முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. பருத்திவீரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பிரியாமணி.இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் வென்றார்.ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி விரைவில் அவரின் காதலியாக மாறினார். இதுகுறித்து பிரியாமணி "நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது திருமணம் நடைபெறும்" என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரியாமணி-முஸ்தபாராஜ் நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள பிரியாமணியின் வீட்டில் விமரிசையாக நடைபெற்றது.இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த வருட இறுதிக்குள் இருவரின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ''நான் சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்'' என்று சினிமா குறித்த கேள்விக்கு பிரியாமணி பதிலளித்திருக்கிறார். முன்னதாக மலையாள இளம் நடிகர்களில் ஒருவரான கோவிந்த் பத்ம சூர்யாவை, பிரியாமணி காதலிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

20 மே 2016

காடையரை விரட்ட பேயாக மாறிய சிறுமி!

இந்தியாவின் டெல்லியில் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க முயன்ற நபர்களிடமிருந்து சிறுமி மிக சாதுர்யமாக தப்பித்துள்ளார். இந்தியாவின் டெல்லியில் இரவு 10 மணியளவில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி நடந்து சென்றுள்ளார். இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு ஆண்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து சிறுமி திடீரென பயங்கரமான குரலில் பேசியும், சிரித்தும் பேயை போன்று நடித்துள்ளார். இதனால் பயந்து போன ஒருவன் ஓட்டமெடுத்துள்ளான், குழப்பத்தில் நின்ற மற்றொருவனை பயமுறுத்துவற்காக குறித்த சிறுமி தன்னுடைய ரத்தத்தை முகத்தில் பூசிக் கொண்டு மிரட்டியுள்ளார், இவனும் பயந்து போய் ஓட்டமெடுத்துள்ளான். இந்த சம்பவம் பற்றி குறித்து சிறுமியின் தோழி முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் என சொல்லப்படுகின்றது.

14 மார்ச் 2016

பிரபல நடிகர் சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை!

சாய் பிரசாந்த்
சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகரான சாய்பிரசாந்த் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த சாய்பிரசாந்த் "நேரம்", "ஐந்தாம் படை" உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.இவர் ஒரு மிமிக்ரி கலைஞரும் ஆவார்.இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ள நிலையில் நேற்று மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இவரது நண்பர்கள் மற்றும் போலீசார் கதவை உடைத்து இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன், தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து வரும் தீராத மனவுளைச்சலே தனது தற்கொலைக்கு காரணமென கடிதம் எழுதிவைத்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிய இவர் நிரஞ்சனா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர். அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவரது மறைவுக்கு புளியங்கூடல் வலைப்பூ குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

07 மார்ச் 2016

கலாபவன் மணி குறித்து மம்முட்டியின் குமுறல்!

கலாபவன் மணி
மறைந்த நடிகர் கலாபவன் மணி மறைவு குறித்து நடிகர் மம்முட்டி தனது வலைப்பூவில் உருக்கமாக எழுதியுள்ளார். அந்தக் குமுறல் நம்மை அப்படியே உருகச் செய்கிறது. அதன் தமிழாக்கம் இங்கே... 'இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. மணி இனிமேல் மாம்பழம், திராட்சைகள் அடங்கிய கூடைகளுடன் என் வீட்டுக்கு வரமாட்டான் என்று. பெங்களுருவில் ஒரு படபிடிப்பில் இருந்தேன். அப்போது தொலைக்காட்சிகளில் ஸ்குரோலிங் ஓடத் தொடங்கியது. மணி இறந்து விட்டார் என்று அதில் செய்தி. சகோதரர் போல பழகியவரின் ஒருவர் மறைவு நம்மை எப்படி பாதிக்கும்? அப்படித்தான் என்னையும் பாதித்தது. என்னால் என்னை தேற்றிக் கொள்ள முடியவில்லை.குனிந்த தலையுடன் கண்ணீர் சிந்திய கண்களுடன் என் வீட்டுக்கு வந்த நாளில் இருந்து எனது வீட்டையும் தனது வீடு போலத்தான் அவன் நினைத்திருந்தான். என்னை ஒரு சகோதரராகவேத்தான் அவன் பார்த்தான். சிகரேட் குடிப்பான். நான் அந்த இடத்துக்கு வந்து விட்டால், கைக்குள் அதனை மறைப்பான். அந்த அன்பை என்னவென்று சொல்வது?'மறுமலர்ச்சி' என்ற தமிழ் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தில் காமெடி நடிகராக நடிக்க வேண்டிய ஒருவர், அவர் கொடுத்தபடி படபிடிப்புக்கு வர முடியவில்லை. அப்போதுதான் இயக்குனநரிடம் கலாபவன் மணி பற்றி நான் கூறினேன். அவரை கூப்பிட்டால், பின்னர் எந்த காரணத்தைக் கொண்டும் திருப்பி அனுப்பக் கூடாது என்ற உறுதி மொழியையும் வாங்கிக் கொண்டேன்.ஏனென்றால் மிகச்சிறந்த நடிகன் அவன். குழந்தை மனம் கொண்ட அவனை எந்தவிதத்திலும் நோக விடக் கூடாது என்பதில் நான் குறியாக இருப்பேன். அதனாலேயே அந்த உறுதி மொழியை நான் வாங்கினேன். மணியை அழைத்துள்ளனர். அவனோ எனக்கு தமிழ் தெரியாதே என்று மறுத்துள்ளான். இது எனக்கு தெரிய வர, மணி மீது கோபம் கோபமாக வந்தது. மணியை போனில் அழைத்து திட்டி தீர்த்து விட்டேன். எவ்வளவு பெரிய வாய்ப்பு மறுக்கிறீயே என்று கத்தினேன். எனது கோபத்தை பார்த்து பயந்த மணி நாளை காலையே அங்கே இருக்கேன் என்றான். இப்படிதான் மணியின் தமிழ் சினிமா பயணம் தொடங்கியது. கடைசி வரை தமிழ் சினிமாவில் டிமான்ட் உள்ள நடிகனாகவேத்தான் மணி இருந்தான். சாலக்குடி பக்கத்துல எனக்கு படபிடிப்பு இருந்தா மணி சூட்டிங் ஸ்பாட்டுக்கே சிக்கன், மட்டன் இன்னும் பல இத்யாதிகளுடன் ஆஜராகி விடுவான். அன்னைக்கு முழுக்க அவன் கையால்தான் சாப்பாடு. மணியே பிரமாதமாக சமைப்பான். எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதனை சூட்டிங் ஸ்பாட்டுலயே செஞ்சு போடுவான்.மணி கொஞ்சம் சேட்டைக்காரன். அது எனக்கும் தெரியும். அவ்வப்போது எனக்கு தகவல் வரும். அவனை கொஞ்சம் கண்டிச்சு வைனு. நான் போனில் கூப்பிட்டு சத்தம் போடுவேன். இனிமேல் அப்படி நடக்காது என்பான். அமைதியாக கேட்டுக் கொள்வான். கார்ல் லீவிஸ் அவனுக்கு பிடித்த வீரர். அவரது உடல் அமைப்பை பார்த்து மயங்கிய அவன், தன்னையும் கார்ர் லீவிஸ் என்றே அழைக்கும்படி கூறுவான். மணி மிகச்சிறந்த நாட்டுப்புறக் கலைஞன். 100க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளான். பாடியுள்ளான். நாட்டுப்புற பாடல்கள் குழுவை உருவாக்கி நடத்தியும் வந்தான். ஒரு முறை வளைகுடா நாடு ஒன்றில் நிகழ்ச்சி. மணி மலையாள மொழியில் நாட்டுப்புற பாடல் ஒன்றை மேடையில் பாடுகிறான். அந்த நிகழ்வில் இருந்த அரேபியர்களுக்கு மலையாளம் தெரியாது. ஆனால் அந்த மக்கள் தன்னை மறந்து மேடைக்கு கீழே ஆடிக் கொண்டே இருக்கின்றனர். அதனை பார்த்து எனக்கு வியப்பு ஏற்படவில்லை. ஏனென்றால் மணியின் உடல் மொழி பாஷைகளை கடந்தது!

23 ஜனவரி 2016

மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் ஜோடி சேரும் பிரியா ஆனந்த்!

கவுதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘வை ராஜா வை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இந்த ஜோடி மீண்டும் ‘முத்துராமலிங்கம்’ படம் மூலம் இணைந்திருக்கிறது. இவர்களுடன் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து என முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இப்படத்தை ராஜதுரை இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார். இப்படம் மூலம் மூன்று தலைமுறைகளுக்கு பாடல்கள் எழுதிய பெருமை அவருக்கு உண்டு. மேலும் பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் இணைந்து 40 ஆண்டு காலமாக திரையுலகில் பவனி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் இவர்கள் இணைந்திருக்கிறார்கள்.