பக்கங்கள்

15 ஜூன் 2016

பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் காலமானார்!

திருலோகசந்தர்,எம்ஜிஆர் 
தமிழ் திரையுலகில், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர், உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை பிற்பகல் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85.ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் திருலோகசந்தர். எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா திரைப்படத்தை இயக்கினார். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தங்கை, இருமலர்கள், தெய்வமகன், பாரத விலாஸ், எங்கிருந்தோ வந்தாள் உள்பட 25 திரைப்படங்களை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த, வணக்கத்துக்குரிய காதலியே படத்தை இயக்கியுள்ளார்.நடிகர் சிவகுமாரை, ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பில் வெளியான காக்கும் கரங்கள் மூலம் அறிமுகப்படுத்தினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 65 படங்களை இயக்கியுள்ளார் திருலோகசந்தர். தனியாக தயாரிப்பு நிறுவனம் துவக்கி, அதன் மூலம் 9 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தமிழக அரசின், கலைமாமணி விருது, ஃபிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றவர். திரைப்படக்கல்லூரி தலைவராக நான்கு முறை பொறுப்பு வகித்த திருலோகசந்தர், தமிழ்நாடு அரசின் சிறந்த படங்களுக்கான தேர்வுக் குழுவின் தலைவராக பல முறை பொறுப்பு வகித்துள்ளார். அவரது மனைவியும், ஒரு மகனும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். ராஜ் என்ற மகனும், மல்லிகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக