பக்கங்கள்

14 ஆகஸ்ட் 2016

நா.முத்துக்குமார் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

நா.முத்துக்குமார் குடும்பம்
தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் 41 வயதான நா. முத்துக்குமார் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். மஞ்சள் காமாலை நோயால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார். 1975 ஆம் ஆண்டு பிறந்த நா. முத்துகுமாரின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.இயக்குநர் சீமான் அவர்களின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான நா.முத்துக்குமார் இரண்டுமுறை தேசிய விருது பெற்றவர். தங்க மீன்கள் மற்றும் சைவம் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அவர் ஆயிரத்திற்கு மேலாக திரைப்படங்களில் 1500-க்கு மேலான பாடல்களை எழுதியிருக்கிறார். அவரது மனைவியின் பெயர் தீபலக்ஷிமி. அவருக்கு ஆதவன் என்ற 9 வயது மகனும், யோகலக்ஸ்மி என்ற 8 மாத மகளும் உள்ளனர்.மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெறும் என்றும், மாலை 6 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.41 வயதில் சாவைச் சந்தித்துள்ள முத்துக்குமாரின் மரணத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முத்துக்குமாரின் உடல் தற்போது அவரது அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், பல்துறைப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர்கள் சீமான், சேரன், வெற்றி மாறன், எஸ்.பி. ஜனநாதன், விக்கிரமன், ஆர்.கே.செல்வமணி, ராஜு முருகன், கவிஞர் சினேகன், நடிகர்கள் விவேக், உதயநிதி ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது.முன்னதாக அவரது உடலை சொந்த ஊரான காஞ்சிபுரம் அருகே உள்ள கன்னிகாபுரத்தில் தகனம் செய்ய வேண்டும் என்று அவரது பாட்டி கிருஷ்ணவேணி வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் தற்போது உடல் தகனம் சென்னையிலேயே நடைபெறும் என அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.நா.முத்துக்குமார் என்ற தமிழ்ப் பெருங்கடலுக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது அக வணக்கங்களை செலுத்தி நிற்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக