பக்கங்கள்

02 ஜனவரி 2012

முதல்வரின் நடன ஆசிரியை மரணம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரபல நடிகர் கமல்ஹாஸன் உள்ளிட்டோருக்கு நடனம் கற்றுத் தந்த கே ஜே சரஸா இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 72.
சென்னை மந்தவெளியில் சரசாலயா என்ற பெயரில் நடனப்பள்ளி நடத்தி வந்தார் சரஸா.
நடிக்க வரும் முன்பும், நடிகையான பின்பும் இவரிடம்தான் நடனம் கற்றுக் கொண்டாராம் இன்றைய முதல்வர் ஜெயலலிதா. பிரபல நடிகர் கமல்ஹாஸனுக்கும் ஆரம்ப நாட்களில் நடன ஆசிரியை சரஸாதான்.
இவர்களைத் தவிர, பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராம், பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கும் நடிகை ஷோபனா, சொர்ணமால்யா போன்றவர்களும் நடனம் கற்றுக் கொண்டனர்.
இன்று காலை மலர் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
சரஸா கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது தங்கை சீதாவின் மகள் ராஜலட்சுமியை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இந்த ராஜலட்சுமி முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக