பக்கங்கள்

05 ஜனவரி 2012

நமீதாவும் காதலும்.

வக்கீல் ஒருவருடன் காதல் என பத்திரிகைகளில் என்னைப் பற்றி வந்துள்ள செய்தி இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று கூறியுள்ளார் நடிகை நமீதா.
தமிழ் சினிமாவின் கவர்ச்சிப் புயல் நடிகை நமீதா. அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், இப்போது நல்ல கதையுள்ள வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிஸியாக உள்ளார்.
நடிப்புத் தொழிலுடன் கூடவே, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால்பதித்துள்ளார். இதற்கென மும்பையில் பெரிய அலுவலகம் அமைத்துள்ளார். ஆம்பி வேலி, சென்னை உள்ளிட்ட இடங்களில் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ள நமீதா, பெரும்பாலும் தங்குவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில்தான்.
இந்த நிலையில் நமீதா தனது நண்பர் பரத் கபூரைப் பிரிந்து, வக்கீல் ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து நமீதாவைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
செய்தியைக் கேட்டு சிரித்த நமீதா, அடுத்து இப்படிச் சொன்னார்:
"சினிமாவில் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் இதுவாகத்தான் இருக்கும். என் அலுவலகத்தில் மூன்று வக்கீல்கள் இருக்கிறார்கள். மூவருக்கும் வயது 60க்கும் மேல்!
60 வயதுக்கு மேற்பட்ட ஒருவருடன் சுற்ற வேண்டிய அவசியம் எனக்கு ஏன் வரப்போகுது... எழுதுவதற்கு முன் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாங்களா?
தயவு செய்து எங்கப்பா கிட்ட இந்த சமாச்சாரத்தை சொல்லிடாதீங்க. ஏன்னா எங்க ஆபீஸ்ல இருக்கிற மூன்று வக்கீல்களின் வேலையும் போயிடும். வயசானவங்க பாவம் சும்மா விடாது!" என்றார் மாறாத சிரிப்புடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக