உத்தர பிரதேசத்தில் இடம்பெற இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின்போது புகழ்பெற்ற தனுஷின் 'கொல வெறி' பாடலை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பாடலின் உரிமையைப் பெற நடிகர் தனுஷுடன் காங்கிரஸார் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பாடல் உரிமையைக் கொடுக்க முதலில் தனுஷ் மறுத்ததாகவும் அதன் பிறகு ராஜ்பாபர் எம்.பி. அவரை சம்மதிக்க வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பில் தனுஷ் கருத்து தெரிவிக்கையில் 'பாடல் உரிமையை வாங்கும் முயற்சி நடப்பது பற்றி எனக்கு தெரியாது. அந்த பாடலின் உரிமை சோனி நிறுவனத்திடம் உள்ளது.
பாடல் தொடர்பில் அந்நிறுவனத்தாரிடம் பேசினார்களா என்றும் எனக்கு தெரியாது இருப்பினும் அது அரசியல் பாடல் அல்ல என தனுஷ் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக