பிரபு தேவாவுடன் இப்போதைக்கு கல்யாணம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் நடிகை நயன்தாரா.
இத்தனை நாள் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருந்த அவர், இன்று புதிதாக ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தப் படத்தில் அவர் நாகார்ஜூனாவின் காதலியாக நடிக்கிறார். தசரத் இயக்கும் இந்தப் புதிய படம் முழுக்க முழுக்க காதல் கதையாகும். நாகார்ஜுனாவுடன் ஏற்கெனவே பாஸ் ஐ லவ்யூ படத்தில் நடித்துள்ளார் நயன்.
மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் நடிப்புக்கு தான் குட்பை சொல்லவில்லை. தொடர்ந்து நடிப்பேன் என்று அறிவி்த்துள்ளார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவும் அவர் தயாராகி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக