தமிழ் திரை உலகின் அழகு நிலா அமலா பால். ஒல்லியான தேகம், வசீகரிக்கும் தோற்றம். இன்றைய இளைய தலைமுறை நடிகைகளிலேயே இளைஞர்கள் மட்டுமல்லாது கல்லூரி மாணவிகளிடமும் அதிக மதிப்பெண் பெற்று அழகு நிலாவாக திகழ்கிறார் அமலா பால். மைனாவில் பாவடை தாவணியில் ஆகட்டும், சமீபத்திய வேட்டையில் மாடர்ன் உடையில் கலக்கியது ஆகட்டும் அவரது உடலமைப்பிற்கு அனைத்துமே கச்சிதாமாக பொருந்தியது. அவரது உடல் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. அது குறித்து அவரே பகிர்ந்து கொண்டது.
ஜங்க் புட் கூடாது:
பசிக்கிறது என்பதற்காக ஜங்க் புட் வகைகளை எந்த சூழ்நிலையிலும் தொடவே கூடாது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும், சத்தான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் இதுதான் என்னுடைய முதல் அட்வைஸ். குண்டான பெண்கள் கண்ட கண்ட ரசாயணங்கள் அடங்கிய மருந்துகளை உட்கொள்வதை விட ஆயுர்வேதா மருந்துகளை உட்கொள்ளவது அவசியம்.
நீச்சல் பயிற்சி:
மனதையும், உடலையும் லேசாக்குவது நீச்சல்தான். எத்தனை வேலை இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது நீந்துவது மிகவும் பிடித்தமானது.
நோ டென்சன், கூல்:
சில வருடங்களுக்கு முன்வரை சரியான டென்சன் பார்ட்டி நான். அது முகத்தில் பிரதிபலித்து சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இப்பொழுது இடியே விழுந்தாலும் டென்சன் பற்றி கவலைப்படாமல் கூலாக சுற்றிக்கொண்டிருப்பேன். அது அழகில் அப்படியே பிரதிபலிக்கிறது.
அழகும் ஆரோக்கியமும்:
எப்பவுமே சிரிச்ச முகமா இருக்கணும். அழகும் ஆரோக்கியமும் மனசு சம்பந்தப்பட்டது. நல்ல சாப்பாடு, தீவிரப் பயிற்சின்னு இருந்தாலும், மனசுல மகிழ்ச்சி இல்லைன்னா, உடம்பு கன்ட்ரோலை இழந்துடும். எனவே எப்பவுமே மகிழ்ச்சியோட இருந்தா உடலும், மனசும் ஆரோக்கியமாகும். இதுவே என்னோட அழகு ரகசியம் என்று கூறிவிட்டு புன்னகை சிந்தினார் அமலாபால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக