07 ஏப்ரல் 2011
பிரபல நடிகை சுஜாதா காலமானார்!
அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் பிரபலமான நடிகை சுஜாதா உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று(06.04.11) காலமானார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "அவள் ஒரு தொடர்கதை" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜாதா. 1968ல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 300 படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தமிழில் சிவாஜி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் சுஜாதா. இவரது நடிப்பில் வெளிவந்த அந்தமான் காதலி, அண்ணக்களி, அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், விதி உட்பட பல படங்கள் பிரபலமானவை. நடிகையாக நடிக்க ஆரம்பித்து பின்னர் அம்மா மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார். இந்நிலையில் சிறிதுகாலம் நடிக்காமல் இருந்து வந்த சுஜாதா கடைசியாக 2004ம் ஆண்டு அஜீத்தின் வரலாறு படத்தில் நடித்தார். அதன்பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டார் சுஜாதா. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை சுஜாதா சென்னையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சுஜாதாவின் உடல் நிலைமை மோசமடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவர் நேற்று(06.04.11) மரணம் அடைந்தார். மலையாளத்தை சேர்ந்தவரான சுஜாதா, 1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இலங்கையில் பிறந்தவர். இவருக்கு திவ்யா என்ற மகளும், ஷாஜித் என்ற மகனும் உள்ளனர். சுஜாதாவின் கணவர் ஜெயகர் தொழிலதிபராக இருக்கிறார். சுஜாதாவின் மறைவிற்கு பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துளள்னர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக