11 ஏப்ரல் 2011
தொலைக்காட்சி நிகழ்வில் பரபரப்பு நாயகி பூனம்!
இந்திய அணி உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக வலம் வருவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் மாடல் அழகி பூனம் பாண்டே. இந்திய அணியும் உலக கோப்பை வென்று வரலாற்று சாதனை படைத்தது. உலகம் முழுவது உள்ள இந்தியர்கள் இந்த வெற்றியை கொண்டாடினர். இதனையடுத்து அனைவரின் பார்வையும் பூனம் பாண்டேவை நோக்கி திரும்பியது. இந்நிலையில் பூனமின் இந்த கருத்துக்கு சிவசேனா அமைப்பிடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பியதால் அமைதியானார் பூனம் பாண்டே. இதனிடையே தனியார் டி.வி., ஒன்றில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் தோன்ற இருக்கிறார் பூனம் பாண்டே. இதனை அந்த டி.வி., நிறுவனமும் உறுதிபடுத்தி இருக்கிறது. விரைவில் டி.வி., நிகழ்ச்சியில் கலக்க இருக்கிறார் பூனம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக