ரஜினியின் ராணா படத்தி்ல் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் எனது திரையுலக வாழ்க்கைக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது, என்கிறார் பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன்.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் இளைஞராக வரும் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா படுகோன் கூறுகையில், "ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது இத்தனை சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை. அடுத்தடுத்த படங்களில் நான் பிஸாயாக இருந்தேன். ஆனாலும், யாருக்கு நான் விசிறியாக இருந்தேனோ, அவருடன் ஜோடியாகவே நடிக்க வாய்ப்பு வந்ததால், இந்தப் படத்துக்கே முன்னுரிமை தந்தேன்.
என்னைப் பொறுத்தவரை, எனது கேரியருக்குப் பெருமையும் அங்கீகாரமும் ரஜினி சாருடன் நடிப்பதால் கிடைத்துள்ளது என நம்புகிறேன்", என்றார்.
ரஜினியின் மற்ற இரு ஹீரோயின்கள் குறித்து இன்னும் மவுனம் காக்கிறது ராணா தரப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக