வேலாயுதம், உருமி, தெலுங்கு-இந்திப் படங்கள் என பிஸியாக இருந்தாலும், நேரம் கிடைக்கும்போது தன்னால் முடிந்த சேவையையும் செய்கிறாராம் ஜெனிலியா.
தற்போது நைட் கிளப் பார் ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அபலை பெண்களுக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளாராம் ஜெனிலியா.
இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், "ஆதரவற்ற பெண்களுக்கும், கஷ்டப்படுகிற பெண்களுக்கும் உதவி செய்கிற அமைப்பு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நைட் கிளப்பில் ஒரு நாள் முழுவதும் இருக்க முடிவு செய்துள்ளேன். அங்கு வருபவர்களை வரவேற்பேன், கலந்துரையாடவும் செய்வேன். இது போன்ற சமூக சேவை பணிகளில் எனக்கு ஈடுபாடு உண்டு.
கொடுமைகள், கஷ்டங்களை எதிர்த்து போராடும் பலம் பெண்களிடம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவு கொடுத்தால் அந்த பெண்ணின் குடும்பமே நன்றாக இருக்கும், அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். அதனால்தான் என்னால் முடிந்த இந்த உதவியைச் செய்கிறேன்", என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக