பக்கங்கள்

07 பிப்ரவரி 2011

திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்!

ஸ்ரேயா இன்றைக்கு வெறும் நடிகை மட்டுமல்ல, பல கல்வி மையங்களில் கவுரவ விரிவுரையாளர் ரேஞ்சுக்கு சினிமா பற்றி பாடங்கள் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் அகமதாபாத் ஐஐஎம்மில் கூட உரையாற்றினார். சென்னை ஐஐடியில் கூட பேசியிருக்கிறார்.
சினிமாவின் வெற்றி தோல்வி, மார்க்கெட்டிங் முறைகள் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்கிறார், நுனி நாக்கு ஆங்கிலத்தில்.
சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில்,
"தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் என்ற ஆங்கில படத்தில் இப்போது நடித்து வருகிறேன். இது எனக்கு மூன்றாவது ஆங்கில படம். தமிழ், ஹாலிவுட் படங்களில் பெரிய வித்தியாசம் இல்லை.
இயக்குனர்கள், கதைகள் மற்றும் படங்களை எடுக்கும் முறைகள் போன்றவைகளே படத்தின் தரத்தை நிர்ணயிக்கின்றன. வெற்றி-தோல்வி கடவுள் கையில் உள்ளது. சில நேரம் திறமையான நடிகர்கள் கூட பிரபலமாக முடியாமல் உள்ளனர்.
கலைஞர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். எவ்வளவு கஷ்டத்திலும் எழுந்து நிற்பேன் என்று நம்ப வேண்டும். வாரிசு நடிகர்களால் மட்டுமே நிலைக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இந்தியாவில் உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் யாரும் வாரீசு நடிகர்கள் இல்லை. திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்", என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக