இந்த ஆண்டு இரு முன்னணி நடிகைகளின் திருமணத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். ஒன்று நயன்தாரா. அடுத்து? த்ரிஷா! ஆம்... த்ரிஷாவுக்கு போரடித்து விட்டதாம் சினிமா.
ரசிகர்களும் கிட்டத்தட்ட அதே மனநிலைக்கு வந்துவிட்டதை அவரும் உணர்ந்து விட்டதால், திருமணம் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறாராம்.
இந்திப் படங்களில் பெரிதாகக் கலக்கலாம் என்ற ஆசையில் மும்பையில் ஃப்ளாட் எடுத்துக் கூட தங்கிப் பார்த்தார். ஆனால் நடித்த ஒரே படமும் தோல்வியடைந்து விட்டதால் வேறு வாய்ப்புகள் இல்லாத நிலை. சில பாலிவுட் உப்புமா கம்பெனிகள் தான் அவரைத் தேடி வந்தார்களாம். இனி மும்பை வேலைக்காகாது என்று உணர்ந்து ஃப்ளாட்டைக் காலி செய்து விட்டு சென்னைக்கு வந்தார்.
அப்போதே த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கி விட்டாராம். மாப்பிள்ளை சரியாக அமையும் பட்சத்தில் இந்த ஆண்டே திருமணம் என்கிறார்கள் த்ரிஷா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.
இப்போதைக்கு தெலுங்கில் இரு படங்கள், தமிழில் அஜீத்துடன் மங்காத்தா என மூன்று படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. வேறு புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படங்கள் முடிந்ததும், திருமண அறிவிப்பை வெளியிடக் கூடும் என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக