21 பிப்ரவரி 2011
ரஜனிகாந்த் ஜோடி சினேகா!
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சினேகாவிடம் பேசி வருகிறார்கள். நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலானாலும் ரஜினிக்கு மட்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை சினேகாவுக்கு. குசேலன் படத்தில் ரஜினியுடன் ஒரு காட்சியில் மட்டும் தோன்றினார். இப்போது ராணாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ரஜினி மூன்று வேடங்களில் தோன்றும் இப்படத்தில் தீபிகா படுகோன் மட்டுமே ஹீரோயினாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் இரு நாயகிகளாக அனுஷ்கா மற்றும் அசின் நடிக்கக் கூடும் என்றார்கள். ஆனால் அசின் நடிக்க ரசிகர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே நிச்சயம் அசின் நடிக்கமாட்டார் என்கிறார்கள். இப்போது அந்த வேடத்துக்குதான் சினேகாவிடம் பேசியுள்ளனர் ராணா தரப்பிலிருந்து. ஏற்கெனவே ரஜினி மகள் சௌந்தர்யாவின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோ தயாரித்த கோவா படத்தில் நாயகியாக நடித்தவர் சினேகா. எனவேதான் மீண்டும் சினேகாவையே அணுகியுள்ளனராம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக