பத்து ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகை ஜோதிர்மயி. தலைநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிர்மயி. நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சினிமா நடிகை ஆகி விட்டாலும், அவர் நிஷாந்த் என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரை காதலித்து வந்தார். 10 ஆண்டுகளாக நீடித்த காதல் கடந்த ஆண்டு திருமணத்தில் முடிந்தது. திருமணமான புதிதில் புது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஜோதிர்மயி, தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். கணவர் சம்மதத்துடன் திரையில் தோன்றுவதாக கூறி வந்த ஜோதிர் மயிக்கும், கணவர் நிஷாந்துக்கும் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஜோதிர்மயி, கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்பநல கோர்ட்டில் ஜோதிர்மயி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக