பாலிவுட்டில் நடிகர், நடிகைகள் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது புதிதல்ல.
இதுபோன்ற காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியும் படத்தின் கேரக்டருக்கு அது கட்டாயமாக இருக்கிறது என்பதே இயக்குனர்களின் கருத்து.
சமீபமாக பேஷன் என்ற படத்தில் கணக்கே இல்லாமல் சிகரெட்டுகளை ஊதித் தள்ளிய ப்ரியங்கா சோப்ரா அப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
தற்போது நடிகை தீபிகா படுகோனே தும்மர தும் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் புகை பிடித்தப்படி நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார் இயக்குனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இது பற்றி அவர் கூறும்போது புகை பிடிப்பது போல் நடிக்க விருப்பம் இல்லை. அது மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றார்.
இயக்குனர் ரோகன்சிப்பி கூறும்போது, தீபிகா படுகோனேவை புகை பிடிப்பதுபோல் நடிக்க கேட்டுக் கொண்டேன். அவர் முடியாது என்று மறுத்து விட்டார் என்றார்.
தீபிகா படுகோனே ரஜினியின் அடுத்தப் படமான ராணா படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக