சினிமாவில் தான் நடிகர், நடிகையர் இடையே போட்டியென்றால் இப்போது விளம்பரங்களிலும் இந்த போட்டி அதிகமாகிவிட்டது. அதிலும் அசின், த்ரிஷா இடையேயான போட்டி சொல்லவே தேவையில்லை, அந்தளவிற்கு இருவருக்கும் கடுமையான போட்டி நடைபெறும். இதுவரை அசின் நடித்து வந்த விளம்பரம் ஒன்றில், இப்போது த்ரிஷா நடிக்க இருக்கிறார். இதனால் த்ரிஷா மீது மிகுந்த கடுப்பில் இருக்கிறார் அசின்.
பிரபல அழகு சாதன நிறுவனமான பேர்எவர் பேர்னஸ் க்ரீம் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை அசின் நடித்து வந்தார். இதற்காக பெருந்தொகையை அசின் சம்பளமாக பெற்று வந்தார். ஆனால் இப்போது திடீரென்று அந்த நிறுவனம் அசினை தூக்கிவிட்டு, அந்த இடத்தில் த்ரிஷாவை நியமித்துள்ளது. சிலதினங்களுக்கு முன்னர்தான் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் பேர்எவர் விளம்பரத்தில் அசினுக்கு பதிலாக த்ரிஷா தான் தோன்றுவார்.
இதுவரை சினிமாவில் மட்டுமே போட்டியாக வந்த த்ரிஷா, இப்போது விளம்பர படங்களிலும் போட்டியாக வந்துவிட்டார் என்று த்ரிஷா மீது கோபத்தில் இருக்கிறார் அசின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக