கமலுக்காக காத்திருக்கிறேன் என்று பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கூறியிருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி நடிக்கிறார். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியை விட ஒரு வயது இளையவரான சோனாக்ஷி, ஏற்கனவே அளித்த பேட்டியொன்றில், வயது வித்தியாசம் பெரிய விஷயமே இல்லை, என்று கூறினார்.
இந்நிலையில் அவர் அளித்திருக்கும் புதிய பேட்டியில், கமல்ஹாசனை பார்க்க ஆசையுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார். கமல்ஹாசனுடனான புதிய படத்தின் சூட்டிங் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் மிகப்பெரிய நடிகர். அவருடன் நடிப்பது பெருமையான விஷயம். அவரை இதுவரை நான் நேரில் பார்த்ததில்லை. அவருடன் நடிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், என்று கூறியிருக்கிறார் சோனாக்ஷி.
நடிகை சோனாக்ஷி தமிழில் கமல்ஹாசனுடன் புதிய படத்தில் கமிட் ஆகியிருந்தாலும் பாலிவுட்டில்தான் அதிக அளவில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியிருக்கிறார் அம்மணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக