பக்கங்கள்

17 ஜனவரி 2011

முன்னணி நடிகை பட்டியலில் அஞ்சலி!

தமிழ் சினிமாவின் அடுத்த முன்னணி நடிகைகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுபவர்களில் முக்கியமானவர் என்றால் அது அஞ்சலிதான் என்று கோடம்பாக்கத்தில் யாரைக் கேட்டாலும் டக்கென சொல்லிவிடுவார்கள்.
சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை அங்காடித்தெரு படத்தில் பெற்ற அஞ்சலிதான் முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் இப்போதைய ஏகோபித்த தேர்வாக இருக்கிறார். மகிழ்ச்சி படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாகவே நடித்த அஞ்சலி, விமல் நடிக்கும் தூங்கா நகரத்தில் துடுக்குத்தனமான மதுரைக்காரப் பெண்ணாக நடித்துவருகிறார்.
அதோடு அஜீத்தின் மங்காத்தா ஆட்டத்திலும் ஒருகை போடுகிறார் அஞ்சலி. மங்காத்தாவில் அஞ்சலிக்கு ஜோடி வைபவ்தான் என்றாலும், தல படம் என்பதால் டபுள் சந்தோஷத்தோடு தலையாட்டிவிட்டாராம். அஜீத்தின் படத்தில் நடிக்கும் குஷியில் இருக்கும் அஞ்சலிக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளும் குவிகின்றன.
விக்ரமின் அடுத்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவிருக்கிறார். ‘மைனா’ புகழ் அமலா பாலுக்கு கிடைக்கவிருந்த இந்த வாய்ப்பு அஞ்சலிக்கு கைமாறி இருப்பதுதான் இதில் ஸ்பெஷல். விக்ரம், அனுஷ்கா நடித்துவரும் 'தெய்வமகன்' படத்தில் அமலா பாலும் இன்னொரு கதாநாயகி. தெய்வமகனுக்கு அடுத்து சுசீந்திரனின் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்திலும் அமலா பாலையே நாயகியாக்குவதாக அவருக்கு உறுதியளித்திருந்தாராம் விக்ரம்.
ஆனால் அந்த வாய்ப்புதான் இப்போது அஞ்சலிக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் அமலா பாலையே நாயகியாக்கலாம் என்பது விக்ரமின் விருப்பமாக இருந்தாலும், இந்தக் கதைக்கு அஞ்சலிதான் மிகவும் பொருத்தமானவர் என்று கூறிவிட்டாராம் இயக்குனர் சுசீந்திரன். இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்திற்கான மற்றொரு நாயகிக்காக மும்பை பக்கம் வலைவிரித்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக