பக்கங்கள்

30 செப்டம்பர் 2011

நடிப்பாரா ஸ்ரீதேவியின் மகள்?

“படத்துக்கு படம் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’ படம் மூலமாக அறிமுகமாகிறார் நடிகர் பிரபு மகன் விக்ரம். மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக் மகன் கவுதம் நடிக்க பேச்சு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் கலக்கியவர் ஸ்ரீதேவி. அவரது மகள் ஜான்வி தெலுங்கு படத்தில் ராம்சரண் தேஜா ஜோடியாக நடிப்பார் என்று தகவல் பரவியது.
இதைக்கேட்டு கோபம் அடைந்த ஸ்ரீதேவி, எந்த துறையில் ஈடுபடுவது என்பது பற்றி இன்னும் ஜான்வி முடிவு செய்யவில்லை. இப்போது படித்துக்கொண்டிருக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் 18 வயதுக்கு பிறகுதான் அவளிடம் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்றே கேட்பேன்” என்றார். மீடியாதான் என் மகள் நடிக்கிறாள் என்று கிளப்பிவிட்டிருக்கின்றன. நடிப்பாரா? இல்லையா? என்பதை சொல்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.
அப்படி நடிப்பதென்றால் அவரை பாலிவுட்டிலேயே என்னால் அறிமுகப்படுத்த முடியும். அதைவிட்டு ஏன் தெலுங்கு படத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்றார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்.
அம்மா ஒன்னு சொல்றாங்க; அப்பா ஒன்னு சொல்றாரு.. யாரு சொல்றதத்தான் நம்புறது…?

25 செப்டம்பர் 2011

சோனாவிற்கு மகளிர் அமைப்பு துணை!

மது விருந்தில் கலந்து கொண்ட தனக்கு எஸ்.பி. பி. சரண் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். சோனா சென்னை கமிஷனரை சந்தித்து வீடியோ ஆதாரம் ஒன்றையும் கொடுத்தார். இந்த வழக்கில் எஸ்.பி. பி. சரண் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை சோனாவுக்கு ஆதரவு தெரிவித்து எஸ். பி. பி. சரண் வீட்டுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத் தலைவி கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது. சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

22 செப்டம்பர் 2011

ஸ்ரேயா கோஷலும் நடிகையாகிறார்!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிப்பு சேவையை துவக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் சினிமா பின்னணி பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். பல மொழிகளிலும் 180க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடி, 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில் விண்ணை தாண்டி வருவாயா, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் பாடியதற்காக பல விருதுகளைக் குவித்தவர். கோஷல் பார்க்க சினிமா நடிகைகளைப் போலவே படு அழகாக இருப்பார். இதனால் அவரை நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் அவர் ஜகா வாங்கிக் கொண்டே வந்தார்.
எல்லாருக்கும் 'நோ' என்ற பதிலை மட்டுமே கொடுத்து வந்த கோஷலும் இப்போது நடிப்பு வலையில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இயக்குநர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு மெய்மறந்து போய் விட்டாராம். அந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
ஏற்கனவே உள்ள ஒரு ஸ்ரேயா வழங்கும் 'நடிப்புச் சேவையில்' திளைத்து வரும் ரசிகர்களுக்கு கலை சேவையாற்ற இன்னோரு ஸ்ரேயா வருகிறார். 'டபுள் டிலைட்'தான். இனி நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா, முத்தக் காட்சியில் நடிப்பீர்களா என்ற பழைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஸ்ரேயா கோஷலும் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

18 செப்டம்பர் 2011

சேலை கட்ட இஷ்டமில்லை!

மைனா புகழ் அமலா பால் எந்த விழாக்களுக்கு வந்தாலும் மாடர்ன் டிரஸ்ஸில் தான் வருகிறார். அவரைப் புடவையில் பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டுமே அது சாத்தியம். காரணம் அவருக்கு சேலை கட்டுவதில் இஷ்டம் இல்லையாம், அது கஷ்டமான வேலை என்கிறார்.
அழகாக இருக்கிறீர்கள், லட்சணமாக தழையத் தழைய அழகாக புடவை அணிந்து வரலாமே என்று கேட்டால், விழாக்களுக்கு புடவையில் வருவது கஷ்டம். புடவை கட்ட நேரமாகும். அதனால் தான் விழாக்களுக்கு நான் புடவை கட்டி வருவதில்லை என்றார்.
யாராவது விழா ஏற்பாட்டாளர்கள் அம்மணியை புடவையில் வரச் சொன்னாலும் கூட ஸாரிங்க என்று 'சாரி' கட்ட மறுத்து விடுகிறாராம்.
தெய்வத் திருமகள் படத்தில் வண்ண வண்ண புடவைகளில் வந்து அசத்தினாரே, நிஜத்திலும் அப்படி வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
என்ன பண்றது, கொசுவம் வைத்து சேலை கட்ட அமலாவுக்கு கஷ்டமா இருக்குதாமே...!

14 செப்டம்பர் 2011

ரஜனியிடம் அடிவாங்க ஆசை!

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.
அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:
எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.
சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.
ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"என்றார் அஜித்.

11 செப்டம்பர் 2011

த்ரிஷாவை கடுப்பாக்கிய லட்சுமி ராய்!

அஜீத் ஜோடி மற்றும் வில்லி கேரக்டரில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு தன்னிடம் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாக லக்ஷ்மி ராய் தெரிவித்ததால் த்ரிஷா கடுப்பாகியுள்ளார். ராயைப் போட்டுத் தாக்கியுள்ளார்.
மங்காத்தாவில் த்ரிஷா நடித்த கேரடக்டருக்கு தன்னைத் தான் வெங்கட் பிரபு முதலில் அணுகினார் என்றும், அஜீத் ஜோடி, வில்லி கேரக்டரில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு கூறியதாகவும் நடிகை லட்சுமி ராய் தெரிவித்துள்ளார். ஆனால் இதை இயக்குனர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். தான் த்ரிஷாவைத் தான் அஜீத் ஜோடியாக நடிக்கக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த த்ரிஷா கடுப்பாகிவிட்டாராம். என்ன இந்த லக்ஷ்மி ராய் இப்படி அல்பத்தனமாக நடந்து கொள்கிறாரே என்று எரிச்சல் அடைந்துள்ளாராம். அம்மாடி இப்படி பொய் சொல்கிறாரே லக்ஷ்மி ராய் என்று மங்காத்தா யூனிட்டும் கூட கடுப்பாகியுள்ளதாம்.
மங்காத்தா படத்தில் நடிக்கப் போய் இப்படி திரிஷாவை காஞ்சனா ரேஞ்சுக்கு மாற்றி விட்டாரே லக்ஷ்மி ராய்.

06 செப்டம்பர் 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்.

முப்பொழுதும் உன் கற்பனைகள் மூலம் தெலுங்குக்கும் போகும் அமலா பால் நடிகை அமலா பாலின் டோலிவுட் ஆசை நிறைவேறியுள்ளது. இதனால் அவர் படு குஷியாக உள்ளார்.
மலையாள நடிகையான அமலா பாலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது கோலிவுட் அதுவும் மைனா தான். கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார் அமலா. இந்நிலையில் டோலிவிட்டிலும் ஒரு ரவுண்ட் வர அவர் ஆசைப்பட்டார். அதற்காக நிறைய தெலுங்கு படங்களைப் பார்க்குமாறு தோழி அனுஷ்கா கூட அறிவுரை வழங்கியிருந்தார்.
அமலா தெலுங்கு படங்கள் பார்த்தாரோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால் அவரது ஆசை நிறைவேறியுள்ளது. எப்படி என்கிறீர்களா? முரளி மகன் அதர்வாவுடன் அமலா ஜோடி சோர்ந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தெலுங்கிலும் எடுத்து வருகின்றனர். நிரந்தரம் நீ வூகாலே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அம்மணி தான் கதாநாயகி.
அமலா பால் காட்டில் மழை தான். இந்த படம் ஹிட்டானால் தெலுங்கிலும் ஒரு கை பார்க்க திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே மைனா, தெய்வத்திருமகள் வெற்றியால் பூரித்துள்ள அமலாவுக்கு இந்த செய்தி மேலும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

05 செப்டம்பர் 2011

பிரபுதேவாவின் வெடி!

பிரபாகரன் எனும் என் தலைப்பு பவர்புல்லானது. ஆனால் அதைப் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால் வெடி என்ற தலைப்பை வைத்தேன், என இயக்குநர் பிரபு தேவா கூறினார்.
விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கும் படம் வெடி. பிரபு தேவா இயக்குகிறார். ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது.
இப்படத்துக்கு முதலில் பிரபாகரன் என பெயர் வைத்தனர். ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் பெயரைச் சூட்டுவது, அந்த மாபெரும் தலைவரை இழிவுபடுத்துவதாக தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புகள் தெரிவித்து அறிக்கைகள் விட்டனர்.
இதையடுத்து படத்தின் தலைப்பு வெடி என மாற்றிவிட்டார் பிரபுதேவா.
இதுகுறித்து நிருபர்களிடம் பிரபுதேவா கூறுகையில், "தெலுங்கில் ஹிட்டான 'சௌரியம்' படத்தின் தமிழ் ரீமேக்கே வெடி. இதில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன்.
இதையே படத்தின் தலைப்பாக்கினோம். நல்ல பவர்புல் தலைப்பு. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் எதற்கு வீண் சர்ச்சை எனக் கருதி, வெடி என மாற்றி பெயர் வைத்தோம். இம் மாதம் இறுதியில் இப்படம் ரிலீசாகிறது.
விஷால், சமீரா ரெட்டி இருவரும் கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்தி விட்டனர். அருமையாக வந்துள்ளது படம்," என்றார்.

02 செப்டம்பர் 2011

இதிலென்ன தப்பு?

கால் மேல் கால் போடுவதில் என்ன தவறு இருக்கிறது? நான் நார்த் இண்டியன் கல்ச்சரில் வளர்ந்தவள் என்பதால் அது எனக்கு பழகி விட்டது, என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எல்லோருக்கும் நல்ல பொண்ணாத்தான் இருக்கேன். மரியாதை தெரியாத பொண்ணுன்னு கூட சிலர் சொல்றாங்க. உதாரணத்துக்கு சில சினிமா ஃபங்ஷன்களில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தேன். அதுவும் நாகரிகமான ஆடையில்தான். ஆனால் அதைப் பெரிய பிரச்னையாக்கி விட்டார்கள். இந்தப் பொண்ணுக்கு "மேனர்ஸ் இல்லை; மேடையில் இருப்பவர்களை இன்சல்ட் செய்துவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். நான் நார்த் இண்டியன் கல்ச்சரில் வளர்ந்த பெண். அங்கு கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அதனால் அப்படியே பழகிவிட்டேன். இருந்தாலும் தமிழ் சினிமா ஃபங்ஷன்களில் அதற்குப் பிறகு அதைத் தவிர்த்துவிட்டேன். ஆண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் மேன்லினஸ்; பெண்கள் அப்படி அமர்ந்தால் தவறா? எங்கள் குடும்பம் படித்த குடும்பம். வீட்டில் பெரியவர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எனக்கு நல்ல பண்புகளைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.
காமெடி நடிகர் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடியதால் தமிழில் பட வாய்ப்புகளை இழந்தீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ஸ்ரேயா, வடிவேலு சார் படத்துல நான் ஆடிய அயிட்டம் ஸாங் நல்ல ரீச். ஸ்ரேயாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயம் அது. இப்போ மார்க்கெட் குறைஞ்சு போனதால் உடனே அந்தப் பாட்டை குறைசொல்ல வந்துட்டாங்க. எந்த விஷயமும் என்னை குறைத்து விட முடியாது, என்று கூறியுள்ளார்.

27 ஆகஸ்ட் 2011

பங்களா கட்டுகிறார் சமீரா.

மும்பையின் பெருமைக்குரிய கடற்கரையான ஜூஹுவில் சொந்த பங்களா கட்டுகிறார் நடிகை சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சமீரா. தெலுங்கு, இந்தியிலும் பிஸியாக உள்ளார். அவர் மும்பையின் புகழ்மிக்க ஜூஹு கடற்கரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து சமீரா அளித்துள்ள பேட்டியில், மும்பையில் பெரிய வீடு கட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறுகிறது. அங்குள்ள ஜூஹு பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். எனது தந்தையும், தம்பியும் அங்கேயே முகாமிட்டு கட்டுமான பணிகளை கவனித்து வருகின்றனர். எனது ஆசைப்படி வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள். நவம்பரில் கிரஹப்பிரவேசம் நடத்த உள்ளோம், என்று கூறியுள்ளார்.
தமிழில் தற்போது வெடி, வேட்டை படங்களில் நடித்து வரும் சமீரா, தனது இந்த நிலைக்குக் காரணம் இயக்குநர் கவுதம் மேனன் தான். வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகபடுத்தியதால்தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது. கவுதம் மேனன் எப்போது அழைத்தாலும் கதை, கேரக்டர் என்ன என்று கேட்காமல் உடனடியாக நடிக்க சம்மதிப்பேன், என்றும் கூறியிருக்கிறார்.

24 ஆகஸ்ட் 2011

கமலின் ஜோடி அனுஷ்கா.

கமல் இயக்கி, நடிக்க இருக்கும் விஸ்வரூபம் படத்தில் ஹீரோயின் யார் என்ற இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. படத்தில் கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருக்கிறார். "மன்மதன் அம்பு" படத்திற்கு பிறகு கமல் நடிக்க இருக்கும் படம் "விஸ்வரூபம்". இப்படத்தை கமலே இயக்கி நடிக்கிறார். படத்தின் நாயகியாக முதலில் பாலிவுட்டின் இளம்நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்தநிலையில், டைரக்டர் மாற்றம், விசா பிரச்சனை என்று தொடர்ந்து விஸ்வரூபம் படத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டையும் தாண்டி படம் ஆரம்பிக்காததால், இந்தியில் பல வாய்ப்புகள் பறிபோவதாக கூறி, விஸ்வரூபம் படத்தில் இருந்து விலகுவதாக சோனாக்ஷி அறிவித்தார். இதனால் கமலின் படம் மீண்டும் தொங்கலில் விழுந்தது.
இந்நிலையில் சோனாக்ஷிக்கு பதிலாக தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க கமல் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுவும் கைகூடாததால், கடைசியாக தமிழ், தெலுங்கின் முன்னணி நாயகியான அனுஷ்காவை நாடினார். அவரும் உடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம் விஸ்வரூபம் படத்திற்காக நாயகி பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்தமாதம் ஐரோப்பா மற்றும் கனடாவில் சூட்டிங் துவங்க இருக்கிறது. சமீபத்தில் தான் இந்தப் படத்துக்காக பிரமாதமான லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார் கமல்ஹாசன்.

19 ஆகஸ்ட் 2011

சின்னப்பொண்ணு தமன்னா!

நான் இன்னும் சின்ன பெண் தான் என்று வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா தெரிவி்த்தார்.
நேற்று வேலூரில் நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார் நடிகை தமன்னா. தமன்னா வருவதை அறிந்த ரசிகர்கள் கடைக்கு முன் குவிந்துவிட்டனர். கடையை திறந்து வைத்துவிட்டு வெளியே வந்த தமன்னாவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.
கூட்டம் அதிகமாகவதை உணர்ந்த கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் தமன்னாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது லேசான தடியடியும் நடத்தப்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமன்னா கூறுகையில்,
நான் வேலூருக்கு வந்துள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்கள் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.
தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறேன். நான் இன்னும் சின்ன பெண் தான். அதனால் 3 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் பற்றி யோசிப்பேன் என்றார்.
மெதுவா யோசிங்க, ஒன்னும் அவசரம் இல்லை...!

17 ஆகஸ்ட் 2011

ஐஸ்வர்யாவுடன் சண்டையில்லை.

ஐஸ்வர்யா தனுஷுடன் தனக்கு சண்டை எதுவும் இல்லை என்றும் சமாதானமாகவே பிரிந்துவிட்டதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமான அமலா, கால்ஷீட் சொதப்பலால் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இப்போது அவருக்குப் பதில் புதிதாக ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தேடி வருகின்றனர் ஐஸ்வர்யாவும் தனுஷும்.
இதற்கிடையே, பெரிய படத்திலிருந்து அமலா நீக்கப்பட்டதால், அவரை ஒப்பந்தம் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழில் அடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள் மட்டுமே அமலா பால் கைவசம் உள்ளது. மீதியெல்லாம் தெலுங்குப் படங்கள்தான். இன்னொன்று அறிமுகமான தமிழ் சினிமாவை விட, தெலுங்குப் படங்களில் நடிப்பதையே அவர் கவுரவமாகக் கருதுகிறார்.
சமீபத்தில் தனது முதல் தெலுங்குப் படத்துக்காக படப்பிடிப்புக்கு சென்று வந்த அமலா, தெலுங்கில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக பேட்டி கொடுத்திருந்தார். மேலும் மேலும் அதிக தெலுங்குப் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
தெலுங்குப் படங்களுக்காகத்தான் தமிழ்ப் படங்களை புறக்கணிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "தெலுங்கில் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அவற்றுக்கு முன்னுரிமை தருகிறேன். '3' படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், கால்ஷீட் இல்லாததுதான். நான் அந்தப்படத்துக்கு அக்டோபரில் தேதி தருவதாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் செப்டம்பரில் கேட்டார்கள். எனவே அவர்களிடம் நல்ல முறையில் சொல்லிவிட்டே விலகினேன்," என்றார்.

14 ஆகஸ்ட் 2011

சினிமாவே வேண்டாம்!

தூத்துக்குடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கார்த்திகா. தற்போது சினிமா சங்காத்தமே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம்.
தூத்துக்குடி படத்தில் பாவாடை, தாவணியில் அழகாய் வலம் வந்தவர் கார்த்திகா. அந்த படத்தில் வரும் கருவாப் பையா, கருவாப் பையா பாட்டு அத்தனை பிரபலம். அதைத்தொடர்ந்து நாளைய பொழுதும் உன்னோடு, மதுரை சம்பவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.
கொஞ்ச நாளாக கார்த்திகாவை ஆளையே காணோமே என்று நினைத்து தேடிய போது தான் அவர் சினிமாவுக்குக் குட்பை சொல்லிய தகவல் கிடைத்தது. அம்மணி சினிமாவே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம். சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்ட அவர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டாராம். சினிமா சம்பந்தப்பட்ட யாருடனும் அவருக்கு பேச விருப்பமில்லையாம்.
ஏன் இந்த திடீர் முடிவு? அப்படி என்ன கசப்பான அனுபவத்தை சந்தித்தார் கார்த்திகா?

11 ஆகஸ்ட் 2011

அனுஷ்காவிற்கு போட்டி அனுஷ்கா!

பாலிவுட்டில் ஒரு அனுஷ்கா இருக்கிறார்.... அனுஷ்கா சர்மா... பிரபலமான நடிகையும் கூட. இப்போது அவருக்குப் போட்டியாகப் போகிறார் இங்கே டாப் இடத்தில் உள்ள அனுஷ்கா அதாவது அனுஷ்கா ஷெட்டி!
இன்றைய தேதிக்கு அனுஷ்காவுக்கு தமிழ், தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனாலும் அவர் இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இரண்டு பெரிய படநிறுவனங்கள் அவரிடம் கதை சொல்லி ஓகேவும் வாங்கிவிட்டனவாம்.
இதில் ஒரு படத்துக்கு தேதி கூட கொடுத்து விட்ட அனுஷ்கா, அட்வான்ஸ் மட்டும் இப்போது வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
தெற்கிலிருந்து அனுஷ்கா வருகிறார் என்றதுமே, கடுப்பாகிவிட்டாராம் பாலிவுட்டில் ஏற்கெனவே உள்ள அனுஷ்கா சர்மா. தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு, இங்கே ஒரு அனுஷ்கா இருக்கும்போது தெற்கிலிருந்து அவரை வேறு அழைத்து வருகிறீர்களே, சரியா என சிணுங்குகிறாராம்.
என்ன செய்வது... சினிமாவில் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தால்தானே சுவாரஸ்யம்!

07 ஆகஸ்ட் 2011

கல்யாணம் பற்றி முடிவு செய்யவில்லை.

என் கல்யாணம் பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை; எனக்கு மாப்பிள்ளையாக பார்த்திருப்பதாக கூறப்படும் தொழில் அதிபர் என் நண்பர்தான், கணவர் இல்லை என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். கல்யாணம் பற்றி அடுத்த வருடம்தான் சிந்திப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். 28 வயதாகும் நடிகை த்ரிஷாவுக்கு செப்டம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாயின. அவரது கணவர் சென்னையை சேர்ந்த தொழில் அதிபராகவோ, சாப்ட்வேர் என்ஜினியராகவோ இருக்கலாம் என்று முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. பின்னர் சென்னையை சேர்ந்த இளம் தொழிலதிபர் அம்ருத்தைத்தான் த்ரிஷா திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று கூறப்பட்டது. ஏனென்றால் அம்ருத்தும், த்ரிஷாவும் ஹோட்டல் பார்ட்டிகளுக்கு ஒன்றாக சென்று வந்ததால் அப்படி கூறப்பட்டது. இதற்கிடையில் மாப்பிள்ளை பார்ப்பது தொடர்பாக த்ரிஷாவுக்கும், அவரது தாய் உமாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இத்தனை குழப்பங்களுக்குப் பிறகு த்ரிஷா ஒரு அதிரடி பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், எனக்கு திருமணம் என்று எத்தனை தடவைதான் செய்திகள் வருமோ தெரியவில்லை. அம்ருத் என் நண்பர்தான். கணவர் அல்ல. பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை. என் திருமணம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடக்கும். அப்போது பார்த்து கொள்ளலாம், என்று கூறியிருக்கிறார்.

03 ஆகஸ்ட் 2011

அனுயாவுக்கு முப்பது இலட்சம்!

ரூ.30 லட்சம் இருந்தா வாங்க; இல்லாட்டி என் வீட்டுப்பக்கமே வந்துடாதீங்க... என்று டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை விரட்டியடித்து வருகிறாராம் நடிகை அனுயா. "சிவா மனசுல சக்தி" மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. எப்படிப்பட்ட கவர்ச்சியான வேடத்திலும் நடிக்க தயங்காத அனுயா, அந்த படத்தை தொடர்ந்து "மதுரை சம்பவம்", "நகரம்" போன்ற படங்களில் நடித்தார். அனுயா படங்கள் வணிக ரீதியில் ஓரளவு நன்றாகவே போனாலும், வாய்ப்புகள்தான் வர மறுக்கின்றன.
இந்நிலையில்தான் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் "நண்பன்" படத்தில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜய் பட வாய்ப்பு என்றதும் ஓ.கே., சொன்ன அனுயா படத்தில் விஜய்க்கு அக்கா கேரக்டர் என்றதும் சம்பளத்தை ரூ.30 லட்சம் வரை உயர்த்தி விட்டாராம். அக்கா வேட விஷயத்தை வெளியே கசிய விடக்கூடாது என்று படக்குழுவினருக்கு அன்புக்கட்டளை விதித்தாலும், விஷயம் கசிந்து, பல டைரக்டர்கள் அக்கா கேரக்டர்களோடு அனுயா வீட்டு வாசலுக்கு வரத்தொடங்கி விட்டனர். அவர்களையெல்லாம் நோ சொல்லி திருப்பி அனுப்பி விட்டதோடு, ரூ.30 லட்சம் சம்பளம் என்றால் வாருங்கள்; இல்லாட்டி வேறு ஆளை பாருங்கள் என்று கூறி வருகிறாராம்.
அக்கா வேடம் பற்றி அனுயா அளித்துள்ள் பேட்டியில், விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் ஹீரோயின் வேடங்கள்தான் செய்வேன். நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு?, என்று கேள்வி எழுப்பியுள்ளார். அது சரி!

01 ஆகஸ்ட் 2011

கோடிகளை வெறுத்த தீபிகா!

பாலிவுட் பிரபலங்களுக்கு அடிக்கடி மெகா ஆஃபர்கள் வரும்… எதற்காக தெரியுமா… அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் ஆட்டம் போட / போஸ் கொடுக்க. இதற்கு பல கோடிகளை அள்ளித் தரவும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் தயாராக இருப்பார்கள்.
ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சோப்ரா போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வந்ததும் அவர்கள் மறுப்பு தெரிவித்து அது செய்தியாக வந்ததும் தெரிந்திருக்கும்.
இப்போது அப்படியொரு வாய்ப்பு ராணா நாயகி தீபிகா படுகோனுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த முறை தொழிலதிபர்ளிடமிருந்தல்ல… உலகப் புகழ்பெற்ற ப்ளேபோய் பத்திரிகையிடமிருந்து. ரூ 7.5 கோடி வரை தருகிறோம், பிளேபாய் செப்டம்பர் மாத இதழுக்கு அரை நிர்வாணமாக… அதாவது டாப்லெஸ்ஸாக போஸ் தர வேண்டும் என்று கேட்டார்களாம்.
ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் தீபிகா. பிளேபாய்க்கு விளம்பர படங்கள் எடுத்துத் தரும் அந்த சர்வதேச நிறுவனம் எவ்வளவோ முயன்றும் இந்த ஆஃபரை ஒப்புக் கொள்ளவே இல்லையாம் தீபிகா.
பிளேபாய் வாய்ப்புக்காக ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் தவம் கிடக்கையில், தீபிகா உறுதியாக மறுப்புத் தெரிவித்திருப்பது அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது சக பாலிவுட் நடிகைகளை.

28 ஜூலை 2011

கிருஷ்ணலீலைக்கு ஏங்கும் மேக்னா.

கிருஷ்ண லீலை படத்தை சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்க என்று அப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை மேக்னாராஜ் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார். டைரக்டர் ஸெல்வன் இயக்கத்தில் நடிகர் ஜீவன் - புதுமுக நடிகை மேக்னா ராஜ் நடித்திருக்கும் படம் கிருஷ்ண லீலை. படத்தை முடித்து இரண்டு ஆண்டுகளாகியும் ரிலீஸ் ஆகாததால் படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த படம் ரிலீஸ் ஆனால்தான் என் திரையுலக வாழ்க்கையே பிரகாசமாகும். கிருஷ்ண லீலை பெட்டிக்குள்ளேயே முடங்கி கிடப்பதற்கு ஐங்கரன் நிறுவனம்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய டைரக்டர் ஸெல்வன், படத்தை ரிலீஸ் செய்யக் கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறவித்தார். பின்னர் திரையுலக பிரமுகர்கள் சிலரின் தலையீட்டால் அந்த முடிவை இப்போதைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் நாயகியான நடிகை மேக்னா ராஜ் அளித்துள்ள பேட்டியொன்றில், கிருஷ்ண லீலை படம் சிறப்பாக வந்துள்ளது. அப்படம் இன்னும் வெளியாகாமல் முடங்கி இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர் நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பெல்லாம் அதில் இருக்கிறது. படம் சீக்கிரம் வர வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். எனக்கு அதுதான் முதல் படம், எனவே அது விரைவில் வரவேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குனருக்கும் அந்த படத்தை வைத்துதான் புதுப்பட வாய்ப்புகள் வரும். எனவே உடனே ரிலீஸ் செய்ய வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
நடிகை மேக்னா ராஜ், கிருஷ்ண லீலையைத் தொடர்ந்து சினேகன் ஜோடியாக நடித்துள்ள உயர்திரு 420 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. அதனைத்தொடர்ந்து கள்ள சிரிப்பழகா, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களிலும் மேக்னா நடித்துக் கொண்டிருக்கிறார்.

21 ஜூலை 2011

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் அவசர சிகிச்சைப்பிரிவில்.

நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
ரவிச்சந்திரன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தேவகி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரவிச்சந்திரனுக்கு சிறு நீரகங்கள் பாதித்து இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர் இதையடுத்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரு தினங்களுக்கு முன் உடல் நிலை மோசமானது. இதனால் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிசிச்சை அளிக்கின்றனர். செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அதே கண்கள்,இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின.
விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்தார்.
ரவிச்சந்திரன் மனைவி விமலா, மகள் லாவண்யா, மகன்கள் அம்சவர்த்தன் பாலாஜி ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

18 ஜூலை 2011

அஜித்தை வெறுத்த விமலா.

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும், அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கையில், நடிகை ஒருவர் அஜித் படத்திற்கு நோ சொல்லியிருக்கிறார். அவர் பெயர் விமலா ராமன். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்று, கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்களை கிறங்கடித்து வரும் விமலா ராமனிடம், அஜித்தின் பில்லா 2 படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். படத்தில் முதல் நாயகி மாடல் அழகி ஹூமா குரோஷி என்கிற போதிலும், அஜித் படம் என்பதால் விமலா நடிக்க சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்மணியோ அதற்கு நேர் மாறாக நோ சொல்லி விட்டாராம்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "தெலுங்கு படவுலகில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை" என்று விளக்கம் கொடுத்தாலும் உண்மை அதுவல்லவாம். படத்தில் விமலாவின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லையாம். மற்றொரு நாயகியான மாடல் அழகியின் கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் இருக்கிறதாம். இதனை தெரிந்து கொண்டதால்தான் அம்மணி அஜித் படத்துக்கே நோ சொல்லும் நிலைமைக்கு போய் விட்டார் என்கிறது, விவரமறிந்த கோடம்பாக்கத்து வட்டாரம்!

15 ஜூலை 2011

நிலாவிற்கும் அதுக்கும் தொடர்பில்லையாம்.

ஹரியானா மாநிலத்தில் நடந்த கொலைச் சம்பவத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை நிலா ஹரியானா மாநில டிஜிபியை நேரில் சந்தித்துத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடிகை ரஞ்சிதா போலீஸ் கமிஷனரை சந்தித்த அதே நாளில் நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா, தனது கள்ளக்காதலரின் மனைவி கொலை வழக்கு தொடர்பாக ஹரியானா டிஜிபியை சந்தித்துள்ளார்.
குர்கானைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நடிகை நிலாவுடன் கொண்ட கள்ளத்தொடர்பால் சுமித் தான் தனது மனைவியைக் கொன்று தொங்கவிட்டுள்ளார் என்று ருச்சியின் சகோதரி ஷெபாலி தெரிவித்தார். இதையடுத்து சுமித் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிலா கைதாகலாம் என்று கூறப்பட்டது. நிலாவைப் பிடிக்க டெல்லிக்குப் போலீஸ் படையும் விரைந்தது.
இந்நிலையில் திடீரென நிலா ஹரியானா டிஜிபியை சந்தித்து பேசியுள்ளார்.
அன்மையில் அவரைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்து வருத்தம் அடைந்துள்ளார் நிலா. அதனால் தான் டிஜிபியை சந்தித்து பேச முடிவு செய்தார் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.
நிலா விவகாரத்தில் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், டிஜிபியை நிலா சந்தித்து என்ன பேசினார் என்பது தெரியவில்லை.

10 ஜூலை 2011

சிம்புவின் காதல் கதை.

திகட்ட திகட்ட காதலித்து விட்டதாக நயன்தாராவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு கூறியிருக்கிறார். நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் காதலித்ததும், பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து காதல் முறிவு ஏற்பட்டது நடந்து முடிந்த சங்கதி.
சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த நயன்தாராவுக்கு நட்புடன் ஆறுதல் சொல்லி வந்தார் பிரபுதேவா. பிற்காலத்தில் அந்த ஆறுதலும், அக்கறையும் நயன்தாராவை கவர, பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்தார். பிரபுதேவாவும் தனக்கு ஒரு காதல் மனைவி இருப்பதை மறந்து நயன்தாராவிடம் மனதை பறிகொடுத்தார். இருவரும் திருமணம் செய்யாமலேயே சிறந்த தம்பதி விருது வாங்கும் அளவுக்கு நெருக்கமாக ஊர் சுற்றினார்கள். இதற்கிடையில் முறைப்படி தன் முதல் மனைவி ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்து விட்டார்.
விரைவில் தனது இரண்டாவது காதலியான நயன்தாராவை, இரண்டாவதாக திருமணம் செய்யவிருக்கிறார் பிரபுதேவா. இந்நிலையில் நடிகர் சிம்பு அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் பற்றிய கேள்வியொன்றுக்கு பதில் அளித்திருக்கும் சிம்பு, காதல் தோல்வியால் இதுவரைக்கும் நான் எந்த தனிமையையும் உணரவில்லை. எல்லாமும் நடந்து முடிந்துவிட்டது என இந்த வாழ்வை ஈஸியாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த 25 வருஷத்தில் சில படங்களை முடித்து திரும்பி பார்த்தால், வாழ்க்கை எப்படியெல்லாம் சுழற்றி அடித்திருக்கிறது. நிறைய மாற்றங்கள். எல்லாவற்றையும் ரசிக்கிறேன். திகட்ட திகட்ட காதலிச்சாச்சு. இனி எனக்கான அடையாளமாக அந்தக் காதல் இருக்குமான்னு தெரியவில்லை. எல்லாமே மாறக் கூடியதுதானேன்னு நடை போட ஆரம்பித்துவிட்டேன். என்னை பொறுத்த வரைக்கும் தனிமையை எல்லா மனிதர்களும் உணரணும். அப்போதுதான் நல்லது, கெட்டது செய்த நாள்களை அசைபோட முடியும், என்று கூறியிருக்கிறார்.

05 ஜூலை 2011

குறைத்துக்கொண்ட இலியானா.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது யாருக்கு புரிந்திருக்கிறதோ இல்லையோ... சினிமா நட்சத்திரங்களுக்கு ரொம்பவே புரிந்திருக்கிறது. ஒரு கோடி ரூபாய் சம்பளம் தரத் தயார்; எங்கள் படத்தில் நடியுங்கள் என்று கோடம்பாக்கத்து பட அதிபர்கள் அழைத்தபோதெல்லாம், அதைவிட பெரிய தொகை கொடுத்த தெலுங்கு சினிமாவை விட்டு வர மனமில்லாமல் இருந்தார் நடிகை இலியானா. பின்னர் ஒருவழியாக தமிழில் "நண்பன்" என்ற பெயரில் தயாராகும் 3 இடியட்ஸ் ரீமேக் படத்தில் நடிக்க சம்மதித்த இலியானாவுக்கு சம்பளமாக ரூ.1 கோடி கொடுக்க அப்படத்தின் தயாரிப்பாளர் சம்மதித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
தமிழில் அவரை புக் செய்ஏராளமான தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும், தெலுங்கு சினிமா மார்க்கெட்டில் அதீத கவனம் செலுத்தி வரும் இலியானா, வாய்ப்புகள் குறைந்து வருவதால் தனது சம்பளத்தையும் பாதியாக குறைத்திருக்கிறாராம். இலியானாவின் சமீபத்திய படங்கள் சில தோல்வியை தழுவியதால் வாய்ப்புகள் குறைந்து விட்டன. மீண்டும் ஒரு வெற்றிப்படத்தில் நடித்து மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ரூ.50 லட்சம் சம்பளம் தந்தால் போதும்; நல்ல கதையம்சம் உடைய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன், என்று தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டிருக்கிறாராம் இலியானா.

02 ஜூலை 2011

எங்கேயும் எப்போதும்.

எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகர் விமலுக்கு பதிலாக புதுமுகம் ஷர்வானந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் அஞ்சலியும், அனன்யாவும் இரு நாயகிகளாக நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் சேர்ந்து ஆர். முருகதாஸ் தயாரிக்கும் படம் எங்கேயும் எப்போதும். இதில் 2 நாயகன்கள், நாயகிகள். ஜெய், அஞ்சலி, ஷ்ர்வானந்த் மற்றும் அனன்யா நடிக்கின்றனர். ஷர்வானந்திற்கு இது தான் முதல் படம். இந்த படத்தி்ற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் முருகதாஸ் உதவியாளர் சரவணன்.
இது குறித்து சரவணன் கூறியதாவது,
இந்த படத்தில் 2 காதல் ஜோடிகள் உள்ளன. இது அவர்களின் காதல் கதை தான். கிளைமாக்ஸில் 2 ஜோடிகளும் இணைவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வில்லனும் கிடையாது, காதல் எதிரிகளும் கிடையாது. என்னடா வில்லனே இல்லை என்று நினைக்கிறீர்களா?
வில்லன் இல்லாமலேயே காதல் என்னவாகிறது என்பதை சுவாரஸ்யமாகக் கூறுகிறோம். ஹீரோயின் லிஸ்டில் சமமான இடத்தில் இருப்பவர்கள் அஞ்சலி, அனன்யா. கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் நடிக்கின்றனர். அவர்கள் சேர்ந்து வரும் காட்சிகள் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஷர்வானந்த் கதாபாத்திரத்தில் விமல் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. 90 சதவீத படபிடிப்பு முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

29 ஜூன் 2011

தனுஷின் ஜோடி ஸ்ருதி.

தனது கணவர் தனுஷை ஹீரோவாக்கி, கமல் மகள் ஸ்ருதிஹாசனை ஹீரோயினாக்கி முதன்முறையாக படம் ஒன்றை இயக்க போகிறார் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா. டைரக்டர் செல்வராகவனிடம் சிலகாலம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தனுஷ் ஐஸ்வர்யா. "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் கூட உதவி இயக்குநர் என்று இவரது பெயர் வந்தது. மேலும் பல தடவை தானே ஒரு படத்தை இயக்கபோவதாக ஐஸ்வர்யா தனுஷ் கூறிவந்தார். இதனை தனுஷூம் பலபேட்டிகளில் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து ஒரு அருமையான க‌ாதல் கதை ஒன்றை ஐஸ்வர்யா தனுஷ் உருவாக்கியிருக்கிறாராம். அந்த கதைக்கு தானே கதை, வசனம் எழுதி இயக்கபோகிறார் ஐஸ்வர்யா தனுஷ். இந்தபடத்தில் ஹீரோவாக அவரது கணவர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக கமல் மகள் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க ஐஸ்வர்யா முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தபடத்தை தயாரிக்கபோவது தனுஷின் சொந்த படநிறுவனம் என்பது கூடுதல் செய்தி.

27 ஜூன் 2011

மலையாளத்தில் பியா.

"கோ" படத்தின் மூலம் பிரபலமான பியா, முதன்முறையாக மலையாள படத்தில் நடிக்க போகிறார். மாடல் அழகியாக இருந்து சினிமா‌விற்குள் நுழைந்தவர் பியா. டைரக்டர் விஜய்யின், பொய் சொல்ல போறோம் படத்தில் அறிமுகமாகி "கோவா", "ஏகன்" உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த "கோ" படத்தின் மூலம் பிரபலமானார். "கோ" படத்தில் துருதுரு என நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் "கோ"வில் இவரது நடிப்பை பார்த்த மலையாள திரையுலகம், அவரை மலையாள படத்தில் நடிக்க வைக்க இருக்கிறது. டைரக்டர் ஜானி அந்தோணி என்பவர் இயக்கும் புதிய படம் ஒன்றில், ப்ருத்விராஜ் ஜோடியாக நடிக்கிறார் பியா. கூடவே இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் "சுப்ரமணியபுரம்" சசிகுமாரும் நடிக்க இருக்கிறார். பியாவுக்கும், சசிக்கும் மலையாளத்தில் இதுதான் முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

23 ஜூன் 2011

மீரா ஜாஸ்மினுக்கு திருமணம்.

நடிகை மீரா ஜாஸ்மின் தனது காதலன் மாண்டலின் ரா‌ஜேசை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான ‌தெலுங்கு, கன்னட, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தற்போது மம்பட்டியான் படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பின் சினிமாவுக்கு அவர் முழுக்கு போட முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.
இதற்காக புதுப்பட வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டாராம். மம்பட்டியான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வந்தது என்றும் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மலையாளத்தில் அவர் சமீபத்தில் நடித்து ரிலீசான மூன்று படங்கள் தோல்வி அடைந்து விட்டன. எனவே அங்கும் புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. சினிமாவை விட்டு விலகுவதற்காகவே புதுப்படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று கூறப்படுகிறது. மீராஜாஸ்மினும் மாண்டலின் ராஜேசும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காகவே சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

20 ஜூன் 2011

மருத்துவமனையிலிருந்து ரஜனி வெளியேறினார்.

ரஜினி தனது வழக்கமான உற்சாகத்துக்குத் திரும்பிவிட்டார். அவர் வரும் ஜூலை மாதம் சென்னை திரும்புகிறார். இன்னும் 15 நாட்களில் அவர் வந்துவிடுவார், என்றார் நடிகர் தனுஷ்.
கடந்த ஏப்ரல் 29 முதல் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட ரஜினி, சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தார். ஆனாலும் சிறுநீரகப் பிரச்சினை மட்டும் தொடர்ந்ததால், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் டிஸ்சார்ஜ் ஆனால். ஆனால் வழக்கமான சில பரிசோதனைகளுக்காக அவர் சிங்கப்பூரிலேயே ஒரு மாதம் தங்கியிருப்பதாக அறிவித்தார்.
ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரம் அவர் சென்னை திரும்பக் கூடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியின் மூத்த மருமகனும் நடிகருமான தனுஷ், "சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் ஆரோக்கியத்துடன் உள்ளார். வீட்டில் உடற்பயிற்சி செய்கிறார். யோகாவைத் தொடர்கிறார்.
சிங்கப்பூரில் உள்ள கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இன்னும் 15 நாளில் அவர் சென்னை திரும்பிவிடுவார். விரைவில் நானும் சிங்கப்பூர் செல்வேன்," என்றார்.

17 ஜூன் 2011

தமிழில் வாய்ப்புத்தாங்கப்பா!

தேசிய விருது வாங்கியதும், 'இப்படிப்பட்ட ரோல் வேண்டும், அப்படி நடிக்கமாட்டேன்' என்றெல்லாம் பிகு பண்ணிய ப்ரியாமணிக்கு தமிழில் இப்போது படங்களே இல்லை.
கடைசியாக நடித்த ராவணன், ரத்த சரித்திரம் படங்களில் அவர் நடித்திருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு 'தம்மாத்துண்டு' வேடங்கள்!
தெலுங்கு, கன்னடம் என்று போய்க் கொண்டிருக்கிறார். இன்டஸ்ட்ரியில் பெயர் ரிப்பேராகிவிட்டதால், நல்ல வாய்ப்புகள் வருவதும் நின்றுபோய், உப்புமா கம்பெனிகள்தான் அவரை அணுகுகின்றனவாம்.
சமீபத்தில் தனது பிறந்த நாளை பெங்களூரில் கொண்டாடிய பிரியாமணி, இப்போது நம்பிக்கொண்டிருப்பது 'ஷேத்திரம்' என்ற தெலுங்கு படத்தை. இது புராணப் படம்.
என்ன இப்படியாகிடுச்சே நிலைமை என்று துக்கம் விசாரித்த நிருபர்களிடம், "தமிழ்ல வாய்ப்பு அவ்ளோதானா என்று எல்லோரும் கேட்கிறார்கள். மீண்டும் தமிழில் நடிக்கணும். எந்த மாதிரி வேடமானாலும் ஓகே. நல்லமாதிரியா எழுதி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க," என்கிறாராம்.எல்லாம் காலம்தான் பிரியா.

15 ஜூன் 2011

குளித்தேன் தடித்தேன்!

இந்தியில் "தி டர்ட்டி பிக்சர்ஸ்" என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து வரும் வித்யாபாலனுக்கு ஒரு பெருத்த சோதனை. அம்மணி நடித்த குளியல் காட்சி ஒன்றில், அவர் குளித்த தண்ணீர் சரியில்லாததால் அவரது உடம்பில் தடிப்பு தடிப்பாக ஏற்பட்டது. 1980களில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கலக்கிய கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இந்தியில் படமாக உருவாகி வருகிறது. "தி டர்ட்டி பிக்சர்ஸ்" என்ற பெயரில், ஏக்தா கபூர் தயாரிக்க, மிலன் லூதிரா இயக்கத்தில், பாலிவுட்டின் முன்னணி நாயகி வித்யாபாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்து வருகிறார்.
பொதுவாக சில்க் படம் என்றாலே குளியல் காட்சி இருக்கும். அதேபோல் இந்தபடத்திலும் குளியல் காட்சி ஒன்றை சமீபத்தில் படமாக்கினர். இந்தகாட்சியில் வித்யாபாலன் நடித்து விட்டு வந்த சில நிமிடங்களில், அவரது உடம்பில் லேசான நமநமப்பு போன்று உணர்ந்தார். ஆரம்பத்தில் இதை சாதரணமாக எடுத்துக்கொண்டு வித்யாபாலனுக்கு கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பாக மாறியது. இதனால் பதறிப்போன வித்யா, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் காண்பித்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத சோப் அல்லது கெமிக்கல் கலந்த தண்ணீரால் தான் இந்த பிரச்சனை என்று கூறியிருக்கின்றனர். இதன்பின்னர் வித்யாபாலனுக்கு சிகிச்சை அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.
உடம்பில் ஏற்பட்ட இந்த திடீர் இன்பெக்ஷனால் சற்று கலங்கி போய் இருக்கும் வித்யபாலன், சில நாட்கள் ரெஸ்ட் எடுத்த பின்னர் மீண்டும் சூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறாராம். மேலும் படத்தில் இன்னும் சில குளியல் காட்சிகள் இருக்கிறதாம். ஆகையால் இனி எடுக்கப்போகும் குளியல் காட்சிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மினரல் வாட்டரை பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டு இருக்கின்றனராம் படக்குழுவினர்.

12 ஜூன் 2011

அத்வைதாவின் டீசன்ட்.

அழகர்சாமியின் குதிரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் அழகு குயில் அத்வைதா. பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணா‌கவே மாறி விட்ட அத்வைதா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமான படம் சகாக்கள். அழகர் சாமியின் குதிரை முதலில் வந்து அறிமுகப்படமாகி விட்டது. கீர்த்தி ரெட்டி என்ற நிஜப்பெயரை சினிமாவுக்காக அத்வைதா என்று அல்ட்ரா மாடர்னாக மாற்றியிருக்கும் அவர், சினிமாவுக்கு முன்பு நிறைய மேடை நாடகங்களில் நடித்திருக்கிறாராம். கேரள மோகினி ஆட்டத்தை முறைப்படி கற்றிருக்கும் அவர் 16 ஆண்டுகளாக நடனம் கற்று வருகிறாராம்.
அழகர் சாமியின் குதிரை படத்தில் தனது நடிப்பை பார்த்து நிறைய பேர் பாராட்டியதால் மகிழ்ச்சியில் இருக்கும் அத்வைதாவிடம் கிளாமராக நடிப்பீர்களா? என்று கேட்டால் கவர்ச்சி பற்றி பாடம் எடுக்கத் தொடங்கி விடுகிறார். என்னை பொறுத்தவரை கிளாமரில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஒன்று முகம் சுளிக்க வைக்கிற மாதிரியான கிளாமர், இன்னொன்று டீசன்டான கிளாமர். பாவாடை, தாவணியில், ஏன் புடவையில்கூட ஒரு பெண் கிளாமராக தெரிவார். அது டீசன்டான கிளாமர். அதுபோன்று நடிக்க ஆசைப்படுகிறேன். என்று கூறுகிறார் அத்வைதா.

09 ஜூன் 2011

தீபிகாவை குறிவைத்திருக்கும் தாதா.

'டான்' ஆக இருந்தாலும் 'ஆண்' தானே என்ற அடிப்படையில் பல தாதாக்கள் மீது மோகம் கொண்ட பெண்களை படத்தில் பார்த்திருக்கிறோம். ஏன் நிஜத்திலும் கூட நடிகை மோனிகா பேடியும், தாதா அபு சலேமும் காதல் கொண்ட கதையை நாம் பார்த்துள்ளோம்.
இந்த நிலையில் ஒரு டான், தனது மனதில் நடிகை தீபிகாவை வரித்துக் கொண்டிருப்பதை இப்போது போலீஸார் மூலம் வெளியுலகம் தெரிந்து கொண்டுள்ளது.
அந்த தாதாவின் பெயர் அபய் காந்தி. இவர் தலைமறைவாக இருப்பவர். இவரது வீட்டில் சமீபத்தில் போலீஸார் ஒரு அதிரடி ரெய்டை நடத்தினர். அப்போது அவர்களுக்கு பயங்கர தகவல் கிடைப்பதற்குப் பதில் ஒரு ரொமான்ஸ் விஷயம் சிக்கியது.
கஜினி படத்தில் புகைப்படத்திற்குக் கீழே குறிப்புகளை எழுதி வைத்திருக்கும் ஆமிர்கான் போல, இந்த தாதாவும், நடிகை தீபிகாவின் படத்திற்குக் கீழ் ஜூலை 5ம் தேதிக்குள் இவரை திருமணம் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.
தனது அடுத்த குறி தீபிகாதான் என்றும் அவர் புகைப்படத்தை ஒட்டி அதன் மீது எழுதி வைத்திருந்தார்.
இந்த விஷயம் போலீஸாரை ஆச்ச்ரியப்டுத்தியுள்ளது. அதேசமயம், இந்த தாதாவால் தீபிகாவுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கவலையும் பிறந்துள்ளதாம்.
பாலிவுட்டுக்கும், தாதாக்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது புதிய விஷயமில்லை. மோனிகா பேடி-அபுசலேம் போலவே, மந்தாகினியையும், தாவூத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகின.
1994ம் ஆண்டு தாவூத்துடன் கை கோர்த்துக் காணப்பட்டார் மந்தாகினி. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் இருவரையும் சேர்த்துப் பார்த்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மந்தாகினி பின்னர் மறுத்தார்.
அதேபோல நடிகை டிவிங்கிள் கண்ணாவையும், தாவூத் இப்ராகிமையும் இணைத்துப் பேச்சுக்கள் கிளம்பின.
இந்த நிலையில் கஜினி ஸ்டைலில் தீபிகாவின் படத்திற்குக் கீழ் எனது அடுத்த குறி என்று ஒரு டான் எழுதி வைத்துள்ள விஷயம் பாலிவுட்டில் லேசான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

07 ஜூன் 2011

ஊடகவியலாளராக பூனம்.

"கோ" படத்தில் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் கார்த்திகா. அவரைத்தொடர்ந்து பூனம் பஜ்வாவும் "எதிரி எண்-3" படத்தில் பத்திரிகையாளாக நடிக்கிறார். சிக்ஸ்த்சென்ஸ் எனும் புதிய பட நிறுவனம் தயாரிப்பில், ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் "எதிரி எண் - 3". படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இந்த ஜோடியுடன் பிரபு, சம்பத், ஜெய்பிரகாஷ், உமாபத்பநாபன், கிருஷ்ணமூர்த்தி, "கஜினி" ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினியராக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் ஸ்ரீகாந்த் சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாக்கப்படுகிறான். அவரை அதிலிருந்து மீட்டு காப்பாற்றுகிறார் பத்திரிகையாளராக வரும் பூனம் பஜ்வா. படத்தில் பத்திரிகையாளராக நடிப்பதால், இதற்காக பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் முறையாக பயிற்சி பெற்று வருகிறாராம். கூடவே தன்னுடைய வழக்கமான கவர்ச்சி மற்றும் குத்தாட்டத்தையும் ஆடி அசத்தி இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

04 ஜூன் 2011

துப்பாக்கிக்கு பயந்த ராப்ஷி.

டைரக்டர் கண்ணன் இயக்கும் 'வந்தான் வென்றான்' படத்திற்காக நாயகன் ஜீவாவுடன் நாயகி டாப்சீ நடித்து கொண்டிருக்கிறார்.
துப்பாக்கியை தூக்கி ஆட்களை நோக்கி குறிவைக்கும் காட்சி படப்பிடிப்பில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்கள்.
வந்தான் வென்றான் படத்தை இயக்கும் டைரக்டர் கண்ணன் சார் "நீங்க துப்பாக்கியை தூக்கிட்டு ஒரு ஆளை விரட்டறீங்க" என்றார். இதைக்கேட்ட உடனே எனக்கு படபடப்பு அதிகமானது.
என்னதான் துப்பாக்கியை பிடிக்க பயிற்சி எடுத்து கொண்டாலும், ஏதாவது எக்கு தப்பாக நடந்திடுமோன்னு பயந்தேன். இதில் பேச வேண்டிய 'வசனங்களை' வேறு மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதால் பதட்டமாக இருந்தது.
வேகமாக அந்தக்காட்சியை எடுத்துள்ளார்கள் என்று பேசும் டாப்சீ தெலுங்கில் டைரக்டர் கிருஸ்னவம்சியின் படத்தில் நடிக்கிறார்.
படத்தில் என் கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக டைரக்டர் கண்ணன் வடிவமைத்துள்ளார். நான் வரும் காட்சிகளில்தான் படத்தின் முக்கியமான திருப்புமுனை அமைந்துள்ளது.
இதை ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்றும் கூறியுள்ளாராம் தயாரிப்பாளர். ஆடுகளம் படத்தில் நடித்த தனுஷ் இயக்குநர் வெற்றிமாறன் இருவருக்கும் விருது கிடைத்ததை நினைத்து பெருமை அடைந்துள்ளாராம் டாப்சீ.

02 ஜூன் 2011

அசினின் தவிப்பு!

துபாயில் நடக்கும் ரெடி படத்தின் பிரிமீயரில் அசின் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. அவரது பாஸ்போர்ட் வேறு ஒரு இடத்தில் முடங்கியுள்ளதால் அசின் கலக்கத்தில் உள்ளார்.
சல்மான் கான்-அசின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ரெடி. இந்த படம் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இதற்கிடையே இன்று துபாயில் ரெடி படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையடப்படுகிறது. இதில் சல்லுவுடன் ஜோடி போட்டுப் போகலாம் என்று அசின் கனவு கண்டு கொண்டிருந்தார். கனவு பலிக்காமல் போய்விடும் போலிருக்கிறது.
அசின் சஜித நாதியாத்வாலாவின் ஹவுஸ்புல் 2 என்ற படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்கான படபிடிப்பு லண்டனில் நடக்கவிருக்கிறது. லண்டன் செல்ல விசா வாங்குவதற்காக அசின் தனது பாஸ்போர்ட்டை தயாரிப்பு நிர்வாகிகளிடம் கொடுத்தார். ஆனால் அது இன்னும் அவர் கைக்கு வந்து சேரவில்லை.
இதற்கிடையே துபாயில் நடக்கும் பிரிமீயர் ஷோவுக்கு போக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கடைசி நிமிடத்தில் பாஸ்போர்ட் கிடைத்தாலும் துபாய்க்கு பறக்க தயாராக இருக்கிறார். தற்போது அவருடைய ஒரே பிரார்த்தனை பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என்பது தான்.
அய்யோ பாவம்!

31 மே 2011

கமலின் ஜோடியாகிறார் ஸ்ரேயா.

விஸ்வரூபம் படத்தில் கமலின் புதிய ஜோடி ஸ்ரேயா என செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஜினியின் ஜோடியாக சிவாஜியில் நடித்ததன் மூலம் டாப் இடத்துக்குப் போனவர் ஸ்ரேயா. அதன்பிறகு கமல் ஜோடியாக அவர் நடிக்கப் போவதாகக் கூறப்பட்டது. அந்தப் படம் மர்மயோகி. ஆனால் அது அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது.
இப்போது அவர் கமல் எழுதி இயக்கும் விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் முதல் நாயகியாக மும்பையைச் சேர்ந்த சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இரண்டாவது நாயகி வேடம்தான் ஸ்ரேயாவுக்கு என்றாலும், கமலுடன் டூயட் பாடவிருப்பவர் ஸ்ரேயாதான் என்கிறார்கள்.
முதல் நாயகி, இரண்டாவது நாயகி என்ற பேதமெல்லாம் பார்க்காமல் கிடைத்த வேடத்தை ஒப்புக் கொள்ள ஸ்ரேயா தயாராகிவிட்டார். காரணம் அவர் கைவசம் தமிழில் படங்களில்லையே!!

28 மே 2011

பியா,விஜய் காதல்.

பியா,விஜய் காதல் என்று தலைப்பை பார்த்ததும் பயந்து விடாதீர்கள். விஜய் என்றதும் நமது இளைய தளபதி என்று நினைக்க வேண்டாம். டைரக்டர் விஜய்யும், பியாவும் காதலிப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் ‌கோலிவுட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
"பொய் சொல்ல போறோம்", "பலே பாண்டியா", "கோவா", "கோ" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பியா. இதில் கடைசியாக நடித்த "கோ" படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. கூடவே "கோ" படம், தெலுங்கில் "ரங்கம்" என்ற பெயரில் ரிலீசாகியுள்ளது. அங்கும் இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனிடையே சமீபத்தில் "ரங்கம்" படத்தின் ஆடியோ ரிலீசுக்காக ஐதராபாத் சென்றிருந்தார் பியா. அங்கு டைரக்டர் விஜய்யுடன், பியா ஒன்றாக ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பியாவை பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரே டைரக்டர் விஜய் தான். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் முதலில் நட்பாக வளர்ந்து இப்போது காதலாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குநராக இருக்கும் விஜய் கிரீடம், பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 மே 2011

சிங்களப்படத்தில் பூஜா.

நான் கடவுள் படத்துக்கு பிறகு பூஜாவை கோலிவுட் பக்கம் பார்க்க முடியவில்லை. நடித்தது போதும். திருமணம் செய்துகொள் என்று அவரது அப்பா விதித்த தடைதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப பூஜாவும் அப்பாவின் பிசினஸில் உதவி செய்ய தொடங்கினார்.
இந்நிலையில் இலங்கை படமொன்றில் நடிக்க வந்த வாய்ப்பை பூஜாவால் மறுக்க முடியவில்லையாம். அப்பாவின் தடையை மீறி அப்படத்தில் நடிக்கிறார். இது பற்றி பூஜா கூறியது: எனக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் எனது அப்பா இருந்தார்.
அவரது விருப்பத்தை என்னால் மீற முடியவில்லை. இதற்கிடையில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஏற்கவில்லை. இலங்கையில் 10 பிரபல தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்கும் -குச ஃபாபா- என்ற சிங்கள மொழிப் படத்தில் நடிக்க என்னை கேட்டபோது மறுக்க முடியவில்லை.
புத்தமத கதையொன்றை தழுவி திஷா அபிஷேகரா எழுதிய ஸ்கிரிப்ட் இது. இளவரசன் வேடத்தில் இலங்கை நடிகர் ஜேக்ஸன் ஆன்டனி நடிக்கிறார். இளவரசி வேடத்தில் இந்திய பட ஹீரோயின்தான் நடிக்க வேண்டும் என்று கதாசிரியர் கூறினார். அதன்படி எனக்கு இந்த வாய்ப்பு வந்தது.
இந்திய ஹீரோயின்தான் நடிக்க வேண்டும் என்று கதாசிரியர் கூறியதற்கு காரணம் என்ன என்று கேட்கிறார்கள். அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொண்ட வேடத்தில் 100 சதவீதம் ஈடுபாடுகாட்டுவேன்.

24 மே 2011

உயிரே போவதானாலும் அப்படி நடிக்கமாட்டேன்.

நிர்வாணமாக நடிக்கும் நிலை வந்தால் சினிமாவை விட்டே விலகுவேன் என்று பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யாராய் ஹீரோயின் என்ற இந்தி படமொன்றில் நிர்வாணமாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாயின. இதனை ஐஸ்வர்யா ராய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நான் நிர்வாணமாக நடிக்கப் போவதாக வெளியான செய்தி பார்த்து மனம் உடைந்து போனேன். நான் குடும்ப பெண். ஒருவரின் மனைவியாகவும், ஒரு குடும்பத்தின் மருமகளாகவும் இருக்கிறேன். என் மாமியார் வீட்டுக்கென சில கவுரவம் இருக்கிறது. என் மாமனார் அமிதாப்பச்சன் புகழ்பெற்ற நடிகர். அவர்களுக்குகெல்லாம் பங்கம் ஏற்படுத்தும்படி எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். மாமனார் குடும்பத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். எனக்குள்ள கலை ஆர்வத்தை புரிந்து கொண்டு திருமணத்துக்கு பிறகும் என்னை நடிக்க அனுமதித்து உள்ளனர். இது பெரிய விஷயம்.
இந்த நிலையில் நான் நிர்வாணமாக நடிக்கப் போகிறேன் என்று வெளியாகும் செய்திகள் அவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை வதந்தி பரப்புவோர் உணர்ந்து கொள்ள வேண்டும். நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சினிமாவை விட்டே நான் விலகி விடுவேன். என் உயிரே போனாலும் அது போன்று நடிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.

22 மே 2011

சின்ன சின்ன ரோல்களில் நடிப்பதில்லை.

ஐயாவில் அறிமுகப்படுத்திய நயன்தாரா போல் இன்னொரு நடிகை வேண்டும் என்று இயக்குனர் ஹ‌ரியால் தாமிரபரணியில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பானு. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்துப் படங்கள் இல்லாமல் போனது சோகம். குடும்பப் பிரச்சனையால் படங்களில் நடிக்காமல் இருந்தவர் அழகர்மலை, சட்டப்படி குற்றம் என மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து.
அழகர்மலைக்குப் பிறகும் உங்களை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லையே...?
நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் எல்லாம் சின்னச் சின்ன ரோல்கள். அதேபோல் ஒரு பாடலுக்கு ஆடச் சொல்லி கேட்கிறார்கள். அப்புறம் வீட்டிலும் சில பிரச்சனைகள். இப்போது எல்லாம் ச‌ரியாகிவிட்டது. தொடர்ந்து நீங்கள் என்னை திரையில் பார்க்கலாம்.
சட்டப்படி குற்றம் படத்தில் சிறிய வேடத்தில்தானே நடித்திருந்தீர்கள்...?
தமிழில் நான் நடித்த இரண்டுப் படங்களிலுமே குடும்பப்பாங்கான கேரக்டர்கள்தான். சட்டப்படி குற்றத்தில் அதிலிருந்து வித்தியாசமான வேடம். கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான துணிச்சலான வேடம். அதனால்தான் ஒப்புக் கொண்டேன்.
சட்டப்படி குற்றம் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
என்னுடைய ஃபோட்டோவைப் பார்த்துதான் இயக்குனர் சார் என்னை தேர்வு செய்தார். முன்பு குண்டாக இருப்பேன். இப்போது ஸ்லிம்மாகிவிட்டேன். அந்தப் ஃபோட்டைவைப் பார்த்துதான் வாய்ப்பு கிடைத்தது.
பொன்னர் சங்கர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறீர்களே?
பேசிக்கலி நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். பொன்னர் சங்க‌ரில் கிளாசிக்கல் நடனம் என்பதால் ஒப்புக் கொண்டேன். மற்றபடி சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கவோ, ஒரு பாடலுக்கு ஆடவோ கண்டிப்பாக மாட்டேன். ஒரு படம் நடித்தாலும் அது பெயர் சொல்கிற மாதி‌ரி எத்தனை வருடங்களானாலும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன்.

19 மே 2011

காய்ச்சலில் தவிக்கும் இலியானா.

ஓய்வின்றி சூட்டிங்கில் பங்கேற்றதால் நடிகை இலியானாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. நண்பன் பட சூட்டிங் நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங்கில் நடிகை இலியானா பங்கேற்றார். இதற்கு முன்பு கடந்த 20 நாட்களாக அந்தமானில் நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நெதர்லாந்திலும் சூட்டிங் நடைபெற்றது. இதில் தொடர்ச்சியாக இலியானா பங்கேற்றார். ஒய்வின்றி சூட்டிங்கில் பங்கேற்றதால் இலியானாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து நெதர்லாந்தில் இருந்து கோவா திரும்பிய இலியானா அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 10 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அவருக்கு பரிந்துரைத்துள்ளனர்.

17 மே 2011

கதை நல்லா இருக்கணும்.

பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியாமணி, "பருத்திவீரன்" படத்தில் முத்தழகு கேரக்டர் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். அதன்பின்னர் நிறைய படங்களில் நடித்த ப்ரியாமணி பரத்துடன் "ஆறுமுகம்" படத்திற்கு பிறகு காணாமல் போனார். தற்‌போது தெலுங்கு பக்கம் முகாமிட்டு இருக்கும் ப்ரியாமணி ‌"ஷேத்திரம்" என்ற படத்தில் ஜெகபதிபாபு, ஷாம் ஆகியோர் நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் ஏன்..? உங்களை பார்க்கமுடியவில்லை என்று கேட்டபோது கொட்டி தீர்த்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வழக்கம்‌ போல ஒரு சினிமா என்றால், டூயட், ஆடி பாடி, அழுது நடிப்பதில் ஆர்வம் இல்ல, கதை நல்லா இருக்கனும், ஒரு பீல் வரனும் படத்தை பார்த்து மக்கள் ரசிக்கனும், இப்ப சமீபத்தில் வெளிவந்த யதார்த்தமான சில படங்கள் எல்லாம் நன்றாக ‌வந்துள்ளன. படம் ரொம்ப நல்லா இருக்கு, மக்களிடத்தில் நல்லா ரீச் ஆகிருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எனக்கும் அந்தமாதிரி படங்கள் எல்லாம் வந்தால் நான் ஏன்...? நோ சொல்லப் போறேன். தமிழ் சினிமாவில் இருக்கும் நல்ல நல்ல டைரக்டர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. குறிப்பாக டைரக்டர் தரணி, முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது என்று கூறினார்.

14 மே 2011

இராமநாராயணன் பல கோடி மோசடி செய்துள்ளார்.

திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார் ராம. நாராயணன். சங்க உறுப்பினர்களிடமிருந்து பல கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார். ரூ. 15 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ள அவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாறி விட்டது, காட்சிகளும் மாறத் தொடங்கியுள்ளன. திரையுலகிலிருந்து முதல் புயல் கிளம்பியுள்ளது. அதிமுக ஆட்சி வந்ததைத் தொடர்ந்து முதல் நபராக ராம.நாராயணன் தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும் பதவியை விட்டு விலகிவிட்டார்.
திமுகவுக்கு மிகவும் நெருங்கியவர் ராம.நாராயணன். கலைஞர் டிவியில் அவரும் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ்த் திரையுலகத்தை கலைஞர் டிவி பக்கம் திருப்பி விட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்ககத்தில் மூத்த உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் முன்னாள் தலைவர் கேஆர்ஜி, கேயார், ராதாரவி, ஆர்.வி. உதயக்குமார், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டார் ராம.நாராயணன்.
கட்டப் பஞ்சாயத்தில்தான் அவர் பெரும்பாலும் ஈடுபட்டார். திமுகவின் கைக்கூலியாக மாறி சங்கத்தின் பெயரைக் கெடுத்து விட்டார்.
உறுப்பினர்களுக்கு வீட்டு வசதி செய்து தருவதாக கூறி பெருமளவில் பணத்தைப் பெற்ற அவர் அதற்கு ரசீதே தரவில்லை. ரூ. 15 கோடி அளவுக்கு அவர் ஊழல் புரிந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.
பின்னர் கே.ஆர்.ஜி கூறுகையில், ரூ. 2 லட்சம் கொடுத்து தலைவராக்கப்பட்டவர் இந்த ராம.நாராயணன். தலைவர் பதவிக்கு வந்த பின்னர் சங்கத்தை திமுகவின் கைக்கூலியாக மாற்றி விட்டார். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் பணம் அவர் வீடு தேடிப் போக வேண்டும் என்று உத்தரவிட்டு அதை பிடிவாதமாக செயல்படுத்தி வந்தவர்.
விரைவில் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து நாளை மறு தினம் முடிவு செய்யவுள்ளோம் என்றார்.

10 மே 2011

என்னை ஏன் இன்னும் சீண்டுறார்?

சிம்புவே விரும்பாவிட்டாலும் வந்து சேரும் போலிருக்கிறது வம்பு.
ஒரே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓராயிரம் சிக்கல்களை கிளப்பிவிட்டு போனார் அவர். செய்தியாளர்களின் கேள்விக்கு போகிற போக்கில் பதில் சொன்னார்.
நயன்தாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம் என்பது தான் அந்த பதில். திரும்புகிற இடமெல்லாம் இதுதான் செய்தி. ஒருவேளை இருவருக்குள்ளும் பிரச்சினை வந்துவிட்டதோ, இந்த கல்யாணம் நடக்காமல் போய்விடுமோ என்றெல்லாம் ஆயிரம் சந்தேகங்கள்.
ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிற மாதிரி ஒரு தகவல் கசிந்திருக்கிறது இன்று. சென்னையில் இருக்கும் தனக்கு நெருக்கமாக சில தோழிகளை குறுந்தகவல்கள் மூலம் தொடர்பு கொண்ட நயன்தாரா, "நான் தான் ஒதுங்கி போய்விட்டேனே அப்புறமும் ஏன் சீண்டனும்" என்று கவலைப்பட்டாராம்.
நயன்தாரா விடயத்தில் இப்படி உசுப்பேற்றிவிட்டு போன சிம்பு, தனது ரசிகர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட விடயம் குறித்து பேசும் போது கூட, "அப்படியா, எனக்கொன்றும் தெரியாதே" என்று கூறிவிட்டார். சிம்புவுக்காக பொலிஸ் நிலையம் வரைக்கும் போன ரசிகர்களுக்கு இந்த பதில் பெரும் கவலையை வரவழைத்திருப்பதாக கேள்வி.

08 மே 2011

இலை,குழை ஆடையுடன் சம்மு.

தசாவதாரம் படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, காஞ்சிவரம் மூலம் நாயகியாக பளிச்சிட்ட நடிகை ஷம்மு, சங்க கால படமொன்றில் வனப்பகுதி சூட்டிங்கில் ஆடையில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர் கற்றது தமிழ் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் அறிமுக இயக்குனர் ம.செந்தமிழன் இயக்கும் புதிய படம் பாலை. வரலாற்றுப் படம் என்றாலே ‌மன்னர், அரண்மனை, போர்க்களம் என்ற நிலைமையை மாற்றும் வகையில் அதற்கும் முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களை படமாக்கி, பதிய வைக்க வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணத்துடன் பாலை படத்தினை இயக்கி வருகிறார் செந்தமிழன்.
அந்தக் காலத்தில பயன்பட்ட வில்-அம்பு, ஈட்டி, கல் கத்திகளை உருவாக்கியிருக்கோம். போர்க் காட்சிகள் மிரட்டலா வந்துக்கிட்டிருக்கு. காதல், காமம், வீரத்தை மரபு மணம் மாறாமல் காட்டப் போறோம். இது பார்வையாளர்களுக்குப் புது அனுபவதைக் கொடுக்கும் என நினைக்கிறேன், என்று சொல்லும் செந்தமிழன், இந்த படம் தொல்குடி மக்களைப் பற்றியது என்பதால் இருளர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களை முக்கிய ரோல்ல நடிக்க வைத்திருக்கிறாராம்.
படத்தின் நாயகியாக நடிகை ஷம்மு நடிக்கிறார். நாயகனாக சுனில் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்கள் தவிர படத்தில் தோன்றும் பாத்திரங்களில் பல பேர் புதுமுகங்கள் என்பதையே ஹைலைட்டாக சொல்கிறது பாலை படக்குழு. கதைப்படி நடிகை ஷம்மு ஆடை எதுவும் அணிந்திருக்க மாட்டாராம். சங்க காலத்து ‌பெண்கள் மானத்தை காக்க அணிந்திருந்த இலை தழைகளையே ஷம்மு ஆடையாக அணிந்திருக்கிறார். தஞ்சை பகுதியில் இப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. சூர், கொடைக்கானல், பழனி, சத்தியமங்கலம், ஈரோடு, தஞ்சாவூர் என இன்றைய நாகரீகங்கள் போய் சேராத வனப்பகுதிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் செந்தமிழன். நாட்டுப்புற பாடல், முதுமக்கள் தாழி, கல் கத்திகள் என பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்ட அத்தனை விஷயங்களையும் படத்தில் புகுத்தியிருக்கும் டைரக்டர் செந்தமிழ், இந்த படத்திற்காக கடந்த 6 ஆண்டுகளாக பழந்தமிழர்கள் வாழ்க்கை பற்றி ஆய்வு செய்திருக்கிறார் என்பதோடு, படத்தின் வசனங்களிலும் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் இருந்து தேடிப்பிடித்து வார்த்தைகளை கோர்த்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
வரலாற்றுப் படம் என்ற பெயரில் கோடி கோடியாய் பணம் செலவழித்து பிரமாண்ட செட் போட்டு எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி மக்களின் வாழ்கையை படமாக்க அந்த காலத்து கிராமத்தை நவீன யுத்தியுடன் செட் போட்டு படமெடுத்துக் கொண்டிருக்கும் புதுமுகம் செந்தமிழுக்கு உரிய மரியாதை பாலை ரீலிசுக்கு பிறகு கிடைக்கும் என நம்புவோம்.

05 மே 2011

பிரியங்காவின் காதல் சேஷ்டை.

வெயில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா, தனது காதலனுடன் சேர்ந்து புதுப்பட இயக்குனருக்கு தண்ணி காட்டி வருகிறாராம். வெயில் படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் வெயிலின் தாக்கம் மட்டும்தான் மனதில் நிலைத்திருக்கிறது. பிரியங்கா தற்போது நடித்து வரும் படம் செங்காத்து பூமியிலே. கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற ஹிட் படங்களின் வசனகர்த்தாவான ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் சூட்டிங், நொண்டிக் குதிரை போலதான் நகர்ந்து கொண்டிருக்கிறதாம். என்னவென்று விசாரித்தால், படத்தின் நாயகி பிரியங்கா காதல்வசப்பட்ட விவகாரத்தை வயிற்றெரிச்சலுடன்(?) பகிர்ந்து கொள்கிறார்கள்.
செங்காத்து பூமியிலே சூட்டிங்கின்போது டைரக்டர் ரத்னகுமாரிடம் உதவியாளராக பணியாற்றியவரிடம் மனதை பறிகொடுத்திருக்கிறார் பிரியங்கா. கள்ளப்பார்வை, கவனச்சிதறல் என ‌நீடித்த இந்த காதல் ரத்னகுமாரின் காதுகளை எட்டும்போது, காதல் சூடு உச்சத்தை தொட்டிருந்தது. பாதி படத்தை படமாக்கிய பிறகு நடிகையை தூக்க முடியாது என்பதா‌ல், உதவியாளரை தூரத்தி விட்டார் ரத்னகுமார்.
படத்தில் இருந்து உதவியாளர் வெளியேறினாலும், பிரியங்காவின் மனதில் இன்னமும் குடிகொண்டிருக்கிறார் என்பதை சமீபத்திய பிரியங்காவின் நடவடிக்கைகளே காட்டிக் கொடுத்து விடுகின்றன. காதலனை விரட்டி விட்ட டைரக்டரின் கண்ணில் விரலை விட்டு ஆட்ட முடியாவிட்டாலும் காதலனுடன் சேர்ந்து தண்ணி காட்ட ஆரம்பித்திருக்கிறாராம் பிரியங்கா. அடக்கொடுமையே!!!

03 மே 2011

மீண்டும் வருகிறார் மல்லிகா.

ஆட்டோகிராப் படத்தில் கம்மாபட்டி கமலாவாக அறிமுகமானவர் நடிகை மல்லிகா. அதன்பிறகு மகாநடிகன், திருப்பாச்சி, குண்டக்க மண்டக்க, உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைய சின்னத்திரையில் தலைகாட்டி வந்தார். பின்னர் சினிமாவை விட்டு காணாமல் போனார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். முன்பை விட அழகாகவும், புதுபொலிவுடனும் காணப்படும் மல்லிகா, தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கூடவே தமிழ்படங்களிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். நல்ல கேரக்டர் அமைந்தால் நடிக்கத் தயார் என்று கூறி வருகிறார்.

01 மே 2011

பத்திரிகையாளர்களிடமும் கரன்ஷி கேட்கும் அனுஷ்கா.

ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே நடிகர், நடிகைகளின் அலட்டல் தாங்க முடியாது. அதிலும் நாலைந்து படங்கள் ஹிட்டாகிவிட்டால் சொல்லவா வேண்டும். அதுபோல நடிகை அனுஷ்காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக அவரின் மேலாளர் உட்பட பலரும் புலம்பி வருகின்றனர்.
ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. முதல்படம் அவருக்கு வெற்றியை தராவிட்டாலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர் அருந்ததீ படத்தின் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட ஆரம்பித்து, இப்போது தமிழிலும், தெலுங்கிலும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் அம்மணியை படபூஜை, ஆடியோ ரிலீஸ் போன்ற விழாக்களுக்கு சென்னை வரும்போது, சம்பிரதாயத்திற்காகவாது பத்ரிகையாளர்களை பார்த்து ஹாய்...ஹலோ என்றாவது சொல்லுங்கள் என்று கூறிவருகின்றனர். ஆனால் அம்மணியோ அதெல்லாம் முடியாது. ரசிகர்களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன், பதிரிகையாளர்கள் முன் தோன்ற வேண்டும் என்றால் கூடுதல் பைசா ஆகும் பரவாயில்லையா? என்று அங்கும் கரன்சி பேசுகிறாராம். இதனால் அவரது மேனேஜர் உட்பட பலர், அனுஷ்காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக புலம்புகின்றனர்.
இருந்தாலும் அனுஷ்காவின் அலட்டல் கொஞ்சம் ஓவர் தான்!