பக்கங்கள்

22 செப்டம்பர் 2011

ஸ்ரேயா கோஷலும் நடிகையாகிறார்!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிப்பு சேவையை துவக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் சினிமா பின்னணி பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். பல மொழிகளிலும் 180க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடி, 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில் விண்ணை தாண்டி வருவாயா, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் பாடியதற்காக பல விருதுகளைக் குவித்தவர். கோஷல் பார்க்க சினிமா நடிகைகளைப் போலவே படு அழகாக இருப்பார். இதனால் அவரை நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் அவர் ஜகா வாங்கிக் கொண்டே வந்தார்.
எல்லாருக்கும் 'நோ' என்ற பதிலை மட்டுமே கொடுத்து வந்த கோஷலும் இப்போது நடிப்பு வலையில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இயக்குநர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு மெய்மறந்து போய் விட்டாராம். அந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
ஏற்கனவே உள்ள ஒரு ஸ்ரேயா வழங்கும் 'நடிப்புச் சேவையில்' திளைத்து வரும் ரசிகர்களுக்கு கலை சேவையாற்ற இன்னோரு ஸ்ரேயா வருகிறார். 'டபுள் டிலைட்'தான். இனி நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா, முத்தக் காட்சியில் நடிப்பீர்களா என்ற பழைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஸ்ரேயா கோஷலும் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக