கால் மேல் கால் போடுவதில் என்ன தவறு இருக்கிறது? நான் நார்த் இண்டியன் கல்ச்சரில் வளர்ந்தவள் என்பதால் அது எனக்கு பழகி விட்டது, என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எல்லோருக்கும் நல்ல பொண்ணாத்தான் இருக்கேன். மரியாதை தெரியாத பொண்ணுன்னு கூட சிலர் சொல்றாங்க. உதாரணத்துக்கு சில சினிமா ஃபங்ஷன்களில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தேன். அதுவும் நாகரிகமான ஆடையில்தான். ஆனால் அதைப் பெரிய பிரச்னையாக்கி விட்டார்கள். இந்தப் பொண்ணுக்கு "மேனர்ஸ் இல்லை; மேடையில் இருப்பவர்களை இன்சல்ட் செய்துவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். நான் நார்த் இண்டியன் கல்ச்சரில் வளர்ந்த பெண். அங்கு கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அதனால் அப்படியே பழகிவிட்டேன். இருந்தாலும் தமிழ் சினிமா ஃபங்ஷன்களில் அதற்குப் பிறகு அதைத் தவிர்த்துவிட்டேன். ஆண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் மேன்லினஸ்; பெண்கள் அப்படி அமர்ந்தால் தவறா? எங்கள் குடும்பம் படித்த குடும்பம். வீட்டில் பெரியவர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எனக்கு நல்ல பண்புகளைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.
காமெடி நடிகர் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடியதால் தமிழில் பட வாய்ப்புகளை இழந்தீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ஸ்ரேயா, வடிவேலு சார் படத்துல நான் ஆடிய அயிட்டம் ஸாங் நல்ல ரீச். ஸ்ரேயாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயம் அது. இப்போ மார்க்கெட் குறைஞ்சு போனதால் உடனே அந்தப் பாட்டை குறைசொல்ல வந்துட்டாங்க. எந்த விஷயமும் என்னை குறைத்து விட முடியாது, என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக