முப்பொழுதும் உன் கற்பனைகள் மூலம் தெலுங்குக்கும் போகும் அமலா பால் நடிகை அமலா பாலின் டோலிவுட் ஆசை நிறைவேறியுள்ளது. இதனால் அவர் படு குஷியாக உள்ளார்.
மலையாள நடிகையான அமலா பாலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது கோலிவுட் அதுவும் மைனா தான். கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார் அமலா. இந்நிலையில் டோலிவிட்டிலும் ஒரு ரவுண்ட் வர அவர் ஆசைப்பட்டார். அதற்காக நிறைய தெலுங்கு படங்களைப் பார்க்குமாறு தோழி அனுஷ்கா கூட அறிவுரை வழங்கியிருந்தார்.
அமலா தெலுங்கு படங்கள் பார்த்தாரோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால் அவரது ஆசை நிறைவேறியுள்ளது. எப்படி என்கிறீர்களா? முரளி மகன் அதர்வாவுடன் அமலா ஜோடி சோர்ந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தெலுங்கிலும் எடுத்து வருகின்றனர். நிரந்தரம் நீ வூகாலே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அம்மணி தான் கதாநாயகி.
அமலா பால் காட்டில் மழை தான். இந்த படம் ஹிட்டானால் தெலுங்கிலும் ஒரு கை பார்க்க திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே மைனா, தெய்வத்திருமகள் வெற்றியால் பூரித்துள்ள அமலாவுக்கு இந்த செய்தி மேலும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக