கமல் இயக்கி, நடிக்க இருக்கும் விஸ்வரூபம் படத்தில் ஹீரோயின் யார் என்ற இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. படத்தில் கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருக்கிறார். "மன்மதன் அம்பு" படத்திற்கு பிறகு கமல் நடிக்க இருக்கும் படம் "விஸ்வரூபம்". இப்படத்தை கமலே இயக்கி நடிக்கிறார். படத்தின் நாயகியாக முதலில் பாலிவுட்டின் இளம்நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்தநிலையில், டைரக்டர் மாற்றம், விசா பிரச்சனை என்று தொடர்ந்து விஸ்வரூபம் படத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டையும் தாண்டி படம் ஆரம்பிக்காததால், இந்தியில் பல வாய்ப்புகள் பறிபோவதாக கூறி, விஸ்வரூபம் படத்தில் இருந்து விலகுவதாக சோனாக்ஷி அறிவித்தார். இதனால் கமலின் படம் மீண்டும் தொங்கலில் விழுந்தது.
இந்நிலையில் சோனாக்ஷிக்கு பதிலாக தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க கமல் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுவும் கைகூடாததால், கடைசியாக தமிழ், தெலுங்கின் முன்னணி நாயகியான அனுஷ்காவை நாடினார். அவரும் உடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம் விஸ்வரூபம் படத்திற்காக நாயகி பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்தமாதம் ஐரோப்பா மற்றும் கனடாவில் சூட்டிங் துவங்க இருக்கிறது. சமீபத்தில் தான் இந்தப் படத்துக்காக பிரமாதமான லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார் கமல்ஹாசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக