பாலிவுட்டில் ஒரு அனுஷ்கா இருக்கிறார்.... அனுஷ்கா சர்மா... பிரபலமான நடிகையும் கூட. இப்போது அவருக்குப் போட்டியாகப் போகிறார் இங்கே டாப் இடத்தில் உள்ள அனுஷ்கா அதாவது அனுஷ்கா ஷெட்டி!
இன்றைய தேதிக்கு அனுஷ்காவுக்கு தமிழ், தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனாலும் அவர் இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இரண்டு பெரிய படநிறுவனங்கள் அவரிடம் கதை சொல்லி ஓகேவும் வாங்கிவிட்டனவாம்.
இதில் ஒரு படத்துக்கு தேதி கூட கொடுத்து விட்ட அனுஷ்கா, அட்வான்ஸ் மட்டும் இப்போது வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
தெற்கிலிருந்து அனுஷ்கா வருகிறார் என்றதுமே, கடுப்பாகிவிட்டாராம் பாலிவுட்டில் ஏற்கெனவே உள்ள அனுஷ்கா சர்மா. தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு, இங்கே ஒரு அனுஷ்கா இருக்கும்போது தெற்கிலிருந்து அவரை வேறு அழைத்து வருகிறீர்களே, சரியா என சிணுங்குகிறாராம்.
என்ன செய்வது... சினிமாவில் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தால்தானே சுவாரஸ்யம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக