என் கல்யாணம் பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை; எனக்கு மாப்பிள்ளையாக பார்த்திருப்பதாக கூறப்படும் தொழில் அதிபர் என் நண்பர்தான், கணவர் இல்லை என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். கல்யாணம் பற்றி அடுத்த வருடம்தான் சிந்திப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். 28 வயதாகும் நடிகை த்ரிஷாவுக்கு செப்டம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாயின. அவரது கணவர் சென்னையை சேர்ந்த தொழில் அதிபராகவோ, சாப்ட்வேர் என்ஜினியராகவோ இருக்கலாம் என்று முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. பின்னர் சென்னையை சேர்ந்த இளம் தொழிலதிபர் அம்ருத்தைத்தான் த்ரிஷா திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று கூறப்பட்டது. ஏனென்றால் அம்ருத்தும், த்ரிஷாவும் ஹோட்டல் பார்ட்டிகளுக்கு ஒன்றாக சென்று வந்ததால் அப்படி கூறப்பட்டது. இதற்கிடையில் மாப்பிள்ளை பார்ப்பது தொடர்பாக த்ரிஷாவுக்கும், அவரது தாய் உமாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இத்தனை குழப்பங்களுக்குப் பிறகு த்ரிஷா ஒரு அதிரடி பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், எனக்கு திருமணம் என்று எத்தனை தடவைதான் செய்திகள் வருமோ தெரியவில்லை. அம்ருத் என் நண்பர்தான். கணவர் அல்ல. பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை. என் திருமணம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடக்கும். அப்போது பார்த்து கொள்ளலாம், என்று கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக