ஐயாவில் அறிமுகப்படுத்திய நயன்தாரா போல் இன்னொரு நடிகை வேண்டும் என்று இயக்குனர் ஹரியால் தாமிரபரணியில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பானு. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்துப் படங்கள் இல்லாமல் போனது சோகம். குடும்பப் பிரச்சனையால் படங்களில் நடிக்காமல் இருந்தவர் அழகர்மலை, சட்டப்படி குற்றம் என மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து.
அழகர்மலைக்குப் பிறகும் உங்களை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லையே...?
நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் எல்லாம் சின்னச் சின்ன ரோல்கள். அதேபோல் ஒரு பாடலுக்கு ஆடச் சொல்லி கேட்கிறார்கள். அப்புறம் வீட்டிலும் சில பிரச்சனைகள். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. தொடர்ந்து நீங்கள் என்னை திரையில் பார்க்கலாம்.
சட்டப்படி குற்றம் படத்தில் சிறிய வேடத்தில்தானே நடித்திருந்தீர்கள்...?
தமிழில் நான் நடித்த இரண்டுப் படங்களிலுமே குடும்பப்பாங்கான கேரக்டர்கள்தான். சட்டப்படி குற்றத்தில் அதிலிருந்து வித்தியாசமான வேடம். கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான துணிச்சலான வேடம். அதனால்தான் ஒப்புக் கொண்டேன்.
சட்டப்படி குற்றம் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
என்னுடைய ஃபோட்டோவைப் பார்த்துதான் இயக்குனர் சார் என்னை தேர்வு செய்தார். முன்பு குண்டாக இருப்பேன். இப்போது ஸ்லிம்மாகிவிட்டேன். அந்தப் ஃபோட்டைவைப் பார்த்துதான் வாய்ப்பு கிடைத்தது.
பொன்னர் சங்கர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறீர்களே?
பேசிக்கலி நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். பொன்னர் சங்கரில் கிளாசிக்கல் நடனம் என்பதால் ஒப்புக் கொண்டேன். மற்றபடி சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கவோ, ஒரு பாடலுக்கு ஆடவோ கண்டிப்பாக மாட்டேன். ஒரு படம் நடித்தாலும் அது பெயர் சொல்கிற மாதிரி எத்தனை வருடங்களானாலும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக