வெயில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா, தனது காதலனுடன் சேர்ந்து புதுப்பட இயக்குனருக்கு தண்ணி காட்டி வருகிறாராம். வெயில் படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் வெயிலின் தாக்கம் மட்டும்தான் மனதில் நிலைத்திருக்கிறது. பிரியங்கா தற்போது நடித்து வரும் படம் செங்காத்து பூமியிலே. கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற ஹிட் படங்களின் வசனகர்த்தாவான ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் சூட்டிங், நொண்டிக் குதிரை போலதான் நகர்ந்து கொண்டிருக்கிறதாம். என்னவென்று விசாரித்தால், படத்தின் நாயகி பிரியங்கா காதல்வசப்பட்ட விவகாரத்தை வயிற்றெரிச்சலுடன்(?) பகிர்ந்து கொள்கிறார்கள்.
செங்காத்து பூமியிலே சூட்டிங்கின்போது டைரக்டர் ரத்னகுமாரிடம் உதவியாளராக பணியாற்றியவரிடம் மனதை பறிகொடுத்திருக்கிறார் பிரியங்கா. கள்ளப்பார்வை, கவனச்சிதறல் என நீடித்த இந்த காதல் ரத்னகுமாரின் காதுகளை எட்டும்போது, காதல் சூடு உச்சத்தை தொட்டிருந்தது. பாதி படத்தை படமாக்கிய பிறகு நடிகையை தூக்க முடியாது என்பதால், உதவியாளரை தூரத்தி விட்டார் ரத்னகுமார்.
படத்தில் இருந்து உதவியாளர் வெளியேறினாலும், பிரியங்காவின் மனதில் இன்னமும் குடிகொண்டிருக்கிறார் என்பதை சமீபத்திய பிரியங்காவின் நடவடிக்கைகளே காட்டிக் கொடுத்து விடுகின்றன. காதலனை விரட்டி விட்ட டைரக்டரின் கண்ணில் விரலை விட்டு ஆட்ட முடியாவிட்டாலும் காதலனுடன் சேர்ந்து தண்ணி காட்ட ஆரம்பித்திருக்கிறாராம் பிரியங்கா. அடக்கொடுமையே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக