நிர்வாணமாக நடிக்கும் நிலை வந்தால் சினிமாவை விட்டே விலகுவேன் என்று பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யாராய் ஹீரோயின் என்ற இந்தி படமொன்றில் நிர்வாணமாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாயின. இதனை ஐஸ்வர்யா ராய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நான் நிர்வாணமாக நடிக்கப் போவதாக வெளியான செய்தி பார்த்து மனம் உடைந்து போனேன். நான் குடும்ப பெண். ஒருவரின் மனைவியாகவும், ஒரு குடும்பத்தின் மருமகளாகவும் இருக்கிறேன். என் மாமியார் வீட்டுக்கென சில கவுரவம் இருக்கிறது. என் மாமனார் அமிதாப்பச்சன் புகழ்பெற்ற நடிகர். அவர்களுக்குகெல்லாம் பங்கம் ஏற்படுத்தும்படி எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். மாமனார் குடும்பத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். எனக்குள்ள கலை ஆர்வத்தை புரிந்து கொண்டு திருமணத்துக்கு பிறகும் என்னை நடிக்க அனுமதித்து உள்ளனர். இது பெரிய விஷயம்.
இந்த நிலையில் நான் நிர்வாணமாக நடிக்கப் போகிறேன் என்று வெளியாகும் செய்திகள் அவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை வதந்தி பரப்புவோர் உணர்ந்து கொள்ள வேண்டும். நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சினிமாவை விட்டே நான் விலகி விடுவேன். என் உயிரே போனாலும் அது போன்று நடிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக