நான் கடவுள் படத்துக்கு பிறகு பூஜாவை கோலிவுட் பக்கம் பார்க்க முடியவில்லை. நடித்தது போதும். திருமணம் செய்துகொள் என்று அவரது அப்பா விதித்த தடைதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப பூஜாவும் அப்பாவின் பிசினஸில் உதவி செய்ய தொடங்கினார்.
இந்நிலையில் இலங்கை படமொன்றில் நடிக்க வந்த வாய்ப்பை பூஜாவால் மறுக்க முடியவில்லையாம். அப்பாவின் தடையை மீறி அப்படத்தில் நடிக்கிறார். இது பற்றி பூஜா கூறியது: எனக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் எனது அப்பா இருந்தார்.
அவரது விருப்பத்தை என்னால் மீற முடியவில்லை. இதற்கிடையில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஏற்கவில்லை. இலங்கையில் 10 பிரபல தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்கும் -குச ஃபாபா- என்ற சிங்கள மொழிப் படத்தில் நடிக்க என்னை கேட்டபோது மறுக்க முடியவில்லை.
புத்தமத கதையொன்றை தழுவி திஷா அபிஷேகரா எழுதிய ஸ்கிரிப்ட் இது. இளவரசன் வேடத்தில் இலங்கை நடிகர் ஜேக்ஸன் ஆன்டனி நடிக்கிறார். இளவரசி வேடத்தில் இந்திய பட ஹீரோயின்தான் நடிக்க வேண்டும் என்று கதாசிரியர் கூறினார். அதன்படி எனக்கு இந்த வாய்ப்பு வந்தது.
இந்திய ஹீரோயின்தான் நடிக்க வேண்டும் என்று கதாசிரியர் கூறியதற்கு காரணம் என்ன என்று கேட்கிறார்கள். அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொண்ட வேடத்தில் 100 சதவீதம் ஈடுபாடுகாட்டுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக