எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகர் விமலுக்கு பதிலாக புதுமுகம் ஷர்வானந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் அஞ்சலியும், அனன்யாவும் இரு நாயகிகளாக நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் சேர்ந்து ஆர். முருகதாஸ் தயாரிக்கும் படம் எங்கேயும் எப்போதும். இதில் 2 நாயகன்கள், நாயகிகள். ஜெய், அஞ்சலி, ஷ்ர்வானந்த் மற்றும் அனன்யா நடிக்கின்றனர். ஷர்வானந்திற்கு இது தான் முதல் படம். இந்த படத்தி்ற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் முருகதாஸ் உதவியாளர் சரவணன்.
இது குறித்து சரவணன் கூறியதாவது,
இந்த படத்தில் 2 காதல் ஜோடிகள் உள்ளன. இது அவர்களின் காதல் கதை தான். கிளைமாக்ஸில் 2 ஜோடிகளும் இணைவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வில்லனும் கிடையாது, காதல் எதிரிகளும் கிடையாது. என்னடா வில்லனே இல்லை என்று நினைக்கிறீர்களா?
வில்லன் இல்லாமலேயே காதல் என்னவாகிறது என்பதை சுவாரஸ்யமாகக் கூறுகிறோம். ஹீரோயின் லிஸ்டில் சமமான இடத்தில் இருப்பவர்கள் அஞ்சலி, அனன்யா. கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் நடிக்கின்றனர். அவர்கள் சேர்ந்து வரும் காட்சிகள் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஷர்வானந்த் கதாபாத்திரத்தில் விமல் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. 90 சதவீத படபிடிப்பு முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக