பக்கங்கள்

15 ஜூலை 2011

நிலாவிற்கும் அதுக்கும் தொடர்பில்லையாம்.

ஹரியானா மாநிலத்தில் நடந்த கொலைச் சம்பவத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை நிலா ஹரியானா மாநில டிஜிபியை நேரில் சந்தித்துத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடிகை ரஞ்சிதா போலீஸ் கமிஷனரை சந்தித்த அதே நாளில் நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா, தனது கள்ளக்காதலரின் மனைவி கொலை வழக்கு தொடர்பாக ஹரியானா டிஜிபியை சந்தித்துள்ளார்.
குர்கானைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நடிகை நிலாவுடன் கொண்ட கள்ளத்தொடர்பால் சுமித் தான் தனது மனைவியைக் கொன்று தொங்கவிட்டுள்ளார் என்று ருச்சியின் சகோதரி ஷெபாலி தெரிவித்தார். இதையடுத்து சுமித் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிலா கைதாகலாம் என்று கூறப்பட்டது. நிலாவைப் பிடிக்க டெல்லிக்குப் போலீஸ் படையும் விரைந்தது.
இந்நிலையில் திடீரென நிலா ஹரியானா டிஜிபியை சந்தித்து பேசியுள்ளார்.
அன்மையில் அவரைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்து வருத்தம் அடைந்துள்ளார் நிலா. அதனால் தான் டிஜிபியை சந்தித்து பேச முடிவு செய்தார் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.
நிலா விவகாரத்தில் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், டிஜிபியை நிலா சந்தித்து என்ன பேசினார் என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக