பக்கங்கள்

08 நவம்பர் 2010

'அர்ஜூன் ராசா..'-உருகும் ஹரிப்ரியா!

நடிகர் அர்ஜூன், இதயங்களை கொள்ளை கொள்ளும் ராஜா என்று அர்ஜூன் புராணம் பாடிக் கொண்டிருக்கிறாராம் நடிகை ஹரிப்ரியா.
கன்னடத்து ஹரிப்ரியா, அர்ஜூனுடன் இணைந்து வல்லக்கோட்டை படத்தில் நடித்துள்ளார். படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை நிற்காமல் அர்ஜூன் புராணம் பாடி புளகாங்கிதமடைந்து காணப்படுகிறாராம் ஹரிப்ரியா.
ஏன் இப்படி அர்ஜூன் புராண் என்று 'ஹரி'யிடம் கேட்டால், அர்ஜூன் சார் அப்படி ஒரு 'அமைக்கபிள்' ஆன நபர். அவருடன் நடிக்கப் போகிறேன் என்று கேட்டதுமே எனக்கு திரில்லாகி விட்டது. அர்ஜூன் சாருடன் இணைந்து நடித்தது இதுவே முதல் முறையாகும். இதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு அர்ஜூன் படங்களிலேயே மிகவும் பிடித்தது ஜென்டில்மேன்தான். படத்தின் பெயருக்கேற்ப அவரும் உண்மையில் ஒரு ஜென்டில்மேன்தான்.
மிகவும் எளிமையானவர் அர்ஜூன். இயல்பாக பழகினார். டயலாக்கை எப்படி உச்சரிப்பது என்பது குறித்து எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். இயல்பாக நடிக்க எனக்கு பேருதவி புரிந்தார்.
படத்தில் வரும் டூயட் பாட்டில் மகதீரா, மகதீரா என்று வரிகள் வரும். மகதீரா என்றால் தெலுங்கில் ராஜா என்று பெயர். உண்மையிலேயே அர்ஜூனும் இதயங்களை கொள்ளை கொள்ளும் ராசாதான் என்கிறார் ஹரிப்ரியா.
நமக்கே ரொம்ப புல்லரிக்குதே...!

05 நவம்பர் 2010

'சிக்' ஷ்ரியா-சிலிர்க்கும் ஹீரோக்கள்!

ஷ்ரியாவின் நடிப்புக்குப் பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ அவரது அழகுக்கும், உடல் அமைப்புக்கும் நிறையவே பாராட்டுக்கள் கிடைக்கிறதாம்-ஹீரோக்களிடமிருந்து.
சிக் உடல் நாயகிகளுக்குத்தான் இன்று மார்க்கெட் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இந்தியில், சைஸ் ஜீரோ நாயகிகளுக்கு செம கிராக்கி உள்ளது. தமிழ் சினிமாவிலும் கூட இப்போது சிக் நாயகிகள் பெருத்துப் போய் விட்டார்கள்.
அவர்களில் முக்கியமானவர் ஷ்ரியா. இவரது உடல் வாகு தொடர்ந்து ஒரே மாதிரியாக இருப்பதாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள். நடிக்க வந்தபோது என்ன சைஸில் இருந்தாரோ அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறாராம் ஷ்ரியா.
தற்போது மேலும் ஸ்லிம்மாகி பல ஹீரோக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளாராம். ஆனால் இந்த ஹீரோக்கள் எல்லாம் இந்தி ஹீரோக்களாம். அவர்கள் ஷ்ரியாவின் ஸ்லிம் அழகை பாராட்டியதோடு, எப்படி இப்படி தொடர்ந்து கட்டுக்கோப்பாக உடலை வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் ஆச்சரியத்தோடு கேட்கிறார்களாம்.
எல்லோருக்கும் ஷ்ரியா சொல்கிற ஒரே பதில் யோகா செய்வதால்தான் என்பதுதானாம். ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல் தனக்கு நெருக்கமான சில ஹீரோயின்களுக்கும் கூட யோகா செய்யுமாறு அட்வைஸ் செய்கிறாராம் ஷ்ரியா.
ஷ்ரியாவின் அட்வைஸைக் கேட்டு உடம்பை ஸ்லிம்மாக்க யோகாவுக்கு மாறி தீவிரமாக அதைக் கடைப்பிடித்து வருகிறாரம் ஷ்ரியாவின் தோழியான ரீமா சென்.

03 நவம்பர் 2010

'உம்மாடா செல்லம்':சொன்னது பாக்கியாஞ்ச்சலிதான்.

நான் நடிகை பாக்யாஞ்சலியை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரி வற்புறுத்தவில்லை. மாறாக, நடிகை பாக்யாஞ்சலிதான் என்னைக் காதலிப்பதாக கூறி எனக்குக் கடிதம் எழுதினார், எஸ்.எம்.எஸ். அனுப்பினார் என்று கோர்ட்டில் வில்லன் நடிகர் வேலு தெரிவித்துள்ளார்.
நெல்லு, உன்னையே காதலிப்பேன், கோட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் பாக்யாஞ்சலி. அதற்குள் பெரும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். வில்லன் நடிகர் வேலு தன்னை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்வதாகவும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும், தனது வீட்டில் வைத்து அடித்து உதைத்ததாகவும், முத்தம் கொடுத்தது போல புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாகவும் அவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து துணை ஆணையர் லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். நடிகையிடம்நேரில் விசாரணை நடந்துள்ளது.ஆனால் நடிகர் வேலு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அப்படியும் வரவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி செஷன்ஸ் கோர்ட்டை நாடியுள்ளார் வேலு.
இந்த மனு நேற்று 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பரஞ்சோதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் வேலுவின் வக்கீல் ஆஜராகி, வேலுவுக்கு பாக்யாஞ்சலி காதல் கடிதம், எஸ்.எஸ்.எஸ் அனுப்பியுள்ளார்.
'உம்மாடா செல்லம்'
அந்தக் கடிதத்தில், மை டியர் வேலு, நீ எங்கே இருக்கிறாய்? நீ இல்லாமல் நான் இல்லை. நீ எனக்கு தேவை. உன்னைப் பார்க்கணும். உன்னை கட்டித் தழுவ வேண்டும். ஐ லவ் யூ சோ மச், உம்மாடா செல்லம். நான் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும். கடிதத்தின் கீழே ஐ லவ் யூ என்று 6 தடவை எழுதியுள்ளார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து கடிதத்தை பாக்யாஞ்சலிதான் எழுதினாரா என்பதை கண்டுபிடிக்க அவகாசம் தேவை என்பதால் விசாரணையை ஒத்திவைக்குமாறு அரசுத் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்ற நீதிபதி,நாளை மறுநாளைக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

02 நவம்பர் 2010

நான் இனிமே அமலா-அனகா!

நடிகை அனகா தனது பெயரை மீண்டும் ஒரிஜினல் பெயரான அமலா பால் என்றே மாற்றி விட்டார்.
கேரளாவிலிருந்து நடிக்க வந்தவர் அனகா. சிந்துசமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்த அவர் அந்த சர்ச்சையை தற்போது மறக்க விரும்புகிறாராம்.
யாராவது சிந்துசமவெளி படம் குறித்து கேட்டால், அய்யோ, அதை விடுங்க சார், இப்போது மைனா படத்தில் நடித்திருக்கிறேன். அதைப் பற்றிக் கேளுங்கள் என்று கூறி மைனா குறித்து விரிவாகப் பேசுகிறார்.
சிந்துசமவெளிக்கு் முன்பு வரை அமலா பால் என்ற பெயரிலேயே அவர் நடித்து வந்தார். ஆனால், சிந்துசமவெளி படத்தின்போது இயக்குநர் சாமிதான் அனகா என்று பெயரை மாற்றினார். இப்போது சிந்துசமவெளி தொடர்பான அடையாளத்தையே வெறுக்கும் அனகா, தனது ஒரிஜினல் பெயரான அமலா பாலுக்கே மாறி விட்டாராம்.
இனிமேல் என்னை அமலா என்றே அழையுங்கள் என்றும் கொஞ்சலாக கூறுகிறார்.
சிந்துசமவெளி சர்ச்சையின்போது பெரும் மன வேதனை அடைந்திருந்தாராம் அனகா. அப்போது அவரது தோழியர்தான் பெரும் ஆறுதல் கூறினார்களாம். கேரளாவில் பிஏஆங்கிலம் படித்து வருகிறார் அனகா என்பது உபரித் தகவல்.

01 நவம்பர் 2010

பாடல் மூலம் அம்புவிடும் மன்மதன் கமல்!

மன்மதன் அம்பு படத்தில் கமல் ஹாஸனே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
சினிமா உருவாக்கம் என்று வந்தால் கமல்ஹாஸன் ஒரு நிஜமான சகலகலா வல்லவன். இயக்கம், பாடுவது, நடனம், நடிப்பு என அவர் அனைத்து துறையிலுமே வல்லவர்தான்.
ஏற்கெனவே தன்னை ஒரு திறமையான பாடலாசிரியராக, ஹே ராம் படத்தில் நிரூபித்தார். இளையராஜா இசையில் எப்போது கேட்டாலும் இதயத்தை வருடும், 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...' பாட்டு கமல் எழுதியதுதான்.
அடுத்து மன்மதன் அம்பு படத்துக்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 4 பாடல்களை எழுதியுள்ளார் கமல்.
இதுகுறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறுகையில், "மன்மதன் அம்பு படத்தில் கமல்தான் ஹைலைட். நடிப்பு என்றில்லாமல், பல துறைகளிலும் கமலின் பங்களிப்பு இந்தப் படத்தில் அதிகம். அதற்கு ஒரு உதாரணம், இந்தப் படத்தின் 5 பாடல்களில் நான்கை கமல் சாரே எழுதியிருப்பதுதான்..." என்றார்.
பாடல் வெளியீட்டு விழா நவம்பர் 20-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. படம் டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

30 அக்டோபர் 2010

மீண்டும் ஆட்டம் போடுகிறார் மாளவிகா!

கல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து, ஓய்வு முடிந்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாளவிகா.
எம்.ஜி.ஆர் நம்பி தயாரித்து இயக்கும் படம் பொறுத்திரு என்ற படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போடுகிறார்.
எம்ஜிஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம் பெற்ற 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாளவிகா நடனமாடுகிறார். எம்ஜிஆர் நம்பியே ஹீரோவாகவும் நடிக்கிறார்.
"நான் பால்காரன் வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். மாளவிகா திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகை மாளவிகாவாகவே நடிக்கிறார். கிராமத்துக்கு டீக்கடை திறக்க வரும் அவரை, ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் வரவேற்கிறேன். மாளவிகாவையும் என்னையும் இணைத்து எனது அத்தை மகள் கனவு காண்பதாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாட்டுக்கு புதிதாக ட்யூன் போடாமல், 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம்பெற்றுள்ள நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்... பாடலையே ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளோம்.
மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு கடைசி படம்..." என்றார் இயக்குநர் எம்ஜிஆர் நம்பி.

27 அக்டோபர் 2010

'டைரக்டர் மட்டும் இல்லேன்னா... '-அதிர்ச்சியில் அஞ்சலி!

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படப்பிடிப்பில் நடந்த திடீர் தாக்குதலில் இயக்குநரால் காப்பாற்றப்பட்டார் நடிகை அஞ்சலி.
இயக்குநர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் தப்பித்திருக்கவே முடியாது', என்கிறார் அஞ்சலி அதிர்ச்சி விலகாமல்.
அஞ்சலியும் கரணும் ஜோடியாக நடிக்கும் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படப்பிடிப்பு குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியில் நடந்தது. நேற்று பகல் அஞ்சலி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது 7 பேர் அடங்கிய கும்பல ஆட்டோவில் வந்து இறங்கி, 'குமரி மாவட்டத்துக்காரன் கதையை எப்படி சினிமாவாக எடுக்கலாம்' என கேட்டு இயக்குனர் வடிவுடையானை அடித்து உதைத்தது. சட்டை கிழிக்கப்பட்டது. கார் உடைக்கப்பட்டது. படப்பிடிப்பு சாதனங்கள் உடைக்கப்பட்டன.
ஹீரோயின் அஞ்சலியையும் தாக்க தேடினார்கள். அப்போது அஞ்சலியை போர்வையால் போர்த்தி ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைக்கும்படி உதவி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டார் இயக்குநர். இதர துணை நடிகர், நடிகைகள் அலறியடித்து ஓடினார்கள்.
"தக்க சமயத்தில் இயக்குநரும் உதவி இயக்குநர்களும் என்னைக் காப்பாற்றினார்கள். அந்த கும்பல் கையில் கிடைத்திருந்தால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று பயமாக இருக்கிறது.." என்றார் அஞ்சலி.

25 அக்டோபர் 2010

தமிழ்,தெலுங்கு இரண்டும்தான் எனது பலம்,களம்.

தமிழ்,தெலுங்கு சினிமாதான் எனது பலம், களம் என்று எனக்கு நன்றாக தெரியும். அதை விட்டு நான் போக மாட்டேன். இந்தியில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறுவது சரியில்லை. வாய்ப்புகள் வருகின்றன, ஆனால் நல்ல வாய்ப்புகளை மட்டுமே நான் ஏற்பேன் என்று கூறுகிறார் 'தென்னிந்திய தேவதை' திரிஷா.
நடிகர்களுக்கு இணையாக ரசிகர் மன்றம் வைத்து, பேனர் கட்டி, பாலாபிஷேகம் செய்து அசத்தியவர்கள் திரிஷா ரசிகர்கள். தென்னிந்திய தேவதை என்றும் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். இதெல்லாம் தமிழிலும், தெலுங்கிலும் திரிஷா படு பிசியாக ஓடிக் கொண்டிருந்தபோது.
இப்போது திரிஷாவின் பரபரப்பு சற்றே அடங்கினாற் போல உள்ளது. காரணம் அவர் திடீரென கட்டா மீட்டா என்று இந்தியில் நடிக்கப் போனதால். அதேசமயம், மறுபடியும் அவர் தமிழிலில் பிசியாகியுள்ளார். கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அஜீத்துடன் மங்காத்தா ஆடவுள்ளார்.
இதை வைத்து இந்தியில் வாய்ப்பிழந்து விட்டார் திரிஷா. அதனால்தான் மீண்டும் செளத்துக்கே வந்து விட்டார் என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இதைக் கேட்டு திரிஷா 'டெர்ரர்ஷா'வாகியுள்ளார். ஏன்தான் இப்படியெல்லாம் வதந்திகள் பரப்புகிறார்களோ என்று அழாத குறையாக புலம்புகிறார்.
கட்டா மீட்டா அருமையான படம். இந்தியில் அதற்கு நல்ல விமர்சனங்கள்தான் வந்தன.அதன் பிறகும் கூட எனக்கு நிறையப் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கும் நடிக்க வாய்ப்பு இருக்க வேண்டுமே. அப்படிப்பட்ட படங்களைத்தானே நான் ஒப்புக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட வாய்ப்புகளுக்காக மட்டுமே நான் காத்திருக்கிறேன் என்றார் திரிஷா.
அத்தோடு நில்லாமல், எனக்கு தமிழும், தெலுங்கும்தான் உண்மையான பலம், எனக்கான களம். எனவே நான் இங்குதான் அதிக கவனம் செலுத்துவேன். அதுதான் இயல்பு. அப்படித்தான் இப்போது தமிழிலும், தெலுங்கிலும் நடித்து வருகிறேன். ஆனால் தேவையில்லாமல் எனக்கு வாய்ப்புகள் போய் விட்டது என்று வதந்தி பரப்புகிறார்களே என்று விசனப்படுகிறார்.
வதந்தியாளர்களே, பொம்பளங்க பொல்லாப்பு வேண்டாமப்பு, சொல்லிப்புட்டோம், அம்புட்டுதேன்..!

24 அக்டோபர் 2010

தினமும் ஆபாச வார்த்தைகள் மாயா மீது சீதா புகார்!

நடிகைகள் சீதாவுக்கும், மாயாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கூறியுள்ளனர்.
சீதா, மாயா வீடுகள் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலினியில் அருகருகே உள்ளது.மாயா வீட்டை தாண்டிதான் சீதா வீட்டுக்கு செல்ல வேண்டும். சீதாவை பார்க்க வருபவர்கள் தனது வீட்டு முன்கார்களை நிறுத்தி விடுவதாக மாயா புகார் கூறியுள்ளார்.
சீதா வீட்டுக்கு தினமும் இரவிலும், பகலிலும் நிறைய பேர் காரில் வந்து செல் கிறார்கள். அவர் வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
சீதா வீட்டில் வசிக்கும் சதீஷ் என்னோடு சண்டை போடுகிறார். கொலை மிரட்டலும் விடுக்கின்றார் என்றெல்லாம் மாயா புகார் கூறினார்.
சீதா சார்பில் டி.வி. நடிகர் சதீஷ் போலீஸ் கதிஷனர் அலுவலகத்தில் மாயா தரக்குறைவாக பேசி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். மாயா குற்றச்சாட்டுகள் பற்றி சீதாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
மாயா வீடும் என் வீடும் தள்ளித் தள்ளித்தான் இருக்கிறது. என்னுடன் கடந்த இரண்டு வருடமாகவே இவர் சண்டை போட்டு வருகிறார். ரோடு எல்லோருக்கும் பொதுவானது. அதில் யாரோ காரை நிறுத்தினால் நானா பொறுப்பு. சினிமாவில் இருப்பவர்களை பார்ப்பதற்கு ஆட்கள் வரத்தான் செய் வார்கள்.
நடிக்க ஒப்பந்தம் செய்யவும், கதை சொல்ல வும், சூட்டிங்குக்கு அழைத்து போகவும் பலர் வந்து போவது உண்டு. அதை மாயா தவறாக பேசுகிறார். தினமும் தெருவில் நின்று கொண்டு கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை திட்டுகிறார். பெண் தாதாவை போல் மிரட்டுகிறார்.
நான் நாகரீகம் கருதி பதில் பேசுவது இல்லை. ஒதுங்கி போகிறேன். அவரது அடாவடித்தனங்கள் எல்லை மீறி போய்விட்டது. நானும் மாயாவின் தரம் பற்றி பேச முடியும். அவர் எப்படிப்பட்டவர் என்று சினிமா உலகத்துக்கே தெரியும். போலீசார் மாயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சீதா கூறினார்.

21 அக்டோபர் 2010

அது நானில்லை… ஏமாந்துடாதீங்க!- அசின்.

தன் பெயரில் இணையதளத்தில் தொடர்ந்து மோசடி நடப்பதாகவும், இதைத் தடுக்கக் கோரியும் முடியாததால், ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நடிகை அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணைய தளத்தில் அசின் பெயரில் போலி வெப்சைட்கள் இயங்குகின்றனவாம். ஆர்குட்டிலும் அசின் பெயர் உள்ளது. அசின் பேசுவதுபோல் அவற்றில் தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளது. அவரது படங்களும் போடப்பட்டு உள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் அசின் என்று நம்பி பதில்களை அனுப்பி வருகின்றனராம்.
இதுபற்றி அசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், உடனடியாக இவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் சில ரசிகர்கள் கேட்கிறபாடில்லையாம். இதனால் அவர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் அசின்.
“இணையதள வெப்சைட்களில் நான் இல்லை. ட்விட்டர், ஆர்குட், பேஷ்புக் போன்ற எதிலும் நான் கிடையாது. எனது பெயரில் போலியாக சிலர் அவற்றை நடத்துவதாக என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. என்னுடைய நண்பர்களும், ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி எனக்கு தகவல்கள், கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள். நான் அவற்றை பார்ப்பதே இல்லை. தயவு செய்து ரசிகர்கள் ஏமாற வேண்டாம். விரைவில் சைபர் கிரைம் பிரிவில் புகார் தரப் போகிறேன்” என்கிறார் அசின்.

20 அக்டோபர் 2010

‘இந்தியாவில் நம்பர் ஒன்…’- த்ரிஷாவின் ஆசை!!

No,one நடிகை என்று பெயர் வாங்கிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் நடிகை த்ரிஷா.
திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா. சாமி, கில்லி போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கியது.
தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போனார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு நவம்பரில் வெளியாகிறது.
அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வரும் த்ரிஷா, இந்தப் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம் அவருக்கு இப்போது வயது 27ஐத் தாண்டிவிட்டது.
ஆனால் த்ரஷாவோ இதனைக் கடுமையாக மறுக்கிறார்.
“என் வயசெல்லாம் ஒரு வயசா… நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன.
அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவயா படங்ககள் சிறந்த கதையம்சம் உள்ளவை மன்மதன் அம்பு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நம்பர் ஒன் நடிகை என பெயர் வாங்குவதே என் லட்சியம். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன். திரையுலகில் எனக் கென்று ஒரு அங்கீகாரம் இப்போது தான் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.
இந்தியில் நான் நடித்த காட்டா மீட்டா படம் ஹிட்டாக வில்லை என்று பேசுகிறார்கள். நடிப்பதுதான் என் வேலை. படம் வெற்றியா? தோல்வியா என்றெல்லாம் சிந்திக்க மாட்டேன்.
இந்திப் படம் நடித்ததன் மூலம் மும்பையில் நிறைய பேர் பழக்கமாகி இருக்கிறார்கள். மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பேன், இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்ற பெயரெடுத்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிப்பேன்”, என்றார்.

19 அக்டோபர் 2010

நடிக்க விருப்பம்தான்: ஆசையை போட்டு உடைத்த நயன்தாரா!

நடிக்க எனக்கு விருப்பம்தான். ஆனால் நான் நடிக்க பிரபுதேவா விடமாட்டார் என்று நடிப்பு மீது தனக்கிருந்த ஆசையை போட்டு உடைத்துள்ளார் நடிகை நயன்தாரா.
பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை கை கழுவிவிட்டு நயன்தாராவுடன் வாழத் தயாராகி விட்டார். ரமலத் சட்டப்படி பிரச்னையை அணுகப் போவதாக தெரிந்ததும் அவருடன் சமாதானப் பேச்சிலும் அவர் ஈடுபட்டார்.
இந்த நிலையில் திருமணத்துக்குப் பின் நடிக்கமாட்டேன் என்று கூறி வந்த நயன், திருமணத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களைப் பார்த்து மனதை மாற்றி்க கொண்டுள்ளார்.
மேலும் எனக்கு நடிக்க விருப்பமே. ஆனால் அவர்தான் விடமாட்டேன்கிறார். அவர்கிட்டயே கேட்டுக்குங்க என்று தயாரிப்பாளர்களை பிரபுதேவா பக்கம் திருப்பி விட்டும் வருகிறார்.

17 அக்டோபர் 2010

காப்பி அடித்தது ஷாருக்கா, ஷங்கரா?

ரஜினியின் எந்திரன் / ரோபோவில் வரும் காட்சியைப் போலவே ஷாரூக்கானின் படத்திலும் ரயில் சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளதாம். ஆனால் தனது படத்தில் வருவது போன்ற காட்சி ரோபோவில் வந்து விட்டதால் இப்போது அந்தக் காட்சியை மாற்றத் திட்டமிட்டுள்ளாராம் ஷாருக்.
பெரும் பொருட் செலவில் ரா ஒன் என்ற விஞ்ஞானப் படத்தை எடுத்து வருகிறார் ஷாரூக்கான். இந்தப் படத்தில் ஒரு பிரமாண்டமான ரயில் சண்டைக்காட்சி இடம்பெற்றுள்ளதாம்.
எந்திரன் வெளியான பிறகு, ஷாரூக்கான் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். காரணம் அந்த ரயில் சண்டைக் காட்சி எந்திரனில் இடம்பெற்றது போலவே அச்சு அசலாக வந்திருந்ததுதானாம்.
இதே காட்சி ரோபோட்டில் இடம் பெற்றிருப்பதால், ரோபோட்டை பார்த்து நாம் காப்பி அடித்து விட்டதாக ரசிகர்கள் சொல்வார்களே என்று ஷாருக்கானிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இதையடுத்து காட்சியை மாற்றச்சொல்லி விட்டாராம் ஷாரூக்.
ஆனால் அந்த சண்டைக் காட்சிக்கு ஷாரூக் செலவிட்ட தொகை ரூ 3 கோடியாம்.
ஷங்கரை விட பிரமாண்டம்தான்!

15 அக்டோபர் 2010

கண் சிகிச்சையால் பார்வை இழப்பு: அசின் பதில் சொல்ல வேண்டும்!

சிறிலங்க அரசோடு இணைந்து யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும் என்று மே 17 இயக்கம் கோரியுள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது.
அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘ரெடி’ திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்பு முடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார். அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றார். யாழ்ப்பாணத்திலும், முல்லைத் தீவிலும் இந்த கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கண் வெண்விழிப்படலத்திற்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மேலும் 10 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்போவதாகவும் நடிகை அசின் கூறியிருந்தார்.
நடிகை அசின் முன்னிலையில் நடத்தப்பட்ட அந்த கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பலருக்கு கண் பார்வை போய்விட்ட அதிர்ச்சி செய்து வந்துள்ளது. கண் பார்வை இழந்தவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் ரூ.4,500 செலுத்த வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதாக இருந்தால் ரூ.25,000 வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையை இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், சிறிலங்க அரசோடு இணைந்து நடிகை அசின் நடத்திய கண் அறுவை சிகிச்சை முகாம் அவர்களின் வாழ்வை அழித்துவிட்டது என்று குற்றம் சாற்றினார்.
போரினால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களை, மனிதாபிமான போர்வையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமினால் நடிகை அசின் அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளார் என்றும், இதற்காக அவர் ஈழத் தமிழர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
அசின் நடத்திய கண் சிகிச்சை முகாம் இங்குள்ள நடிகர்கள் சிலருக்கு ஒரு கண் திறப்பாக இருக்கட்டும் என்று கூறிய திருமுருகன், இதற்குப் பிறகாவது சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் தமிழ்த் திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருமுருகனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், சிறிலங்க அரசிற்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்துக் கொண்டிருக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் அயல் நாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதை ஏன் சிறிலங்க அதிபரின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச தடுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
வன்னி முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி அளித்தது சர்வதேச இடம்பெயர்வோர் அமைப்புதான் (International immigration organization) என்றும், இன்றுவரை சிறிலங்க அரசு அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் கூறிய அய்யநாதன், பிழைக்க வழியின்றி, கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற மிக ஆபத்தான வேலைகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் திரைப்பட உலகின் எதிர்ப்பை மீறி ஐஃபா விழாவில் கலந்து கொண்ட இந்தி நடிகர் நடித்துள்ள ரத்த சரித்திரம், அசின் நடித்து வெளிவரும் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜனநாயக வழியில் இயக்கம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.

12 அக்டோபர் 2010

குழந்தைகள் சிரிப்பிலே சினேகா பிறந்தநாள்!

விரும்புகிறேன்’ படத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கி, சுமார் பத்தாண்டுகளாகியும் சினிமா உலகில் அனைவராலும் விரும்பி போற்றப்படுபவர் ‘புன்னகை இளவரசி’ சினேகா. இன்று (12.10.10) அவர் பிறந்த நாள்.
பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடனும், சினிமா நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் இனிதே தொடங்கியது சினேகாவின் பிறந்தநாள் காலைப்பொழுது.
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு செய்தார் சினேகா. அதன் பிறகு, கீழ்பாக்கத்தில் உள்ள பால விஹார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தனது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்.
அங்குள்ள குழந்தைக்களுக்கு கேக்கினை ஊட்டி மகிழ்ந்தார் சினேகா. சில மணிப்பொழுதுகளை அந்தக் குழந்தைகளுடன் ஆனந்தமாக கொண்டாடினார். பாலவிஹாஸ் இல்லத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் வாங்கித்தந்தார். குழந்தைகள் அனைவருக்கும் ஆடைகள், இனிப்புகள், எழுது பொருட்கள் வழங்கினார். அத்துடன் அந்தக் குழந்தைகளுக்கு தேவையான இன்னும் பிற உதவிகளையும் செய்தார்.
இப்படி ஆதரவற்ற குழந்தைகளின் மகிழ்ச்சிப் புன்னகையில், புன்னகை இளவரசியின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சினேகாவின் நல்ல மனம் வாழ்க! என நாமும் வாழ்த்துவோம்.

11 அக்டோபர் 2010

த்ரிஷாவுக்கு ‘கெட் அவுட்’-எமிக்கு ‘வெல்கம்’!

கவுதம் மேனன் தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பின் வேலைகளைத் துவங்கிவிட்டார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்திலும் த்ரிஷாவே நாயகி என்று கூறப்பட்டது. கவுதமும் அப்படித்தான் சொல்லி வந்தார். ஆனால் இப்போது அதில் மாற்றம்.
மதராஸப்பட்டினம் புகழ் எமி ஜாக்ஸனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். இந்தியில் த்ரிஷாவின் முதல்படமே பப்படமாகிவிட, இனி அவரால் அந்த ரோலுக்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து இந்த முடிவுக்கு வந்தாராம்.
இதற்கிடையே, சமீபத்தில் தான் தயாரிக்கும் அழகர்சாமியின் குதிரை படத்துக்கு இளையராஜா இசையில் வந்திருக்கும் பாடல்களைக் கேட்டு, சிலிர்த்துப் போனாராம் கவுதம்.
இசையில் அவரோட டச்சே தனி என்றாராம் படத்தின் இயக்குநர் சுசீந்திரனிடம்!

09 அக்டோபர் 2010

தமிழ் பேசப்போகும் கவர்ச்சிப் பாம்பு!

மல்லிகா ஷெராவத்துக்கு அறிமுகம் தேவையில்லை. அம்மணி ஹிஸ் எனும் சர்வதேசப் படத்தில் நடித்துவருகிறார். அதென்ன ஹிஸ் என்கிறீர்களா? பாம்பு சீறும்போது எழுப்புமே சத்தம் அதே தான்.
படத்தில் மல்லிகா நாகப் பெண்மணியாக வருகிறார். ரொமாண்டிக் காமெடிப் படமாம். ரொமான்ஸ் இல்லாமல் மல்லிகாவை வைத்துப் படமெடுப்பார்களா என்ன?
இந்த சர்வதேச ரொமான்ஸ் மூவியை தமிழிலும் டப் செய்து வெளியிட்டு தமிழ் ரசிகர்களின் வயிற்றில் பால் வார்க்கத் திட்டமிட்டிருக்கின்றனர் அதன் தயாரிப்பாளர்கள்.
மல்லிகா மாதிரியான கவர்ச்சிக் கன்னிகளின் படத்துக்கு மொழியே தேவையில்லை எனும் மகத்தான விஷயம் அதன் தயாரிப்பாளருக்குத் தோன்றாமல் போனதேன்?

08 அக்டோபர் 2010

‘பாலக்காட்டுக்கு போங்க… அதான் சேஃப்!’ – அசின் அடம்!

காவலன் படத்தின் மிச்சப் பகுதியை கேரளாவிலே வச்சிக்கலாம். பாலக்காட்டுக்குப் போயிடலாம் அதான் சேஃப் சேட்டா!’
மேட்டுப் பாளையத்தில் பெரியார் திகவினர் மேற்கொண்ட கறுப்புக் கொடி போராட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன அசின் சொன்னது இது.
ஹீரோயினாச்சே… அதிலும் விஜய்யின் பேவரிட் ஹீரோயின் சொன்ன பிறகு அப்பீலேது?
அடுத்த நாளே பாலக்காடு பறந்தது காவலன் படக்குழு, ஹீரோ விஜய்யுடன்.
மேட்டுப் பாளையத்தில் எடுக்க வேண்டிய பல காட்சிகளை ஒத்தப்பாலம் மற்றும் பாலக்காடு பகுதியிலேயே வைத்து எடுத்துக் கொண்டார்களாம். மூன்று தினங்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பில் வடிவேலுவும் பங்கேற்றார். “இப்போதான் எனிக்கு ரிலீஃப்” என்று அசின் கூற, “அதெப்படி… ரிலீசாகணுமில்ல. அதையும் பாலக்காட்டிலேயே வச்சிக்கிற முடியுமா… போத்தா!” என்று நக்கலடித்தாராம் வடிவேலு.
அது!

07 அக்டோபர் 2010

டான்ஸிலும், நடிப்பிலும் கலக்கியுள்ளார் ஐஸ்வர்யா-அமிதாப் பச்சன் பாராட்டு.

எந்திரன் படத்தில் இதுவரை காணாத அளவுக்கு மிக அற்புதமாக டான்ஸ் ஆடியுள்ளார் ஐஸ்வர்யா ராய். நடிப்பு, டான்ஸ் இரண்டிலும் கலக்கி விட்டார் என்று பாராட்டியுள்ளார் மாமனார் அமிதாப் பச்சன்.
மும்பையில் நடந்த எந்திரன் இந்திப் பதிப்பின் விசேஷக் காட்சியை ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, ஜெயா பச்சன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பார்த்து ரசித்தார் அமிதாப் பச்சன்.
பின்னர் அங்கேயே ரஜினியையும், ஐஸ்வர்யாவையும் அவர் பாராட்டினார். தற்போது தனது பிளாக்கிலும் பாராட்டித் தள்ளியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐஸ்வர்யா ராய் கலக்கி விட்டார். இதுவரை அவருடைய எந்தப் படத்திலும் இப்படி ஒரு நடனத்தை நான் பார்த்ததில்லை. படு ஸ்டைலாக இருக்கிறது டான்ஸ். அதை விட நடிப்பும். இரண்டிலும் பிரதமாதப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா.
ரஜினியைப் பற்றி என்ன சொல்வது. என்ன செய்வார் என்பதை கணிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் பிரமாதப்படுத்துகிறார்.
வேடிக்கை, புதுமை, தொழில்நுட்பம் என அனைத்தும் கலந்த கலவையாக வந்துள்ளது ரோபோட்.
ரஜினி படம் பார்க்கும்போது நீங்கள் விரும்புவதெல்லாம் அதில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதில் உள்ள வேடிக்கையை, ரசனையை அனுபவிக்கலாம். அந்த அனுபவத்திற்காக ரஜினி படத்தைப் பார்க்கலாம். அந்த வகையில் இந்தப் படத்தில் அந்த அனுபவம் சற்று கூடுதலாகவே உள்ளது என்று பாராட்டியுள்ளார் அமிதாப் பச்சன்.

05 அக்டோபர் 2010

காதலிக்கிறேனா…?’ – தமன்னா விளக்கம்.

நான் யாரையும் காதலிக்கவில்லை. நடிப்புதான் எனக்கு முக்கியம். தேவையில்லாத வதந்திகளைப் பரப்ப வேண்டாம், என்றார் தமன்னா.
தமன்னாவுக்கும் நடிகர் ஒருவருக்கும் தீவிர காதல் என்று தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
ஆனால் இதனை தமன்னா தொடர்ந்து மறுத்து வருகிறார்.
தான் நட்பு ரீதியாகக் கூடப் பழகாத ஒருவருடன் காதல் என்றெல்லாம் வதந்தி பரப்பு தவறானது. அந்த மாதிரி எதிர்மறை விளம்பரம் எனக்குத் தேவையுமில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
“பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டேன். ஷங்கர், கவுதம், பாலா போன்ற திறமையான இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை. என்னை நம்புகிறேன். எனது வேலையை சிறப்பாக செய்கிறேன். நிறைய நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றார்.

04 அக்டோபர் 2010

துருக்கியில் துள்ளாட்டம் போட்ட ஸ்ருதி!

ஓயாத பயணத்தில் இருக்கும் எனக்கு இப்போ தேவை ஒரு professional packer…” – இதுதான் ஸ்ருதி ஹாஸனின் லேட்டஸ்ட் ட்வீட்!
எதற்காகவோ..?
அம்மணி சென்னை, மும்பை, துருக்கி, லண்டன், அடுத்து பாங்காக் என பறந்து கொண்டே இருக்கிறாராம். தனக்கு தேவையான பொருள்களை அடுக்கி பக்காவாக எடுத்துச் செல்லக் கூட நேரமில்லை என்பதால்தான், அதற்கு உதவ ஒரு தொழில்முறை பணியாளர் இருந்தால் தேவலை என்று ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் – தெலுங்கில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ஒன்றுக்காக சமீபத்தில் துருக்கி போன ஸ்ருதியை, அந்த நாட்டின் பல லொக்கேஷன்களில் வைத்து துள்ளாட்டம் போட வைத்து படமாக்கியுள்ளனர்.
“கிட்டத்தட்ட 24 மணி நேரமும் ஷூட்டிங் இருந்தது. நான் கொஞ்சம் கறுத்துப் போனேன் என்று கூடச் சொல்லலாம். ஆனால் சந்தோஷமாகத்தான் இருந்தது” என்கிறார் ஸ்ருதி.
அடுத்து 7-ம் அறிவுக்காக சூர்யாவுடன் ஆட்டம் போட பாங்காக், அங்கிருந்து சில தீவுகளுக்குப் பயணமாகிறாராம்!

29 செப்டம்பர் 2010

டைட்டானிக் திரைப்பட நடிகை 100 வயதில் மரணம்!

1930ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டின் அழகு நடிகையும், டைட்டானிக் திரைப்படத்தில் முக்கியத் துணை நடிகை பாத்திரமேற்று நடித்தவருமான க்ளோரியா ஸ்டூவர்ட் காலமானார். அவருக்கு வயது 100 என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் திரைப்படத்தில், அந்தக் கப்பல் நீரில் மூழ்கியபோது உயிர்பிழைத்த 101வயது மூதாட்டியின் இளவயது நாயகி கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட்டுடன் இணைந்து ரோஸ் கால்வெர்ட் என்ற கதாபாத்திரத்தில் க்ளோரியா ஸ்டூவர்ட் நடித்தார்.
கேட் வின்ஸ்லெட் பெயர் சிறந்த நாயகிக்கான ஆஸ்கார் விருதுக்கும் சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு ஸ்டூவர்டும் பரிந்துரை செய்யப்பட்டனர்.
ஆனால் ஆஸ்கார் அம்முறை எல்.ஏ.கான்ஃபிடென்ஷியல் படத்தில் நடித்த கிம் பேசிஞ்சர் என்பவருக்குச் சென்றது.
இவரது மறைவு குறித்து கூறிய டைட்டானிக் அழகு நாயகி கேட் வின்ஸ்லெட் "இவரது மறைவு என்னை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் இணைந்து நடித்ததில் நான் பெருமை அடைகிறேன்." என்றார்.
டைட்டானிக் இளம் நாயகனாக நடித்த லியானாரோடோ டி கேப்ரியோ, ஸ்டூவர்ட் படப்பிடிப்பின் உள்ளேயும் வெளியேயும் ஒரு சக்தியாக விளங்கினார் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் ஹாலிவுட் பொற்காலங்களின் மிகச்சிறந்த நடிகை என்றும் டி கேப்ரியோ புகழ்ந்துள்ளார்.
டைட்டானிக் திரைப்படம் உலக அளவில் சாதனையான 1.8பில்லியன் டாலர்கள் வசூல் படைத்தது. சமீபமாக கேமரூனின் "அவதார்" திரைப்படம் இந்த சாதனையை முறியடித்தது என்பது கூடுதல் தகவல்.

28 செப்டம்பர் 2010

சந்திரபோஸ் உயிருடன் இருக்கிறார் : மகன் வினோத்.!

பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமாகிவிட்டதாக செய்திகள் பரவியது. கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை இயற்கை எய்தி விட்டதாக செய்திகள் பரவின.
ஆனால் அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று அவரது மகன் வினோத் தெரிவித்தார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார் அவர்.
கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனை நிர்வாகத்தால் வீட்டுக்கு அனுப்பப்பட்டாராம் அவர். இந்த நிலையில் அவரை வீட்டுக்கு சென்று சந்தித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், மற்றும் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் இருவரும் கடைசி வரை முயற்சி செய்யலாமே. மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தியதுடன் அதற்கான செலவையும் ஏற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை. மரணத்தின் இறுதி வாசலில் நின்ற சந்திரபோஸ் பிழைத்துக் கொண்டார்.
கலைவாணிக்கும் கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கும் சந்திரபோசின் இசை ரசிகர்கள் சார்பில் ஆரோக்கியமான நன்றி!

27 செப்டம்பர் 2010

முடிந்தது மன்மதன் அம்பு.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘மன்மதன் அம்பு'. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷா. மாதவன், சங்கீதா இன்னொரு ஜோடி. 'ரொம்ப நாளைக்கு பின் கமல் ரொமான்டிக் ஹீரோவா நடிக்கிற படம். 30 வயது இளைஞனா வர்றார். இதனையடுத்து மன்மதன் அம்பு படப்பிடிப்பு முடிந்ததாக மாதவன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என மாதவன் கூறிப்பிட்டுள்ளார்.

24 செப்டம்பர் 2010

வில்லியாக நடிக்க விரும்புகிறேன்-பியா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோவாÕவில் நடித்தார் பியா. அடுத்து ஜீவாவுடன் ‘கோ படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘கோவில் நடித்திருக்கிறேன். இப்பட ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது. இதில் என்ன வேடம் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன். இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஹீரோயின் வேடத்தில்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. எந்த வேடமாக இருந்தாலும் நடிப்பேன். வில்லி வேடத்தில் நடித்தால் திறமையை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். அப்படியொரு கதாபாத்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் நடிக்க முடிவான பின், போட¢டோக்களை பார்த்தாலே ‘யார் இது பியாவா?Õ என்று பலர் ஆச்சர்யப்படுவார்கள். இவ்வாறு பியா கூறினார்.

22 செப்டம்பர் 2010

பிரபுதேவா - நயன் மீது காவல்துறை நடவடிக்கை?

பிரபு தேவா - நயன்தாரா இருவர் மீதும் தமிழக காவல்துறை தானாகவே வழக்கு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அச்சாரத்தை நேற்று போட்டிருக்கிறார் பிரபுதேவாவின் மனைவி ரமலத்.
அண்ணாநகர் மேற்கில் 12 ஆவது பிரதான சாலையில் உள்ளது ரமலத்தின் இல்லம். இந்த இல்லம் முன்பாக அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்றிரவு தகவல் பரவியது.இதனால் அப்பகுதிக்கு ஊடக நண்பர்கள் குவிந்தனர்.
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த திருமங்கலம் காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்தனர். ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின், ரமலத் உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை என்பதும், அது ஒரு வதந்தி என்பதும், ரமலத் அந்த வீட்டில் இல்லை, வெளியில் சென்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்ததும் காவல் துறையினரும், ஊடக நண்பர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பிரபுதேவா ரமலத் விவகாரம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில்
'முதல் மனைவியான ரமலத்தை முறைப்படி விவாகரத்து செய்யாமல், பிரபு தேவா மற்றொரு பெண்ணுடன் சுற்றுவதும், அவரை திருமணம் செய்யப் போவதாக வெளிப்படையாக பேட்டி அளிப்பதும் குற்றமாகும். ரமலத் புகார் அளிக்கும் பட்சத்தில், அதை அடிப்படையாக வைத்து பிரபுதேவா - நயன்தாரா மீது நடவடிக்கை பாயும்!' என்கின்றன.

20 செப்டம்பர் 2010

வயகரா மாத்திரைகளை இனி டெஸ்கோ விற்பனைசெய்யும்!

உடலுறவு கொள்ளும் போது அதிக வீரியத்தை ஏற்படுத்த அல்லது உடலுறவு கொள்ள முடியாத ஆண்கள் பாவிக்கும் ஒரு வீரியம் மிக்க மாத்திரை வயகரா. பல ஆண்டுகளாக இணையமூடாக மிகவும் இரகசியமான முறையில் இது விற்கப்பட்டுவந்தது. வயகரா மாத்திரைகளை எம்மில் பலர் போதைப் பொருள் என எண்ணியிருந்தனர். இருப்பினும் சில நாடுகளில் இது விற்பது தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக பல நாடுகள் அத்தடையை நீக்கியுள்ளன. உலகில் பல்லாயிரக்கணக்கான மாத்திரைகள் இதுபோல உலாவந்தாலும் வயகரா மாத்திரைகள் ஆண்களின் உள்ளம் கவர்ந்த ஒன்றாகத் திகழ்கிறது என்பதற்கு தற்போது டெஸ்கோ சூப்பர் மார்க்கட்டே சாட்சி.
ஆம் இம் மாதம் 27ம் திகதி முதல் பிரித்தானியாவில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட சுமார் 300 டெஸ்கோ சூப்பர் மார்க்கட்டில் இனி வயகரா மாத்திரைகளை வாங்கலாம். சுமார் 8 மாத்திரைகளை 52.00 பவுன்டுகளுக்கு விற்க முடிவாகியுள்ளது. நீல நிறத்தினால் ஆன இம் மாத்திரைகள் உலகளாவிய ரீதியில் பல மில்லியன் ஆண்களால் பாவிக்கப்பட்டு, சுமார் 10 ஆண்களில் 9 ஆண்கள் திருப்தியடைந்துள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு 40 வயதை தாண்டிய ஆண்கள் தமது தாம்பத்திய வாழ்வில் இன்பதை இழந்து, அல்லது நாட்டம் இல்லாமல் போவதால் அவர்கள் வயகராவை நாடுவதாக அக் குறிப்புகள் மேலும் தெரிவிக்கின்றன.
இளைஞர்களும், வயதானவர்களும் வயகராவை பாவிக்க முண்டியடிப்பதும், அவர்கள் இணையமூடாக கட்டணம் செலுத்தி அதனைப் பெற முயற்சிப்பதும் வழக்கம். இருப்பினும் பல போலியான வயகரா மாத்திரைகள் உலவுவதால், அவர்கள் ஏமாற்றம் அடைவதாகவும், டெஸ்கோ சூப்பர் ஸ்ரோர், தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் தரமான வயகரா மாத்திரைகளை விற்க இருப்பதாகவும் அதன் மேலாளர் பத்திரிகைக்கு தெரிவித்தார். ஏற்கனவே எல்லா சூப்பர் ஸ்ரோரையும் வீயாபாரத்தில் மிஞ்சி கொடிகட்டிப் பறக்கும் டெஸ்கோ காட்டில் இனி மழைதான்... இளைஞர்களும் , வயோதிபர்களும் இனி வயகரா வாங்க அங்குதான் செல்ல இருக்கிறார்கள், போதாக்குறைக்கு மருத்துவர் ஆலோசனை பற்றுச்சீட்டு இல்லாமலே அதனை வாங்கமுடியும் என டெஸ்கோ அறிவித்துள்ளது.

17 செப்டம்பர் 2010

கமல் மகள் ஸ்ருதி பார்வைக்கோளாறால் பரிதவிக்கிறாரா?

நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி, தனக்கு பார்வைக்கோளாறு இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது உண்மையா? இல்லை ஸ்ருதிஹாசன் பெயரில் வேறு யாரும் இப்படி செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.
நடிப்பு, இசை, நடனம் என பல்துறைகளில் சிறந்த விளங்கிவருகிறார் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது தமிழில் ‘7ம் அறிவு’ மற்றும் இந்தியில் ‘தில் டோ பச்சா ஹை ஜி’ படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி, தனது டுவிட்டர் பக்கத்தில், ’என்னை பொருத்தவரை 90 சதவீதம் பார்வையற்ற பெண்ணாகவே வாழ்கிறேன். கண்ணாடி அணியாமல் 2 சென்டி மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருளைக்கூட பார்க்க முடியாது.
யாருக்கும் நான் வாழ்த்து சொல்வது கிடையாது. அப்படி சொல்லும் நபர் வேறு ஆளாக இருக்கும்பட்சத்தில் அவரிடம் மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டி உள்ளது. நேற்றுகூட தவறான நபருக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன்.
மேலும் கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல் நடந்து சென்றேன். இது எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. எது எப்படியோ மூக்கு கண்ணாடியும், கான்டக்ட் லென்சும் பல்லாண்டு வாழ்க’’என்று எழுதியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சமீபகாலமாக த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டு அவர்களைப் பற்றியே இழிவாக எழுதுவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஸ்ருதிஹாசன் அப்படி நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.

16 செப்டம்பர் 2010

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்ரவதை!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் சொந்த மகளை இரும்புக்கம்பியால் சூடுவைத்து சித்ரவதை செய்த பள்ளிக்கூட ஆசிரியை கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாச்சலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் இவருடைய கணவர் இறந்து விட்டார்.
இதனால் தனது 6 வயது மகளுடன் சைதன்யா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த நாகேஷ் என்பவருடன் சைதன்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சில நேரங்களில் இவர்களின் கள்ளக்காதலுக்கு சைதன்யாவின் மகள் தடையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக தனது மகளை இரும்புக்கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்து உள்ளார்.
சூடு தாங்காமல் வலியால் அவள் கத்தித்துடிக்கும் போது டி.வி.யின் சத்தத்தை அதிகமாக வைத்து உள்ளார். அந்த வீட்டில் அடிக்கடி டி.வி.யின் சத்தம் அதிகமாக கேட்டதால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, வீட்டில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அந்த சிறுமி இருந்தாள்.
உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு இதுபற்றி அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் சைதன்யாவின் கள்ளக்காதலுக்கு தடையாக மகள் இருப்பது தெரியவந்தது.
இதனால் சைதன்யா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் நாகேசை போலீசார் கைது செய்தனர். படுகாயம் அடைந்த சிறுமி குணம் அடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்றும். பின்னர் அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் சிறுமி தங்கி இருப்பாள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

14 செப்டம்பர் 2010

பேஷன் என்ற பெயரில் குஷ்பு கழுத்தில் பிளாஸ்டிக் தாலி!

பேஷன் என்ற பெயரில் ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து நடிகை குஷ்பு அணிந்திருக்கிறார். நடிகை குஷ்புவின் கணவரும், டைடக்டரும்  நடிகருமான சுந்தர் சி நடித்திருக்கும் புதிய படம் நகரம். குஷ்புவின் அவ்னி சி�னிமேக்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் �நடந்தது.
இந்த� விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஸ்டாலின், கனி�மொழி எம்.பி., அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தாலும்... அனைவரையும் கவர்ந்திழுத்தது நடிகை குஷ்புவும் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும்தான்.
ருத்திராட்ச மா�லையில் பிளாஸ்டிக் தாலியை �கோர்த்து அணிந்திருந்தார் குஷ்பு. பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரை முகம் சுழிக்க வைத்தது. இதற்கு முன்பு சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குஷ்பு.
இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில் சிக்கிய குஷ்பு சுப்ரீம்கோர்ட் வரை சென்றதும் நினைவிருக்கலாம்.

12 செப்டம்பர் 2010

ஸ்ருதி ஹாசன் செய்த அதிரடி மாற்றம்.


கமலுக்கும், ர‌ஜினிக்கும் நீண்ட காலமாக பிஆர்ஓ-வாக இருப்பவர் நிகில் முருகன். தமிழ் சினிமாவின் ஹைடெக் மக்கள் தொடர்பாளர், கண்ணியமான தொடர்பாளர் என்பதெல்லாம் இவரது அடையாளங்கள். இவர்தான் நடிகர் சூர்யாவுக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் பிஆர்ஓ. இந்நிலையில் நிகில் முருகனுக்குப் பதில் ஜான்சனை தனது பிஆர்ஓ-வாக அறிவித்தார் சூர்யா. நான் மகான் அல்ல படத்தைப் பற்றி எதிர்மறை பதிவுகள் நிகிலின் இணையதளத்தில் இருந்ததாகவும், அதனால் சிவகுமார் எடுத்த கடும் முடிவுதான் இந்த நீக்கம் எனவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நீக்கத்திற்கு இரண்டாவது நாளே ஸ்ருதியிடமிருந்து பரபரப்பான அறிவிப்பு வெளிவந்தது. சூர்யாவைப் போலவே அவரும் நிகிலை மாற்றிவிட்டு ஜான்சனை தனது புதிய பிஆர்ஓ ஆக்கியிருந்தார்.
சூர்யாவும், ஸ்ருதிஹாசனும் 7ஆம் அறிவு படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11 செப்டம்பர் 2010

மாதவனுடன் காதலா? சதா பதில்.

ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான சதா, தற்போது புலி வேஷம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எதிரி படத்தில் மாதவனுடன் சதா ஜோடியாக நடித்தார். இப்படம் 7 வருடங்களுக்கு முன் வெளியானது.
தற்போது இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் விருந்து நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்பதாகவும் செய்திகள் பரவியது. மாதவன் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி சதாவிடம் கேட்டபோது உடனே ஆவேசப்பட்ட அவர், பின்னர் அமைதியாகி பேச ஆரம்பித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மாதவனுடன் நீண்ட நாட்களாக எனக்கு தொடர்பு இல்லை. அவரை சந்தித்து பேசவும் இல்லை. அவரை காதலிப்பதாக வந்த செய்திகள் வதந்திதான். நான் படப் பிடிப்புக்கு செல்லும்போது கூடவே எனது தாய் வருவார். அவரை விட்டு தனியாக யாரிடமும் நான் பேசுவது கிடையாது. ஏன் தான் இப்படி வதந்திகளை பரப்புகிறார்களோ? என்றார்.
மாதவனும் நீங்களும் பெங்களூர் ஓட்டலில் சந்தித்து பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதே என்று செய்திகள் பரவுகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மீண்டும் ஆவேசப்பட்டார்.

10 செப்டம்பர் 2010

ரஜினியின் அழைப்பிதழ்…திருப்பி அனுப்பிய பாரதிராஜா.

மழை நின்ற பிறகும் குடை மடங்காது போலிருக்கிறது. சவுந்தர்யா திருமணம் முடிந்த பின்பும் ரஜினி யாருக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை? ரசிகர்களை அழைக்காதது சரியா?. இப்போதாவது அழைத்து விருந்து கொடுப்பாரா? என்றெல்லாம் பரபரப்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சற்று லேட்டஸ்ட்டாக கிடைத்த ஒரு தகவல் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 16 வயதினிலே படத்தின் மூலம் ரஜினிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த பாரதிராஜாவுக்கே கொரியரில்தான் அழைப்பிதழ் போனதாம். அதிர்ச்சியடைந்த அவர், அதை மீண்டும் ரஜினி முகவரிக்கே திருப்பி அனுப்பிவிட்டாராம். சமீபகாலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி பேட்டிகளில் பேசி வந்த பாரதிராஜா ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் திரையுலகில் இதையெல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.
அப்படி எடுத்துக் கொள்ளாத ரஜினி நேரில் பாரதிராஜா வீட்டுக்கு போக சங்கடப்பட்டுதான் இப்படி கொரியரில் அனுப்பினாராம். அது போகட்டும்… நிகழ்ச்சிக்கு இளையராஜா ஏன் போகவில்லை? அவருக்கும் தபாலில்தான் போனதாம் அழைப்பிதழ்!

08 செப்டம்பர் 2010

நித்தியானந்தாவின் லீலை திரைப்படமாக!

நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமாப் படம் எடுக்கவுள்ளனராம். நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள்.
அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில். நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா.
ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார். தற்போது இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நடந்தது குற்றமா இல்லையா, சரியா, தவறா என்றும் யாருக்கும் புரியவில்லை. நித்தியானந்தாவும் வழக்கம் போல தனது பெங்களூர் மடத்தில் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில், நித்தியானந்தா கதையை படமாக்கவுள்ளனர் தெலுங்கில். நித்தியானந்தா வேடத்தில் ராஜேந்திர பிரசாத் நடிக்கப் போகிறாராம். இவர் தெலுங்கில் பிரபலமான காமெடி ஹீரோ ஆவார். சிவாஜி, சாய்குமார் ஆகியோரும் உள்ளனர். ஹைதராபாத்தில் சமீபத்தில் படத்திற்கு பூஜை போட்டனர். அப்போது நித்தியானந்தா கெட்டப்பில் வந்தாராம் ராஜேந்திர பிரசாத்.
கதை என்னவோ நித்தியானந்தா கதைதான் என்றாலும் அதை இப்போதைக்கு ரகசியமாகவே வைத்துள்ளனராம். கேஸ் ஏதாவது வந்தால் சிக்கலாகி விடுமே என்பதற்காக இந்த அடக்கி வாசிப்பாம். ரஞ்சிதா கேரக்டருக்குரிய நடிகையை வலைவீசி தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.

07 செப்டம்பர் 2010

இத்தாலியில் இலங்கையர் மூவர் கைது! குடியால் வந்த கதி.

மதுபானம் அருந்த மறுத்த இலங்கையர் ஒருவரை நேற்று மாலை அடித்துக் காயப்படுத்தியமையுடன் ,அறை ஒன்றிலும் பூட்டி வைத்தனர் என்பதற்காக அவரின் சகாக்களான இலங்கையர் மூவர் இத்தாலியின் San Pantaleon நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் நால்வரும் தொடர்மாடி ஒன்றில் உள்ள அறை ஒன்றில் ஒன்றாக இருந்து வந்துள்ளனர். இவர்களில் குடிகாரர்கள் மூவரும் சம்பவதினம் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தனர். நான்காவது நபர் இவர்களுடன் குடிக்க மறுத்து விட்டார்.
இதனால் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. குடிக்க மறுத்தவரை ஏனைய மூவரும் நையப் புடைத்தனர். அவரின் நெஞ்சுப் பகுதியில் படுகாயம் ஒன்றும் ஏற்பட்டு விட்டது. பின் அவரை தப்பி ஓட முடியாத வண்ணம் அறை ஒன்றில் பூட்டி வைத்தனர். அவரின் நெஞ்சுப் பகுதியில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்தது. இந்நிலையில் அவர் அறையில் இருந்த தொலைபேசி மூலம் வீட்டின் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு நிலைமையைக் கூறினார். வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்தார். இதையடுத்தே கைதுகள் இடம்பெற்றன. நான்கு இலங்கையர் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவர்.

06 செப்டம்பர் 2010

கவுரவ கொலை மிரட்டல்: காதல் ஜோடி புகார்.



காதல் திருமணம் செய்துக் கொண்டதால், பெற்றோர்களிடம் இருந்து கவுரவ கொலை மிரட்டல் வருவதாக செந்தூரி என்ற பெண், பென்னாகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பென்னாகரத்தைச் சேர்ந்த முரளி என்பவர், செந்தூரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு எதிர்ப்பு வந்துள்ளது. தற்போது தொடர்ந்து மிரட்டல் வருவதாக, பென்னாகரம் காவல் நிலையத்தில் செந்தூரி புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செந்தூரி கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். தொடர்ந்து மிரட்டல் வந்ததால் பென்னாகரம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தோம். அப்போது இரு வீட்டாரிடம் இருந்து பெற்றோர்களை அழைத்து பேசினார்கள். அதில் எனது பெற்றோர்கள் சமாதானம் அடையவில்லை.
எனது பொறியியல் படிப்பையும் தொடர முடியாமல் போய்விடும் என பயமாக இருக்கிறது. எனது வீட்டில் இருந்துதான் எனக்கு மிரட்டல் வருகிறது. தற்போது எனது கணவர் வீட்டில் இருக்கிறேன். தொடர் மிரட்டல் வந்ததால் எனது கணவர் முரளியுடன் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
செந்தூரியின் புகார் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

03 செப்டம்பர் 2010

வளைந்து கொடுக்காத நயன்.



விளம்பரத்தில் நடிப்பதில்லை என்பது நயன்தாராவின் முடிவு. படங்களில் நடிக்காத இந்த‌ச் சூழலிலும் அவர் தனது கொள்கையை விடுவதாக இல்லை.
அமிதாப் முதல் அமீர்கான் வரை விளம்பரத்தில் தான் வூடுகட்டி அடிக்கிறார்கள். அவர்களின் வருமான வ‌ரிக்கணக்கு எகிறுவதும் இதனால்தான்.
ஆனால், நான் வாங்காத ஒரு பொருளை பிறர் வாங்கும்படி நிர்ப்பந்திக்க மாட்டேன் என்று விளம்பரத்தில் நடிக்க கறாராக மறுப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி கறாராக மறுத்த அ‌‌ஜீத்தும்கூட ஒரு காபி விளம்பரத்தில் தலையை காட்டினார்.
இந்த விஷயத்தில் நயன்தாரா இன்னும் கெட்டி. தி.நகர். ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க ஆனானப்பட்ட அனுஷ்காவையே வளைத்துப் போட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்களிடம் அகப்படாத ஒருவர் உண்டென்றால் அது நயன்தாரா மட்டும்தானாம்.
தீபாவளி நெருங்கும் போது நயன்தாராவும் ஜவுளிக்கடைக்குள் மாட்டிக் கொணடால்...
ஆச்ச‌ரியப்படாதீர்கள்.

02 செப்டம்பர் 2010

இறந்த குழந்தை தாயின் அரவணைப்பில் உயிர்த்தது!



பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிததும் குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.
குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.
தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.
ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

01 செப்டம்பர் 2010

இயக்குனர் செல்வாவின் "நாங்க".



1985-ம் ஆண்டின் காலக் கட்ட பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "நாங்க'. இயக்குநர் செல்வாவின் 25-வது படமாக இப்படம் உருவாகிறது. சினிமாவின் பல்வேறு துறைகளில் இருப்பவர்களின் வாரிசுகள் 9 பேர் இப்படத்தில் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். ÷இப்படத்தைப் பற்றி இயக்குநர் செல்வாவிடம் கேட்ட போது, ""கல்லூரியின் காதல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறேன். ஐந்து விதமான காதல் கதைகள் சொல்லப்பட்டு, பின்னர் அவை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
÷ 1985-ம் ஆண்டு காலக் கட்டத்தில் கதை பயணிக்கிறது. என் முதல் படம் "தலைவாசல்' கதையும் கல்லூரி வாழ்க்கைதான். அது போல் இப்படமும் கல்லூரியின் புதிய பரிணாமத்தைச் சொல்லும். காதல், உற்சாகம் இவற்றை மட்டும் சொல்லாமல் ஏமாற்றம், வலி, ஏக்கம், நெகிழ்ச்சி ஆகியவற்றை சொல்லும் ஒரு கல்லூரிக் கதையாக இது இருக்கும்.
÷ஒரு மனிதனின் உச்சபட்ச மகிழ்ச்சியான கல்லூரி காலத்தை சினிமாவின் புதிய மொழியில் படம் பிடித்து வருகிறேன். தென்காசி, திருநெல்வேலி, குற்றாலம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் படமாகியுள்ளது. 1985-ம் ஆண்டு காலக் கட்ட கதை என்பதால் ராஜன், ஷிவா யாதவ் என்ற இரு கலை இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். "தலைவாசல்', "அமராவதி' படங்களுக்குப் பின் பாலபாரதி இப்படத்துக்கு இசையமைக்கிறார். மறக்க முடியாத ஜீவனுள்ள நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இந்தப் படம் இருக்கும்'' என்றார்.

31 ஆகஸ்ட் 2010

வெளிநாட்டவருக்கு தத்துக் கொடுக்கப்பட்டு 31 ஆண்டுகளின் பின் உண்மையான தாயும்-சேயும் சந்திப்பு!



சுவீடன் தம்பதிகளுக்கு 31 வருடங்களுக்கு முன் தத்துக் கொடுக்கப்பட்ட சிங்களப் பெண் ஒருவர் அவருடைய உண்மையான தாய், சகோதரர்கள் ஆகியோருடன் இன்று இலங்கையில் மீள இணைந்து கொண்டார்.
1970 களில் சுவர்ணா ஜயசிங்க என்பவருக்கு மூத்த மகளாக பிறந்த இவர் வீட்டின் வறுமை நிலை காரணமாக உடனடியாகவே தத்துக் கொடுக்கப்பட்டார்.
தத்தெடுத்த சுவீடன் தம்பதியர் இவருக்கு Suzanne Maria Chandima என்று பெயர் சூட்டினர். இந்நிலையில் Bio Parents Locate என்கிற அமைப்பின் மூலம் Suzanne Maria Chandima உண்மையான தாயையும், சகோதரர்களையும் கண்டுபிடித்தார்.
இவர் இம்மகிழ்ச்சியை ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டபோது தெரிவித்தவை வருமாறு:-
”நான் மிக நீண்ட கால முயற்சிக்குப் பின் எனது உண்மையான தாயையும், சகோதரர்களையும் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து விட்டேன்.இது எனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய தருணம் ஆகும்.
நான் முதல் தடவையாக இலங்கைக்கு இப்போதுதான் வந்துள்ளேன். இனி மேல் அம்மாவையும், சகோதரர்களையும் காண அடிக்கடி வருவேன்.”
தத்துக் கொடுத்த தாயான சுவர்ணா ஜயசிங்க தெரிவித்தவை வருமாறு:-
”நான் எனது மூத்த மகளை ஒருபோதும் எவருக்கும் விட்டுக் கொடுக்க விரும்பியதே இல்லை.கடந்த 31 வருடங்களாக பெரும்துன்பத்தை மனதில் சுமந்து வந்திருக்கின்றேன்.இன்றுதான் என்னால் நிம்மதியாக மூச்சு விட முடிகின்றது.
எனது மூத்த மகள் எனக்கு மீண்டும் கிடைத்து விட்டார். தாய்-சேய் உறவை எவராலும் பிரிக்கவே முடியாது.” Bio Parents Locate அமைப்பின் தலைவர் பேராசிரியர் வைத்திய கலாநிதி ரொஹான் ரட்ணாயக்க கருத்துக் கூறுகையில் கடந்த 25 வருடங்களில் 35 ஆயிரம் இலங்கைச் சிறுவர்கள் வெளிநாட்டவர்களுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர் என்றார்.

30 ஆகஸ்ட் 2010

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது.



சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து நியூயார்க் போஸ்ட் பத்திரிகைய வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் கிப்ஸன் என்பவர் தன்னுடைய அலுவலக கம்ப்யூட்டரில் ஏராளமான நிர்வாணப்படங்களை லோடு செய்து வைத்திருந்தார். ஓரு முறை அவர் 14 வயது சிறுமியின் நிர்வாணப்படத்தினை பார்த்துக்கொண்டிருந்ததாக கம்ப்யூட்டர் தடவியல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அமெரிக்க சட்டவிதிகளின் படி 17 வயதிற்குட்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமாகும். இந்நிலையில் நீதிபதியின் இந்த செயலை கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

28 ஆகஸ்ட் 2010

பின்புறத்தை இன்சூர் செய்யும் நடிகை.



இந்தி நடிகை மினிஷா லம்பா, தனது பின்புறத்தை இன்சூர் செய்யவுள்ளாராம்.
அழகான வாழைத் தொடை, அழகிய கால்கள், அம்சமான முகம் ஆகியவற்றை இன்சூர் செய்வது நடிகைகளுக்கு வழக்கமாகி விட்டது. ஹாலிவுட்டில் அழகான, எடுப்பான முன்னழகைக் கூட இன்சூர் செய்கிறார்கள்.
இந்த வரிசையில் படு வித்தியாசமாக, தனது பின்புறத்தை இன்சூர் செய்யவுள்ளார் இந்தி நடிகை மினிஷா லம்பா. இவர் மினி டிரஸ்களில் கவர்ச்சிகரமாக வருவதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பவர். காஷ்மீரில் பிறந்த அழகு ரோஜா.
சமீபத்தில் நடிகர் ஜான் ஆப்ரகாம் கூட தனது பின்புறத்தை இன்சூர் செய்தார். அவர் வழியில் இப்போது மினிஷாவும் பின்புறத்தை இன்சூர் செய்யப் போகிறாராம்.
தனது பின்புறம் மிக அழகாக, எடுப்பாக, செக்ஸியாக இருப்பதாக பெருமையுடன் கூறுபவர் மினிஷா. பிரேசில் பெண்களுக்குத்தான் இப்படி எடுப்பாக பின்புறம் இருக்கும்.
எனது பின்புறம் எனக்குப் பொக்கிஷம் போல. அதைக் காக்க நான் விரும்புகிறேன். எனவேதான் இன்சூரன்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார் பெருமிதத்துடன்.

25 ஆகஸ்ட் 2010

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரபல நடிகைகள் கைது !!!(வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)



இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாக நடிகை சாய்ரா பானு உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதை மருந்து கடத்தல் , விபச்சாரம், உயர் அதிகாரிகளுக்கு பெண்களை சப்ளை செய்த விவகாரம் என தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து புயல் வீச ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பாதுகாப்பு நிறைந்த பல அடுக்கு குடியிருப்புகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் நடிகைகள் சாய்ரா பானு, ஜோதி மற்றும் வெளிநாட்டு இளம்பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சாய்ரா பானு, பல தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
மற்றொரு நடிகை ஜோதி, ஏராளமான தெலுங்கு படங்களில் துணை வேடங்களில் நடத்துள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு தெலுங்கு நடிகை சீமா இதே விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. போதை பொருள் வாங்கியதாக, நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

24 ஆகஸ்ட் 2010

ரஞ்சிதாவில் பாசம் கொண்ட சிரிப்பு நடிகர்.



நித்யானந்தா சாமியார் ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்துவிட்டு ரஞ்சிதாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட கதையை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது. இதனை சம்பந்தப்பட்ட இருவரும் மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.
சில பிழைப்புவாதிகள் நித்தியை மீண்டும் சாமியாராக்கியிருக்கிறார்கள். சாமியார்களை நம்பியிருக்கும் சிலரும் அவரை தெய்வீக‌த் தூதராக கொண்டாடும் வேலையை முடுக்கி விட்டுள்ளனர்.
சி‌ரிப்பு நடிகர் எஸ்.வி.சேகருக்கு வந்த தொண்டை வலியை திருநீறு பூசி ச‌ரி செய்தாராம் நித்தி. இதற்கு கைமாறா தெ‌ரியவில்லை, நித்யானந்தாவுடன் இருப்பது ரஞ்சிதாவே இல்லை, ஒரே நபரைப் போல் ஏழு பேர் இருப்பார்கள் என்றெல்லாம் உடுக்கடித்திருக்கிறார். ஆள் யாராக இருந்தாலும் உடன் இருந்தது நித்திதானே? இதற்கு சி‌ரிப்பு நடிக‌ரிடம் பதிலில்லை.
சங்கராச்சா‌ரியா‌ரை கைது செய்தவர்கள் கை விளங்காமல் இருப்பதாகவும், கிட்னி பழுதடைந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார். அவரை கைது செய்ய உத்தரவிட்டவர்கள் இன்றும் சேமமாக இருக்கிறார்கள். சங்கராச்சா‌ரியா‌ரின் பவர் அவர்களிடம் செல்லுபடியாகாதா என்பதைப் பற்றியும் சி‌ரிப்பு நடிகர் பதிலளிக்கவில்லை.
இவர் சின்னத்திரையில் பொறுப்பில் இருந்தபோது ஒரு நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒழுக்கத்தை காரணம் காட்டி அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவிடாமல் செய்தவர் இவர். அன்று ஒழுக்கத்தை காரணம் காட்டியவர் இன்று ரஞ்சிதாவுக்கு அடைக்கலம் கொடுப்பது,
காலத்தின் கோலமா? கடவுளின் லீலையா?

21 ஆகஸ்ட் 2010

கிசு கிசுவால் கலங்கிய தமன்னா.


புசுபுசுன்னு வளர்ற மார்க்கெட்டை கிசுகிசு எழுதியே காலி பண்ற விஷயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது அண்மைக் காலங்களில் நயன்தாராவும், தமன்னாவும்தான் போலிருக்கிறது. எந்த ஹீரோவை எடுத்துக் கொண்டாலும் தமன்னாவை கேளுங்க. இல்லேன்னா பிறகு யாரையாவது பார்க்கலாம் என்றுதான் கூறி வந்தார்கள்.
எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஒரு ரவுண்டு நடித்து முடித்துவிட்ட தமன்னா, தற்போது தன்னை சுற்றி முளைத்திருக்கும் வேலியை கண்டு அதிர்ந்தே போயிருக்கிறார். ஒரு கோடி சம்பளம், கார்த்தியுடன் காதல் என்று பலரும் எழுதியதால்தான் இந்த நிலைமை என்று நினைத்தாரோ என்னவோ, இரண்டையும் குறைத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவரது அட்ஜஸ்ட்மென்ட் மிகப் பெரிய கதவை திறந்துவிட்டிருப்பதுதான் ஆச்சர்யம். சுறாவை அடுத்து தமன்னாவுடன் மீண்டும் ஜோடி சேரப் போகிறார் விஜய். இந்த வாய்ப்பை பெறுவதற்குள் தமன்னாவின் கெண்டை சதை இளைத்துப் போனது தனிக் கதை.
சம்பளத்தை குறைத்தாராம். கேட்கிற நாட்கள் எத்தனையோ, அத்தனைக்கும் தயார் என்றாராம். பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு பின் `த்ரி இடியட்ஸ்` படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறார். டைரக்டர் ஷங்கரும் பல மேடைகளில் தமன்னா குறித்து சிலாகித்தது இந்த இடத்தில் ரொம்பவே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

18 ஆகஸ்ட் 2010

பிரகாஷ்ராஜ் திருமணம் மும்பையில்.


பிரகாஷ் ராஜ்& போனி வர்மா திருமணம் வரும் 24ம் தேதி மும்பையில் நடக்கிறது. ஏராளமான பாலிவுட் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணிபுரிந்தவர், போனிவர்மா. இவரும் பிரகாஷ் ராஜும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் வரும் 24ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. நெருக்கமானவர்கள் மட்டும் இதில் பங்கேற்கின்றனர். பிறகு தமிழ், கன்னடம், தெலுங்கு படவுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தினகரன் நிருபரிடம் கூறுகையில், ‘24ம் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது. பிறகு நானும், போனிவர்மாவும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் நண்பர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே விருந்து நிகழ்ச்சி நடத்த உள்ளோம். போனிவர்மா எங்கள் வீட்டு மருமகள். எங்கள் திருமணத்தை ரகசியமாக நடத்தவில்லை. அனைவரது ஆசீர்வாதத்துடனும், ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் நடத்த உள்ளோம்’ என்றார்.

15 ஆகஸ்ட் 2010

விருந்தாளி-திரை விமர்சனம்.



காதலியை நினைத்து அவள் நினைவுகளோடு வாழும் ஒரு இளைஞனின் கதை.
கோபத்தில் கொலை செய்து விட்டு சிறையில் கம்பி எண்ணுபவர் நாசர். அவரது மகன் ஈஸ்வர். இவர் தனது கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர். பணம் வசூலிக்கும்போது சிலரிடம் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும், ஏழைகளிடம் இரக்க குணம் காட்டுபவர்.
ஒரு ஆட்டோக்காரன் பல நாள் டிமிக்கு கொடுத்து அவரை ஏமாற்ற, இவரோ வழியில் ஆட்டோவை மடக்கி பணத்தை கொடுத்தப் பிறகுதான் சாவி என்று முரண்டு பிடிக்க, அதில் பயணியாக வந்த கதாநாயகி தியானா, அவருடன் மோதுகிறார். கோபத்தில் அவளை எடுத்தெறிந்து பேசும் ஈஸ்வர், அவர் தனது ஊர் போஸ்ட்மேனின் மகள் என்றதும், அவள் மீது மரியாதை ஏற்பட்டு, பின்பு அவளை காதலிக்கவும் செய்கிறார்.
ஈஸ்வர் தன் காதலை வெளிப்படுத்த மேற்கொள்ளும் பைத்தியகாரத்தனச் செயல்கள் தியானாவுக்கு பிடித்துப்போகிறது. தன் மீது உயிரையே வைத்திருக்கும் ஈஸ்வரை காதலித்து, அவனுக்காக உயிரையே விடுகிறார் தியானா. அது எதற்கு? எப்படி? என்பது மீதிக் கதை.
புதுமுகமாக இருந்தாலும் ஈஸ்வர் தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூல் செய்யும்போது, அவர் செய்யும் சேட்டைகளும், காதல் வயப்பட்டு தனக்கு தானே கடிதம் எழுதிக் கொண்டு அலைவதும் ரசிக்கக் கூடியது. நல்ல உடல் கட்டமைப்புடன் களம் இறங்கியிருக்கும் இவர் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் களத்தில் நிற்கலாம்.
கதாநாயகி தியானா பட்டணத்துப் பெண்ணாக வந்து படபடத்து பேசுவது, காதல் வயப்படுவது, கொலையைப் பார்த்து, பதறி ஓடி வருவது என அசத்தியிருக்கிறார். சிங்கம் புலி சிரிக்க வைக்கிறேன் என்ற பேரில் பேசி பேசியே நம்மை நெளிய வைக்கிறார் படத்திற்கு வசனம் எழுதியிருப்பவர் இவர்தான். (ஏதாவது ஒன்றை சரியாக செய்யுங்க பாஸ்!). படத்தில் வரும் பாதி வசனங்களை தனக்காகவே எழுதியிருக்கிறார் போலும்! காதலுக்கு பச்சைக் கொடி காட்டுபவராக வரும் கதாபாத்திரத்தில் நாசர் நச்! போலீஸ்காரராக வரும் சேரன் ராஜ், சில நிஜ போலீஸ் அதிகாரிகளை ஞாபகப்படுத்தும் அளவிற்கு இயல்பான நடிப்பை வழங்கி அந்த பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
பாடலிலும், பின்னணி இசையிலும் "இவர் யார்?' என்று கேட்க வைக்கிறார் எஸ்.எஸ். குமரன். முருகன் மந்திரம் இயற்றியுள்ள நான்கு பாடல்களும் கவனிக்கத்தக்கது. நாகர்கோவிலின் செழிப்பையும், வனப்பையும் தனது கேமராவில் அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஜன்.
நண்பனின் காதலுக்கு உதவி செய்ய போய், தன் காதலியை தவற விட்ட ஒரு காதலனையும், அவன் அந்த காதலியையே நினைத்துக் கொண்டு வாழ்வதையும் அழகாகச் சொல்ல வந்த இயக்குநர் வாட்டர்மேன், திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.
வரவேற்கக் கூடிய விருந்தாளி!

09 ஆகஸ்ட் 2010

இந்தியில் கலக்கப்போகும் ப்ரியாமணி.



திரிஷாவை இந்திக்குக் கூட்டிக் கொண்டு போய் அறிமுகப்படுத்தி வைத்த பிரியதர்ஷன் அடுத்து பிரியா மணியையும் இந்திக்கு அழைத்துச் செல்கிறாராம். பிரியதர்ஷனால் நடிகையானவர் திரிஷா. தமிழில் திரிஷாவை அறிமுகப்படுத்தி வைத்த பிரியதர்ஷன், அவரது இந்தி அறிமுகத்திற்கும் வழிவகுத்தார். அக்ஷ்ய் குமார் தயாரிப்பில் உருவான கட்டா மீத்தா படத்தில் நாயகியாக நடித்து இந்தியிலும் புகுந்து விட்டார் திரிஷா. படம் சிறப்பாக ஓடவே குஷியாகியுள்ளார். இதையடுத்து அடுத்தடுத்து இந்தியில் கலக்க தீர்மானித்துள்ளார். இந்த நிலையில் பிரியா மணியும் இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம். அவரையும் பிரியதர்ஷன்தான் அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார். பிரியதர்ஷன் அடுத்து இயக்கும் புல்லட் டிரெய்ன் என்ற படத்தில் பிரியா மணி நடிக்கிறாராம். இதில் அஜய் தேவ்கனும், சுனில் ஷெட்டியும் நாயகர்களாக நடிக்கின்றனர். அதாவது இரட்டை ஹீரோ சப்ஜெக்ட். அதில் ஒரு நாயகிதான் பிரியா மணி. இன்னொரு நாயகியாக நடிக்கவிருப்பது சமீரா ரெட்டியாம். சமீப காலமாகவே கவர்ச்சியில் புது இலக்கணம் படைத்து வரும் பிரியா மணி, இந்தியில் இதைவிட சற்று கூடுதலான கவர்ச்சியுடன் கலக்கத் தயாராகி விட்டாராம். சமீரா வேறு இருப்பதால் அவரை மிஞ்சும் அளவுக்கு பிரியாவின் கவர்ச்சி சேவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.