காதல் திருமணம் செய்துக் கொண்டதால், பெற்றோர்களிடம் இருந்து கவுரவ கொலை மிரட்டல் வருவதாக செந்தூரி என்ற பெண், பென்னாகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பென்னாகரத்தைச் சேர்ந்த முரளி என்பவர், செந்தூரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு எதிர்ப்பு வந்துள்ளது. தற்போது தொடர்ந்து மிரட்டல் வருவதாக, பென்னாகரம் காவல் நிலையத்தில் செந்தூரி புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செந்தூரி கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். தொடர்ந்து மிரட்டல் வந்ததால் பென்னாகரம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தோம். அப்போது இரு வீட்டாரிடம் இருந்து பெற்றோர்களை அழைத்து பேசினார்கள். அதில் எனது பெற்றோர்கள் சமாதானம் அடையவில்லை.
எனது பொறியியல் படிப்பையும் தொடர முடியாமல் போய்விடும் என பயமாக இருக்கிறது. எனது வீட்டில் இருந்துதான் எனக்கு மிரட்டல் வருகிறது. தற்போது எனது கணவர் வீட்டில் இருக்கிறேன். தொடர் மிரட்டல் வந்ததால் எனது கணவர் முரளியுடன் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
செந்தூரியின் புகார் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக