பக்கங்கள்

22 செப்டம்பர் 2010

பிரபுதேவா - நயன் மீது காவல்துறை நடவடிக்கை?

பிரபு தேவா - நயன்தாரா இருவர் மீதும் தமிழக காவல்துறை தானாகவே வழக்கு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அச்சாரத்தை நேற்று போட்டிருக்கிறார் பிரபுதேவாவின் மனைவி ரமலத்.
அண்ணாநகர் மேற்கில் 12 ஆவது பிரதான சாலையில் உள்ளது ரமலத்தின் இல்லம். இந்த இல்லம் முன்பாக அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்றிரவு தகவல் பரவியது.இதனால் அப்பகுதிக்கு ஊடக நண்பர்கள் குவிந்தனர்.
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த திருமங்கலம் காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்தனர். ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின், ரமலத் உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை என்பதும், அது ஒரு வதந்தி என்பதும், ரமலத் அந்த வீட்டில் இல்லை, வெளியில் சென்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்ததும் காவல் துறையினரும், ஊடக நண்பர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பிரபுதேவா ரமலத் விவகாரம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில்
'முதல் மனைவியான ரமலத்தை முறைப்படி விவாகரத்து செய்யாமல், பிரபு தேவா மற்றொரு பெண்ணுடன் சுற்றுவதும், அவரை திருமணம் செய்யப் போவதாக வெளிப்படையாக பேட்டி அளிப்பதும் குற்றமாகும். ரமலத் புகார் அளிக்கும் பட்சத்தில், அதை அடிப்படையாக வைத்து பிரபுதேவா - நயன்தாரா மீது நடவடிக்கை பாயும்!' என்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக