பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமாகிவிட்டதாக செய்திகள் பரவியது. கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை இயற்கை எய்தி விட்டதாக செய்திகள் பரவின.
ஆனால் அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று அவரது மகன் வினோத் தெரிவித்தார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார் அவர்.
கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனை நிர்வாகத்தால் வீட்டுக்கு அனுப்பப்பட்டாராம் அவர். இந்த நிலையில் அவரை வீட்டுக்கு சென்று சந்தித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், மற்றும் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் இருவரும் கடைசி வரை முயற்சி செய்யலாமே. மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தியதுடன் அதற்கான செலவையும் ஏற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை. மரணத்தின் இறுதி வாசலில் நின்ற சந்திரபோஸ் பிழைத்துக் கொண்டார்.
கலைவாணிக்கும் கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கும் சந்திரபோசின் இசை ரசிகர்கள் சார்பில் ஆரோக்கியமான நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக