விளம்பரத்தில் நடிப்பதில்லை என்பது நயன்தாராவின் முடிவு. படங்களில் நடிக்காத இந்தச் சூழலிலும் அவர் தனது கொள்கையை விடுவதாக இல்லை.
அமிதாப் முதல் அமீர்கான் வரை விளம்பரத்தில் தான் வூடுகட்டி அடிக்கிறார்கள். அவர்களின் வருமான வரிக்கணக்கு எகிறுவதும் இதனால்தான்.
ஆனால், நான் வாங்காத ஒரு பொருளை பிறர் வாங்கும்படி நிர்ப்பந்திக்க மாட்டேன் என்று விளம்பரத்தில் நடிக்க கறாராக மறுப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி கறாராக மறுத்த அஜீத்தும்கூட ஒரு காபி விளம்பரத்தில் தலையை காட்டினார்.
இந்த விஷயத்தில் நயன்தாரா இன்னும் கெட்டி. தி.நகர். ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க ஆனானப்பட்ட அனுஷ்காவையே வளைத்துப் போட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்களிடம் அகப்படாத ஒருவர் உண்டென்றால் அது நயன்தாரா மட்டும்தானாம்.
தீபாவளி நெருங்கும் போது நயன்தாராவும் ஜவுளிக்கடைக்குள் மாட்டிக் கொணடால்...
ஆச்சரியப்படாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக