1930ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டின் அழகு நடிகையும், டைட்டானிக் திரைப்படத்தில் முக்கியத் துணை நடிகை பாத்திரமேற்று நடித்தவருமான க்ளோரியா ஸ்டூவர்ட் காலமானார். அவருக்கு வயது 100 என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் திரைப்படத்தில், அந்தக் கப்பல் நீரில் மூழ்கியபோது உயிர்பிழைத்த 101வயது மூதாட்டியின் இளவயது நாயகி கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட்டுடன் இணைந்து ரோஸ் கால்வெர்ட் என்ற கதாபாத்திரத்தில் க்ளோரியா ஸ்டூவர்ட் நடித்தார்.
கேட் வின்ஸ்லெட் பெயர் சிறந்த நாயகிக்கான ஆஸ்கார் விருதுக்கும் சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு ஸ்டூவர்டும் பரிந்துரை செய்யப்பட்டனர்.
ஆனால் ஆஸ்கார் அம்முறை எல்.ஏ.கான்ஃபிடென்ஷியல் படத்தில் நடித்த கிம் பேசிஞ்சர் என்பவருக்குச் சென்றது.
இவரது மறைவு குறித்து கூறிய டைட்டானிக் அழகு நாயகி கேட் வின்ஸ்லெட் "இவரது மறைவு என்னை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் இணைந்து நடித்ததில் நான் பெருமை அடைகிறேன்." என்றார்.
டைட்டானிக் இளம் நாயகனாக நடித்த லியானாரோடோ டி கேப்ரியோ, ஸ்டூவர்ட் படப்பிடிப்பின் உள்ளேயும் வெளியேயும் ஒரு சக்தியாக விளங்கினார் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் ஹாலிவுட் பொற்காலங்களின் மிகச்சிறந்த நடிகை என்றும் டி கேப்ரியோ புகழ்ந்துள்ளார்.
டைட்டானிக் திரைப்படம் உலக அளவில் சாதனையான 1.8பில்லியன் டாலர்கள் வசூல் படைத்தது. சமீபமாக கேமரூனின் "அவதார்" திரைப்படம் இந்த சாதனையை முறியடித்தது என்பது கூடுதல் தகவல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக