ஓயாத பயணத்தில் இருக்கும் எனக்கு இப்போ தேவை ஒரு professional packer…” – இதுதான் ஸ்ருதி ஹாஸனின் லேட்டஸ்ட் ட்வீட்!
எதற்காகவோ..?
அம்மணி சென்னை, மும்பை, துருக்கி, லண்டன், அடுத்து பாங்காக் என பறந்து கொண்டே இருக்கிறாராம். தனக்கு தேவையான பொருள்களை அடுக்கி பக்காவாக எடுத்துச் செல்லக் கூட நேரமில்லை என்பதால்தான், அதற்கு உதவ ஒரு தொழில்முறை பணியாளர் இருந்தால் தேவலை என்று ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் – தெலுங்கில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ஒன்றுக்காக சமீபத்தில் துருக்கி போன ஸ்ருதியை, அந்த நாட்டின் பல லொக்கேஷன்களில் வைத்து துள்ளாட்டம் போட வைத்து படமாக்கியுள்ளனர்.
“கிட்டத்தட்ட 24 மணி நேரமும் ஷூட்டிங் இருந்தது. நான் கொஞ்சம் கறுத்துப் போனேன் என்று கூடச் சொல்லலாம். ஆனால் சந்தோஷமாகத்தான் இருந்தது” என்கிறார் ஸ்ருதி.
அடுத்து 7-ம் அறிவுக்காக சூர்யாவுடன் ஆட்டம் போட பாங்காக், அங்கிருந்து சில தீவுகளுக்குப் பயணமாகிறாராம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக